Skip to main content

நிச்சயமற்ற போதை
இப்பொழுது போல நினைவிருக்கு, மச்சான் அவள தான் முடிப்பேன். அவ இல்லாத வாழ்க்கைய நினைச்சுக் கூட பார்க்க முடியல்ல, அவ தாண்டா எனக்கு எல்லாமே என்று நண்பனொருவன் சொல்லிச் சொல்லி அழுதது. இரண்டு வருடங்களாக இப்படியே உருகி உருகிக் காதலித்தவனுக்கு வேறு ஒரு பெண்கூட கல்யாணம் நிச்சயிக்கும் வரை தெரியாது இதே போல உருகி உருகி இன்னொரு பெண்னையும் காதலிச்சிருக்கான் என்று. வாழ்க்கை நிச்சயமற்ற போதை, இன்றைக்கோ நாளையோ அல்லது இருபது, நாட்பது வருஷம் கழிச்சோ என்றோ ஒரு நாள் முடிந்து போகக் கூடியது. ஆனால் துரோகங்கள் என்றைக்கும் தீர்ந்து, முடிந்து போவதில்லை. இனம் புரியா ரூபத்தில் நமக்குப் பின்னால் வரக்கூடியவர்களையும் சேர்த்தே ருசித்துக் கொள்ளும். 

ஜந்து வருடங்கள் இருக்கும் வெற்றி FM என்று நினைக்கிறேன். அதில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நேயர்கள் தங்களுடைய கவலைகள் எல்லாம் கொட்டித்தீர்த்துக் கொண்டிருந்தனர். ஒரு பெண் சொல்கிறாள் உண்மையில் சொல்வதற்குக் கூட அவளுக்கு வார்த்தை வரவில்லை. அவ்வளவும் அழுகையே! தன்னை நான்கு வருடங்களாக ஒருவன் காதலித்து விட்டு அவன் சொல்லாமலே வசதியான ஒரு பெண்ணை திருமணம் முடித்துவிட்டதாகவும். தனது வாழ்க்கையே இதனால் பரிபோய் விட்டதாகவும் அழுது அழுது பேசிய வார்த்தைகள் எனக்கு என்னமோ வேடிக்கையாக இருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே போல ஒரு சம்பவம் தெரிந்த ஒரு இடத்தில் நடந்தது. அந்த ஏமாற்றமும், வலியும், சேர்த்துக் கட்டிய வாழ்க்கை கனவுகள் சிதையும் அந்த செக்கன் கணக்குகள் இருக்கிறதே வெறுமனே விவரித்து விட முடியாது. எனது அனுபவத்தில் ஆண்களை விடப் பெண்கள் தான் அதிகமாக ஏமாற்றப்படுகிறார்கள். சினிமாத்தனமான கற்பனைகளில் வாழ்ந்து கொண்டு இது போல நானும் ஒரு பெண்னைக் காதலிக்க வேண்டும் என்று ஒருத்தியின் பின்னால் அழைவதும், பின்பு வாழ்க்கையின் கஷ்ட்ட நஷ்ட்டங்கள் புரியும் போது, பிரச்சினைகள் ஆரம்பிக்கும் போது எதிர்த்துப் போராடத் தைரியம் அற்று விட்டு விலகிவிடுவதும் பொதுவாக எங்கோ ஓர் இடத்தில் இப்போதும் நடந்து கொண்டுதானிருக்கிறது.காதலின் முதல் பாகங்கள் அடிக்கடி பேசுவதும், கொஞ்சுவதும், இருவரும் ஒருவருக்கொருவராக அன்பை மட்டுமே பகிர்ந்து, என்னமோ இந்த உலகத்தில் அவளும் என்னையும் விட பொருத்தமான ஜோடியே கிடையாது என்கிற லெவலில் முடிந்து விடும். கொஞ்சம் கொஞ்சமாகத் தான் இருவருக்குமான ஈகோ பிரச்சினைகள், விட்டுக் கொடுக்காமை, சண்டை, பொறாமை, மகிழ்ச்சியான தருணங்கள் என்று வாழ்க்கை மிக்சியின் அர்த்தங்கள் புரியத் துவங்கும். இது தான் உண்மையான வாழ்க்கையும், காதலும் கூட. ஓக்கே கண்மணி போல எப்போதும் இனித்துக் கொண்டே, கொஞ்சலுமாக ஜாலியாக இருக்க முடியாது. எதார்த்தம் என்கிற விடயத்தை கற்பனைகளால் நிரப்பி விட முடியாது. இந்த முதல் லெவல் தாண்டும் போது பலபேர் நினைத்துவிடுகிறார்கள் இது நமக்கு செட்டாகவே ஆகாது என்று பின்னே புரிந்துணர்வுடன் பிரிந்துவிடுகிறவர்கள் இருக்கிறார்கள் அது வேறு விடயம். இந்த சமயத்தில் தான் பல பேருக்கு வேறு பெண்கள் மீது ஈர்ப்பு வர ஆரம்பிக்குது அவனுக்குக் ஒரு கட்டம் வரை தெரியாது இப்பொழுது பேசிக் கொண்டிருக்கும் பெண் முதல் காதலில் முதல் பாகத்தில் இருக்கிறாள் என்று. அன்பாக கொஞ்சலாக மட்டுமே இருக்கும் பெண்ணாக யாராலும் இருக்க முடியாது. எல்லாம் கலந்ததே வாழ்க்கையும் வாழ்க்கைத் துணையும். காதல் வெறுமனே ஒரு ஜாலியான விஷயமில்லை பபா பபா என்று கொஞ்சிக் கொண்டேயிருக்க. வாழ்க்கையில் கடந்து போக வேண்டிய முக்கியமான பரீட்சை அது. நாம் செய்யும் பிழைகள் நமக்குப் பின்னால் வரக்கூடியவர்களையும் சேர்த்தே பாதிக்கும் என்பதையும் தாண்டி, நமது அடையாளம், கலாச்சாரம், மார்க்கம், தொழில் என்று பல விஷயங்கள் இருக்கிறது.

