Skip to main content

முடிவின் தொடக்கம்
சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வந்திருக்கு நல்ல விஷயம், கூடவே எதிர்பார்த்த தரம் கிடைக்காமை, போதிய ரிசல்ட் இல்லாததால் தற்கொலை முயற்சி என்றும் செய்திகள் வந்துகொண்டே இருக்கு!
எந்த நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்குறீர்கள் மிஸ்டர் என்ட் மிசிஸ் தற்கொலையாளர்ளே! இந்த வீணாப்போன ஒரு ரிசல் போதாது என்பதால் வாழ்க்கையே முடிஞ்சி போச்சு என்பது யார் சொல்லித் தந்த பாடம். கேவலம் ஒரு ரிசல்ட் அளவு தானா வேர்த் இந்த வாழ்க்கை. ரிசல்ட்டே இல்லாமல் உலகத்தில் பல துறைகளில் சாதித்த நிறையப் பேர் இருக்கிறார்கள். சரி அதை விடுவோம்.

ஏண்டா வாழ்க்கையில் தோல்வியே வராதா?
பரீட்சையில் தோல்வியடைவது என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. இந்த முறை முடியாது என்றால் அடுத்த முறை முயற்சி செய், சரி அதுவும் வரவில்லை மீண்டும் ஒரு முயற்சி. அப்பவும் தோல்வியா வாழ்க்கை உன் கையிலில்லை என்பது தான் உண்மை அதைத் தேடி ஓடு. கையில் இருக்கும் 5 விரல்களுமே ஒன்று போல இல்லை, நமது திறமைகளை மட்டும் ஏன் ஒன்றாக இருக்கும் படி இன்னொருவனுடன் ஒப்பிட்டு நம்மைக் கணித்துக் கொள்கிறோம். நீ நீ என்பதாக மட்டுமே பார் இன்னொருவன் என்பது நீ இல்லை, அவன் உன் நிழலும் இல்லை.ஒரு நண்பி இருந்தால், உயர்தரத்தில் வர்த்தகம் படித்தாள். 3 ஏ சித்திகள். பல்கழைக்கலகத்துக்கு விண்ணப்பித்திருந்தால் Z Score 1,2 புள்ளிகள் தான் குறைவு பல்கழைக்கலகம் கிடைக்கவில்லை. வேறு ஒரு பாடசாலையில் தங்கித் தான் உயர்தரம் படித்தாள். இத்தனைக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பம். நல்ல செலவு வேறு. வாழ்க்கையே வெறுத்தது போல சாவதைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருப்பாள். இப்படியெல்லாம் முடிவு எடுக்காதே College இருக்கு தானே Apply செய்து பார்ப்போம் கண்டிப்பாகக் கிடைக்கும் என்று ஒரு மாதிரியாக பொறுமைப்படுத்தி வைத்தாகிவிட்டது. இடைப்பட்ட காலத்தில் நிறைய பரீட்சைகள் எல்லாம் எழுதினால், கடைசியில் எல்லாமே காசில் தான் வந்து நின்றது, College ம் கிடைக்கவில்லை. இன்னும் குடும்ப சிக்கல்கள் பிரச்சினைகள் இழப்பு என்று, இடிக்கு மேல் இடிதான். இருந்தாலும் இந்த முறை தளர்ந்து விடவில்லை. பொருமையாக இருந்தாள். கல்யாணம் முடிப்பது என்று முடிவாகிவிட்ட நேரத்தில் வேறு ஒரு College ல் இருந்து கடிதம் வந்தது. கல்யாணமாவது மயிராவது தூக்கிவீசிவிட்டு படிக்கப் போய்விட்டாள்.


