Skip to main content

பாத்துமாவின் ஆடு - பஷீரின் அற்புதம்.பஷீருடைய புத்தகங்களை வாசிக்கும் போது மனதுக்குள் ஒரு உற்சாகம் உயிர்பெற்று நடனம் ஆட ஆரம்பிக்கிறது. இது பஷீருடைய தனித்தன்மை, நாவல்களில் வரும் நகைச்சுவையும், எளிமையான எழுத்தும் கதை சொல்லியின் பின்னால் அதன் உலகத்துக்குள் கண்டவாறு அழைய வைக்கிறது. எனக்குப் பிடித்த எழுத்தார்களில் முதன்மையானவர் பஷீர். இதுவரை பால்காலசகி, சப்தங்கள், ஆனைவாரியும் பொன்குருசும் நாவல்களை வாசித்திருக்கிறேன். இணையத்தில் நிறைய சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். எல்லாம் தனித்துவமானவை ஒவ்வொன்றிலும் பஷீரின் முத்திரை தெரியும். கடைசியாக பாத்துமாவின் ஆடு வாசித்து முடித்தேன்.


பாத்துமாவின் ஆடு பஷீரின் அற்புதங்களில் ஒன்று தான். நாவலில் வரும் ஒவ்வொரு பாத்திரங்களையும் கட்டாயம் நம் வாழ்க்கையில் சந்தித்திருப்போம் அத்தனையும் எதார்த்தமே இந்தப் பார்த்திரங்கள் ஒவ்வொன்றும் பஷீரின் எழுத்தில் பகடியுடன் நடமாடும் போது நம்மைப் பைத்தியமாக பின் தொடர வைக்கிறது. நாவல் முடிந்ததும் அய்யோ அதுக்குள்ளே முடிஞ்சு போயிடுச்சா இப்பிடியே கொஞ்சம் தொடர்ந்தால் என்னவாம் என்கிற அவா (பேராசை) மட்டும் விட்டுப் போகவில்லை. 
முன்னுரையில் பஷீர் நிறைய கதைக்கிறார். அவருடைய புத்தகங்கள் பற்றிய விமர்சனங்கள், எதிர்ப்புக்கள்,  தனக்கு நிகழ்ந்த வைத்தியங்கள், பைத்தியங்களுடனான உரையாடல் என்று வரிசைக்கட்டி அடிக்கிறார்.

பாத்துமாவின் ஆடு கூட்டுக்குடும்பக் குட்டி நாவல். ஒவ்வொரு மனிதர்களும் சுயநலம் மிக்கவர்கள் தான் ஒன்றை தனக்குச் சார்பாக எப்படிப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதில் பலர் வித்தைக்காரர்கள். அந்த வித்தை பஷீரின் எழுத்தில் எப்படி வேலை செய்கிறது என்பதில் தான் அற்புதம் இருக்கிறது. 

அடுத்து உலகப் புகழ்பெற்ற மூக்கு, எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது இரண்டு புத்தகங்களையும் வாங்கிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறேன்.

Comments

Popular posts from this blog

The Wind will Carry Us

ஈரானியத் திரையுலகில் முக்கியமான ஒருவர் அப்பாஸ் கிராஸ்தமி. சாதாரண மனிதர்களுடைய  வாழ்வியல் அம்சங்களை எதார்த்தமாகத் திரையில்  கொண்டுவருவதே இவரது படைப்புக்களின் வெற்றி. the wind will carry us பெயரே கவிதையின் மயக்கத்தை தருகிறதில்லையா, Forough Farrokhzad என்கிற ஈரானிய பெண் கவிஞரின் கவிதையின் தலைப்பே படத்தின் பெயரும் கூட. வெனீஸ் திரைப்பட விருது உட்பட பல விருதுகளை வென்று குவித்தித்ததோடு மட்டுமன்றி ஒரு தலைசிறந்த படைப்பாக இன்றைக்கும் தனித்து நிற்கிறது. 
இறப்பின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும், வயதான மூதாட்டி ஒருத்தியின் மரணத்தை எதிர்பார்த்த படி, அதன் பின்னரான சடங்குகளை ஆவணப்படுத்துவதற்காக பத்திரிகையாளனான பெஸாட்டும் அவனது நண்பர்கள் இருவரும்,  பொரியாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு குர்திஷ் கிராமமொன்றிற்கு வருகை தருகின்றனர். அதன் பின்னரான கதையும், சம்பவங்களின் கோர்வைகளும் தொடர்ச்சியாக நம்மை கதைக்குள்ளே உள்வாங்கி ஒரு கதாப்பாத்திரம் போல உள்ளே நுழைத்துவிடும். 
தனியாக கிணறு தோண்டும் ஒரு வாழிபன், உணவுக்காக காசு வாங்காமல் பால் கறந்து கொடுக்கும் ஒரு பெண், தேநீர் கடை நடத்தும் ஒரு பெண், இடங்களைச்…

சிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )

இளைஞனே வா!
உன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்

எதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.

புன்னகை அற்புதமான கவனயீர்ப்புக் கருவி.

உங்களை இந்த சமூகம் விரும்ப வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? ‘ஆம்’ என்றால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நீங்கள் இந்த சமூகத்தை விரும்ப வேண்டும். கண்ணாடியில் சிரித்த முகம் காண விரும்பினால் கண்ணாடியோடு சிரித்தே ஆக வேண்டும். எனவே, சமூகம் ஒரு கண்ணாடி போன்றது.


உங்களுடைய கறுத்த, இறுகிய முகத்தைக் காண சமூகம் விரும்புவதில்லை. அதனால் சமூகத்துக்கு முன்னால் உங்கள் துக்கங்களை முகத்தில் தேக்கிவைத்துக் காட்டாதீர்கள்.