Comments

  1. இவ்வளவு சின்ன வயதில் வாழ்க்கையின் யதார்த்தம் பற்றி இவ்வளவு புரிந்துகொண்டிருக்கின்ற உன்னுடைய மனப்பக்குவத்தை எண்ணி வியந்து பாரட்டுகின்றேன், தம்பி ரம்ஸீன். ஜஸ்ட் கீப் இட் அப்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )

இளைஞனே வா!
உன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்

எதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.

ராமர்களுக்கு இன்று ரத்தமில்லை

வைகாசி வந்தால்
முப்பத்து மூன்று
முடிகிறது அவளுக்கு

அவள் திருமணத்தை நிச்சயிக்க நினைத்த
நாளில் மட்டும்
சொர்க்கத்திற்கு
விடுமுறை போலும்


தன் பெயரைக்-
கல்யாணப் பத்திரிகையிலேனும்
அச்சில் பார்க்க
அவள் ஆசைப்பட்டாள்
ஆனால்-
அச்சு எந்திரங்களைப் போலவே
மனித எந்திரங்களுக்கும்
மனசு இல்லை

பாவம்
தன்
கண்ணீர் முத்துக்களைக்
கோக்கத்தான்
நொந்து நொந்து அவள்
நூலாய் இளைத்தாளோ?

மாலையிட மாட்டார்கள்
ஆனால் எல்லா வாலிபரும்
அவளை
பெண்பார்ப்பது போல்தான்
பார்க்கிறார்கள்

முன்னொரு பிராயத்தில்…
பூக்களின்
அணிவகுப்பு மரியாதையைத்
தன் கூந்தலில் ஏற்றுக் கொண்டாள்

இன்றும்தான் சூடுகிறாள்
இது
தான் விதவையல்ல என்று
வெளிக்காட்ட மட்டுந்தான்

முன்பெல்லாம்
கனவுகளுக்காகவே
உறங்கினாள்
இப்போதோ
உறக்கமே
ஒரு கனவாகி விட்டது

முன்பெல்லாம்…
எப்போதாவது
சட்டென்று தோன்றி
மறையும் அந்த ஜன்னல் மின்னல்

இப்போது
அசையாமல் உட்கார்ந்து
ஜன்னலுக்குத்
தானும் ஒரு
கம்பியானாள்

சிரிப்பு என்பது
அவளுக்கு
இதழில் இல்லை
ஞாபகத்தில் இருக்கிறது

மன்மதன்
அவன்மீது எய்த
மலர்க்கணைகள்
இன்று
சுள்ளிகளாகிவிட்டன.

முன்பெல்லாம்
ஆண்டாள் படிக்கச் சொன்ன
அப்பா
இன்று
பட்டினத்தாரும்
பரவாயில்லை என்கிறார்

அவள்
பெருமூச்சு வெப்பத்தில்
ம…

உனக்காக வாழ்ந்து பார், உன்னோடு வாழ்ந்து பார்

வாழ்வு எனும் அரும்பெரும் பொக்கிஷம் வற்றாத ஊற்றுப்போல தன்னையும் சூழலையும் பசுமையாக வைத்திருக்கும். வாழ்வு என்றுமே வசந்த காலமாய் பூத்துக் குலுங்காது. கோடை காலமும் இலையுதிர் பருவமும் வாழ்வை கடந்தே செல்கின்றன. வாழ்வை உயிர்ப்பிக்கவும் ரசிக்கவும் பலர் மறந்தே போகின்றனர். நிறையப்பேர் வாழ்வின் யதார்த்தங்களை புரிவதற்கு தயாரில்லை. சகலதும் துக்கமெனக் கருதி கண்ணீரோடு கழிப்போரும் உள்ளனர். உச்ச இன்பங்களுக்கான திறந்த களம் தான் வாழ்வு என்று நினைப்போரும் உள்ளனர்.