எவ்வளவு முயற்சி, தோல்வி, பொறுமை. அது அவளுக்கான வெற்றி தான். அந்தச் சந்தர்ப்பத்தில் அவள் பக்கத்தில் இல்லை நான். அவள் குரலில் தெரிந்த அந்த நொடி மகிழ்ச்சி இருக்கிறதே அது தான் இவ்வளவு நாள் துன்பத்துக்கான ஒரு தேன் மகிழ்ச்சி. அதன் ருசி அலாதியானது. அதை ருசிக்க முயற்சி செய்.
இந்த வாழ்க்கை என்பதே சோதனை தானே! அதை ஒவ்வொரு கனமாக அனுபவி, இது நான் கற்றுக் கொண்ட பாடம். எவ்வளவு சம்பாதிக்கிறோம், சமூகத்தில் எந்தளவு உயரத்தில் இருக்கிறோம் என்பதல்ல, நீ எவ்வளவு திருப்பதியாக இருக்கிறாய், உன்னில் நீ எவ்வளவு திருப்தியடைகிறாய், அதற்காக எதனை இழக்கிறாய். தியாகம் செய்கிறாய் என்பதில் தான் உள்ளது. எந்தப் பிரச்சினை வந்தாலும் எல்லாம் கடந்து போகும். நேரம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை, எல்லாம் கடந்து போய்க்கொண்டே இருக்கும். உனக்கான நேரம் வரும்வரை பொறுமையாக உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மரணத்தைத் தேடி நாங்கள் போகத் தேவையில்லை இரும்புப் பெட்டிக்குள் அடைந்து கொண்டு மரணத்திடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தாலும் முடியாது அது வந்தே தீரும். அது வரும் போது வரட்டும். முயற்சிகளை மட்டும் தொடர்ந்து கொண்டே இரு, நானும் அப்படித்தான்.

Comments

Popular posts from this blog

The Wind will Carry Us

ஈரானியத் திரையுலகில் முக்கியமான ஒருவர் அப்பாஸ் கிராஸ்தமி. சாதாரண மனிதர்களுடைய  வாழ்வியல் அம்சங்களை எதார்த்தமாகத் திரையில்  கொண்டுவருவதே இவரது படைப்புக்களின் வெற்றி. the wind will carry us பெயரே கவிதையின் மயக்கத்தை தருகிறதில்லையா, Forough Farrokhzad என்கிற ஈரானிய பெண் கவிஞரின் கவிதையின் தலைப்பே படத்தின் பெயரும் கூட. வெனீஸ் திரைப்பட விருது உட்பட பல விருதுகளை வென்று குவித்தித்ததோடு மட்டுமன்றி ஒரு தலைசிறந்த படைப்பாக இன்றைக்கும் தனித்து நிற்கிறது. 
இறப்பின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும், வயதான மூதாட்டி ஒருத்தியின் மரணத்தை எதிர்பார்த்த படி, அதன் பின்னரான சடங்குகளை ஆவணப்படுத்துவதற்காக பத்திரிகையாளனான பெஸாட்டும் அவனது நண்பர்கள் இருவரும்,  பொரியாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு குர்திஷ் கிராமமொன்றிற்கு வருகை தருகின்றனர். அதன் பின்னரான கதையும், சம்பவங்களின் கோர்வைகளும் தொடர்ச்சியாக நம்மை கதைக்குள்ளே உள்வாங்கி ஒரு கதாப்பாத்திரம் போல உள்ளே நுழைத்துவிடும். 
தனியாக கிணறு தோண்டும் ஒரு வாழிபன், உணவுக்காக காசு வாங்காமல் பால் கறந்து கொடுக்கும் ஒரு பெண், தேநீர் கடை நடத்தும் ஒரு பெண், இடங்களைச்…

சிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )

இளைஞனே வா!
உன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்

எதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.

புன்னகை அற்புதமான கவனயீர்ப்புக் கருவி.

உங்களை இந்த சமூகம் விரும்ப வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? ‘ஆம்’ என்றால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நீங்கள் இந்த சமூகத்தை விரும்ப வேண்டும். கண்ணாடியில் சிரித்த முகம் காண விரும்பினால் கண்ணாடியோடு சிரித்தே ஆக வேண்டும். எனவே, சமூகம் ஒரு கண்ணாடி போன்றது.


உங்களுடைய கறுத்த, இறுகிய முகத்தைக் காண சமூகம் விரும்புவதில்லை. அதனால் சமூகத்துக்கு முன்னால் உங்கள் துக்கங்களை முகத்தில் தேக்கிவைத்துக் காட்டாதீர்கள்.