Skip to main content

ida - வலியின் அனுபவம்இரண்டாம் உலகப் போர் ஆரம்ப கட்டத்திலேயே யூத இன அழிப்பை ஹிட்லர் ஆரம்பித்துவிட்டிருந்தான். ஜந்திலிருந்து ஆறு மில்லியன் வரையான யூதர்கள் கூட்டம் கூட்டமாக கொத்துக் கொத்தாக கொன்று ஒழிக்கப்பட்டனர். 1939 இன் கணக்கெடுப்பின் படி இரண்டாம் உலகப்போரின் போது உலக சனத்தொகையில் மூன்று வீதத்தினர் சுமார், 60 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இத்தனை கொடூரமான போர், இன அழிப்பை ஏற்படுத்தியதில், சதாரண மக்களை கொலைகாரர்களாக மாற்றியதில் ஹிட்லரின் பங்கு அலாதியானது.  அதிகாரத்தை யார் தக்கவைத்துக் கொள்கிறார்கள், நீ பெரியவனா நான் பெரியவனா? யார் அதிகம் நிலப்பரப்புக்களைக் கைப்பற்றுகிறார்கள் என்கிற அரசுகளுக்கிடையிலான அதிகார வர்க்க மோதலில் பகடையாகப் பழியாகியது என்னமோ அப்பாவி மக்களே!

காலம் ,1962  போலாந்தில் கன்னியாஸ்திரியாக உறுதியெடுத்துக் கொள்ள சில நாட்களே உள்ள நிலையில் அதுவரை அநாதையாக இருந்த ida Lebenstein ற்கு அத்தை இருப்பதாகவும், அவளை கட்டாயம் சந்தித்துவிட்டு வரும்படியும் வேண்டப்படுகிறாள். பின்னர் அவள் ஒரு யூதப் பெண் என்றும், அவளது குடும்பம் இரண்டாம் உலகப் போரின் போது யூத இன ஒழிப்பில் கொல்லப்பட்டார்கள் எனவும் அத்ததை மூலமாக அறிந்துகொள்கிறாள். அவர்கள்  எப்படிக் கொல்லப்பட்டார்கள், கல்லறை எங்கே என்கிற கேள்விகளோடு அத்தையுடன் ஊர் நோக்கிப் பயணமாகிறாள் ida. படம் நெடுகிழும் போர் ஏற்படுத்திய வலிகள், இழப்புக்கள் கூடவே பயணிக்கிறது. சதாரண அயல்வீட்டானும் கொலைகாரனாகி மாறிப்போன சூட்சுமம், அதன் வேதனை, நெடுக தொடரும் துயரம், கருப்பு வெள்ளை படத்தினூடே மௌனமாகப் பதிவாகிறது.

ida வலியின் அனுபவம், அவளுடன் பயணிக்கும் ஒவ்வொரு நொடியும் நாமும் அதை அனுபவிக்கிறோம். இருள் சூழ்ந்த இறந்த காலம் காட்சிப்படுத்தாமலே அலுத்தமாக ஒவ்வொரு பார்வையாளனின் மனதிலும் பதிவாகிறது. ஒஸ்கார் உட்பட 14 விருதுகளை வாங்கிக் குவித்த இத்திரைப்படம் பின்னனி இசையே இல்லாமல்அசத்தலான ஒளிப்பதிவுடன் அலுப்பே இல்லாமல் ஒரு மணித்தியாளம் 20 நிமிடங்கள் ஓடி முடிகிறது. 

_ யூதர்களின் இழப்பு என்றைக்கும் ஈடு செய்ய முடியாதது.  அதே ஈடு செய்யமுடியா இழப்பையும், வலியையும் தான் சியோனிஸ்டுக்கள் (இஸ்ரேல்) 1948 ல் இருந்து இன்றுவரை பலஸ்தீனில் அரங்கேற்றி வருகிறது. என்னைப் பொருத்தவரை நாஜிக்களுக்கும் சியோனிஸ்டுக்களுக்கும் பாரிய வித்தியாசம் கிடையாது.

Comments

Post a Comment

Popular posts from this blog

The Wind will Carry Us

ஈரானியத் திரையுலகில் முக்கியமான ஒருவர் அப்பாஸ் கிராஸ்தமி. சாதாரண மனிதர்களுடைய  வாழ்வியல் அம்சங்களை எதார்த்தமாகத் திரையில்  கொண்டுவருவதே இவரது படைப்புக்களின் வெற்றி. the wind will carry us பெயரே கவிதையின் மயக்கத்தை தருகிறதில்லையா, Forough Farrokhzad என்கிற ஈரானிய பெண் கவிஞரின் கவிதையின் தலைப்பே படத்தின் பெயரும் கூட. வெனீஸ் திரைப்பட விருது உட்பட பல விருதுகளை வென்று குவித்தித்ததோடு மட்டுமன்றி ஒரு தலைசிறந்த படைப்பாக இன்றைக்கும் தனித்து நிற்கிறது. 
இறப்பின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும், வயதான மூதாட்டி ஒருத்தியின் மரணத்தை எதிர்பார்த்த படி, அதன் பின்னரான சடங்குகளை ஆவணப்படுத்துவதற்காக பத்திரிகையாளனான பெஸாட்டும் அவனது நண்பர்கள் இருவரும்,  பொரியாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு குர்திஷ் கிராமமொன்றிற்கு வருகை தருகின்றனர். அதன் பின்னரான கதையும், சம்பவங்களின் கோர்வைகளும் தொடர்ச்சியாக நம்மை கதைக்குள்ளே உள்வாங்கி ஒரு கதாப்பாத்திரம் போல உள்ளே நுழைத்துவிடும். 
தனியாக கிணறு தோண்டும் ஒரு வாழிபன், உணவுக்காக காசு வாங்காமல் பால் கறந்து கொடுக்கும் ஒரு பெண், தேநீர் கடை நடத்தும் ஒரு பெண், இடங்களைச்…

சிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )

இளைஞனே வா!
உன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்

எதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.

புன்னகை அற்புதமான கவனயீர்ப்புக் கருவி.

உங்களை இந்த சமூகம் விரும்ப வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? ‘ஆம்’ என்றால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நீங்கள் இந்த சமூகத்தை விரும்ப வேண்டும். கண்ணாடியில் சிரித்த முகம் காண விரும்பினால் கண்ணாடியோடு சிரித்தே ஆக வேண்டும். எனவே, சமூகம் ஒரு கண்ணாடி போன்றது.


உங்களுடைய கறுத்த, இறுகிய முகத்தைக் காண சமூகம் விரும்புவதில்லை. அதனால் சமூகத்துக்கு முன்னால் உங்கள் துக்கங்களை முகத்தில் தேக்கிவைத்துக் காட்டாதீர்கள்.