Skip to main content

DOWNFALL - சர்வாதிகாரத்தின் சரிவுஎன்ன தான் தலைகீழாக நின்று ஆட்டம் போட்டாலும் நம் உடலைச் சுமந்திருக்கும் ஆத்மா ஒரு நாள், ஒரு சமயம், அளவிட முடியாத சில நொடிகளில் நம்மைவிட்டுப் போகத்தான் போகிறது. இரண்டாம் உலகப்போரில் அதிக உயிர்களை பலிகொண்டு, ஜரோப்பாவை ஆட்டம் காண 
வைத்ததில் மிகப்பெரிய பங்கு ஜேர்மனுடையது. முதலாம் உலகப் போரில் மிக மோசமான வீழ்ச்சி கண்ட ஜேர்மன்  ஹிட்லரின் வருகைக்குப் பின் அபாரமான வளர்ச்சி கண்டு இரண்டாம் உலகப் போரின் பயங்கரமான வேட்டைக்காரனாக உருவெடுத்து மாண்டு போனது. 

ஆரியர்கள் தான் உலகத்தை ஆளவும், தலைமை வகிக்கவும்
தகுதிபடைத்தவர்கள். ஏனைய மனிதப் பிறவியெல்லாம் அவர்களின் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும் என்பது தான் ஹிட்லரின் எண்ணம். அது போக சோவித், கம்யூனிசம் என்கிறதையெல்லாம் காட்டுத்தனமாக வெறுத்தார். பிரான்சை நாஜிகள் வெற்றி கொண்ட பிறகு பிரிட்டன் பக்கம் திரும்பினார், ஆனால் அது எதிர்பார்த்தபடி இலகுவான ஒன்றாக இருக்கவில்லை, படிப்படியாக தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்த சமயம், 1941 ஜுன் 22 ஹிட்லர் சோவியத் மீதும் போரைத் தொடக்கி வைத்தார். ஆரம்பகட்டங்களில் சோவியத் சரிந்து கொண்டு போனாலும் ஸ்டாலினுடனான மக்களின் ஆபார ஒத்துழைப்பால் சோவியத் முன்னேற ஆரம்பித்தது. சோவியத் - ஜேர்மன் யுத்தம் தான் இரண்டாம் உலகப் போரின் போக்கை காட்டமாக மாற்றியது எனலாம்.

படிப்படியாக தோல்வியைத் தழுவ ஆரம்பித்த ஹிட்லரின் கடைசிப் 12 நாட்கள் தான் Downfall. எப்படியும் தோல்வி தான் என்று தெரிந்தும் கூட பெர்லினை விட்டு வெளியேறாமல் பிடிவாதமாக இருந்தது போக, எதிரியிடம் சிக்கி மாண்டு போவதை விட  தற்கொலை செய்துகொல்வதே மேல் என நெருங்கியவர்களுக்கும் அதே உபன்யாசத்தை  சொல்லிக் கொடுத்தார். தனது கடைசி நேரம் வரையிலும் உத்தரவுகளை பிரப்பித்துக் கொண்டேயிருந்தாராம் ஹிட்லர். தோல்விச் செய்திகள் காதில் நுழையும் போதெல்லாம் வெறிபிடித்துக் கத்துவாராம். அதை அப்படியே அச்சொட்டாகப் பார்க்க முடிந்தது திரையில்.  ஹிட்லராக என்ன ஒரு வெறித்தனமான நடிப்பு Bruno Ganz.ஒரு சர்வாதிகார ஆட்சி சரியும் போது எவ்வளவு கொடூரமாகச் சரிந்து விழுகிறது என்பதை நாஜிகளின் பக்கமாக நின்று Downfall காட்சிப்படுத்தியிருக்கிறது. தான் எத்தனை பேரைக் கொன்றோம், எவ்வளவு அழிவுகள் ஏற்படுத்தினோம் என்றெல்லாம் இம்மியளவு கூட வருத்தப்படவில்லை ஹிட்லர் என்ட் நாஜிகள். தன் மரணத்தின் தருவாயில் கூட மக்கள் இறக்கிறார்கள் என்பதை மயிரளவு கூட கண்டுகொள்ளவில்லை, சாகட்டுமே என்கிற திமிரும், கர்வமும் தான் ஹிட்லரிடம் இருந்தது. 

இன்னும் குட்டிக் கிளைக்கதைகள் நிறைய இருக்கிறது படத்தில். ஒவ்வொன்றும் மரணத்தை எதிர் நோக்கியவர்களின் மனநிலையை அவர்கள் பக்கமாக நின்று பேசுகிறது. War படங்களில் ஒரு நல்ல  பதிவாகக் கூட இதைப் பார்க்கலாம். 

Comments

  1. பதிவு சிறியது எனினும் வீரியம் அதிகம். வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

The Wind will Carry Us

ஈரானியத் திரையுலகில் முக்கியமான ஒருவர் அப்பாஸ் கிராஸ்தமி. சாதாரண மனிதர்களுடைய  வாழ்வியல் அம்சங்களை எதார்த்தமாகத் திரையில்  கொண்டுவருவதே இவரது படைப்புக்களின் வெற்றி. the wind will carry us பெயரே கவிதையின் மயக்கத்தை தருகிறதில்லையா, Forough Farrokhzad என்கிற ஈரானிய பெண் கவிஞரின் கவிதையின் தலைப்பே படத்தின் பெயரும் கூட. வெனீஸ் திரைப்பட விருது உட்பட பல விருதுகளை வென்று குவித்தித்ததோடு மட்டுமன்றி ஒரு தலைசிறந்த படைப்பாக இன்றைக்கும் தனித்து நிற்கிறது. 
இறப்பின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும், வயதான மூதாட்டி ஒருத்தியின் மரணத்தை எதிர்பார்த்த படி, அதன் பின்னரான சடங்குகளை ஆவணப்படுத்துவதற்காக பத்திரிகையாளனான பெஸாட்டும் அவனது நண்பர்கள் இருவரும்,  பொரியாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு குர்திஷ் கிராமமொன்றிற்கு வருகை தருகின்றனர். அதன் பின்னரான கதையும், சம்பவங்களின் கோர்வைகளும் தொடர்ச்சியாக நம்மை கதைக்குள்ளே உள்வாங்கி ஒரு கதாப்பாத்திரம் போல உள்ளே நுழைத்துவிடும். 
தனியாக கிணறு தோண்டும் ஒரு வாழிபன், உணவுக்காக காசு வாங்காமல் பால் கறந்து கொடுக்கும் ஒரு பெண், தேநீர் கடை நடத்தும் ஒரு பெண், இடங்களைச்…

சிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )

இளைஞனே வா!
உன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்

எதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.

புன்னகை அற்புதமான கவனயீர்ப்புக் கருவி.

உங்களை இந்த சமூகம் விரும்ப வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? ‘ஆம்’ என்றால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நீங்கள் இந்த சமூகத்தை விரும்ப வேண்டும். கண்ணாடியில் சிரித்த முகம் காண விரும்பினால் கண்ணாடியோடு சிரித்தே ஆக வேண்டும். எனவே, சமூகம் ஒரு கண்ணாடி போன்றது.


உங்களுடைய கறுத்த, இறுகிய முகத்தைக் காண சமூகம் விரும்புவதில்லை. அதனால் சமூகத்துக்கு முன்னால் உங்கள் துக்கங்களை முகத்தில் தேக்கிவைத்துக் காட்டாதீர்கள்.