Skip to main content

காதலும்_சாபமும்_நல்ல முறையில் ஏதாச்சும் எழுதலாம் என்று தான் யோசித்துக் கொண்டிருந்தேன், குப்பைகளைக் கிண்டும் போது நாற்றம் தானே அடிக்கும் இனி எங்கே நல்ல முறையில் எழுதித் தொலைப்பது. தூஷன வார்த்தைகள் பேசுவது இழி மனநிலையின் வெளிப்பாடு என்று சொல்லுவார்கள். இந்த சீரழிவுச் சமூகத்தை ஞானக் கண்ணால் பார்த்து, ஆத்மா திருப்தி அடைவதில்லை, இழிவடைந்து தான் போகும். கடைசியில் தூசன வார்த்தைகள் தான் அதன் ஆதர்சனமாக இருக்கும்.


காதல் செய்கிறேன் பேர்வழி என்று சீரழிந்து போகும் பெண்களின் நிலை, அல்லது சிரழிக்கப்படும் பெண்களின் நிலைகளைப் பார்க்கும் போது என்ன மாதிரியான இழிவான மனிதர்களுக்கு மத்தியில் வாழ்ந்து தொலைத்துக் கொண்டிருக்கிறோம்  என்கிற வேதனையும் வெறுப்பும் கவலையாக மட்டுமே மிஞ்சிப் போய்விடுகிறது. ஜரோப்பியர்களின் கலாச்சாரத்தோடு நம்முடைய கலாச்சார, வாழ்வு முறைகளை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது, அங்கே பலருக்கு இன்னொருவருடன் உடல் ரீதியான தொடர்புகளை வைத்திருப்பது சாதாரண விடயம், ஆனால் நம்முடைய சமூகக் கலாச்சார சூழலைப் பொருத்தவரையிலும் கலவியை  கணவன், மனைவிக்கிடையிலான பரஸ்பர ஊடலாகப் பார்க்கிறோமே தவிர, நாய் போன்று கண்ட படி காண்பதன் பின்னாலெல்லாம் அழைந்து திரியும், தாகம் தீர்த்துக் கொள்ளும் கருவியாகப் பார்ப்பதில்லை. விடயம் காதல்,  அதாவது அன்பை காமத்தை நுகரும் ஒரு கருவியாகப் பாவித்து இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளும் ஒரு சீரழிவு நடைமுறையொன்று  நாம் தெரிந்தோ தெரியாமலோ நமக்கு மத்தியில் உருவாகிக் கொண்டிருக்கிறது, அல்லது அதனைக் கண்டும் காணாமல் நாம் நகர்ந்து போய்கொண்டிருக்கிறோம் என்பது தான்.  நுகர்வுக் கலாச்சாரத்தின் கையில் கைக் குழந்தையாய் இருந்து கொண்டு இதையெல்லாம் கண்டு கொள்ள யாருக்கு சுரணை, அறிவு இருக்கிறது. நவீன சிந்தனைகள் வளர்ச்சியடைந்திருக்கின்ற  இன்றைய சூழ்நிலையில் இதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் கடந்து போக வேண்டும் என்று சொல்லி மனசை தேத்திக் கொள்ள முடியாது, கண்டதும் காதல், எஸ்.எம்.எஸ் காதல், சோசியல் நெட்வேர்க் அலப்பரை என்று வெறும் கவர்ச்சிகளால் வந்து தொலைக்கிறது ஒருவர் மீதான ஈர்ப்பு. சம்பந்தப்பட்ட நபரின் பின்புலம் பற்றித் தெரியாமல் வெறுமனே உணர்ச்சிகளை மட்டும் முதன்மைப் படுத்தி பின்னே காதலும் வந்து தொலைக்கிறது.  தன்னை முழுவதுமாக இழந்ததன் பின்னே அய்யோ! மோசம் போய்விட்டோமே என்று மனதுக்குள்ளே அடித்து வெந்து செத்துப் போவது ஒருவகை என்றால், தற்கொலை என்று சிலருக்கு வேறு வடிவங்கள் தீர்வாக அமைகிறது. சம்பந்தப்பட்ட வீடியோ பதிவுகள், போட்டோப் பிரதிகள் நெட்டில் ஏற்றப்பட்டு கேள்விக் குறியாகி விடுகிறது வாழ்க்கை. நிறைய நவீனக் காதல் சீரியசான கட்டத்தை அடையும் போது உடலாலும், மனதாலும் எல்லாமே இழந்த நிலை தான்.  அந்தக் குற்ற உணர்வு சம்பந்தப் பட்டவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். இப்படியே பல பெண்களின் வாழ்க்கை பஸ்லிலும், பார்க்கிலும், ஹோட்டல் அறைகளோடும் நாசம் செய்யப்பட்டுக் காணாமல் போய்விடுகிறது.


காமம் தான் ஒரே நோக்காக இருந்தால் வேசிகளை நாடிச் செல்வது அவ்வளவு கஷ்டமான விடயமா என்ன? ஆனால் சில பரதேசிகளின் எண்ணங்கள் நாம் சிந்திக்க முடியாத அளவு வக்கிரம் படைத்ததாக இருக்கிறது. அவர்களுக்கு ஏதுவாக நவீனமும் கை கொடுத்துவிடுகிறது.  நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும் ஆனால் அமானிதமான விடங்களைப் பேச விரும்பவில்லை. சில பெண்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி, தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் இது போன்ற ஆண்கள் எண்ணிக்கையில் அதிகமே!. சரி அவன் நாசமாக போகட்டும், அவன் மீது காலா காலத்துக்கும் சாபம் உண்டாகட்டும்.

கண்டதும் காதல் வருமா என்ன? இதெல்லாம் ஒருவிதமான மாயை தான். முக்கியக் காரணம் இங்கே கவர்ச்சி மட்டும் தான். முட்டாள்த் தனமான காதலை மக்கள் மத்தியில் விதைத்ததில் தமிழ் சினிமாவின் பங்களிப்பு ஆழமானது. ஒரு வித அரசியல் தான் இதுவும், சிந்திக்கும் ஒரு தலைமுறையினரின் கனவில் காதல் கனவுகளை தூவி, பின் தனது பிரச்சினையையே உலகின் மாபெரும் பிரச்சினையாகக் கட்டமைத்துவிடும் விம்பத்தை உருவாக்கி சிந்தனை முடக்கம் செய்வது. எதார்த்தத்தில் இவைகளை அணுகும் போது நகைப்பாக இருந்தாலும் கசப்பான உண்மைகள் இவை. நமக்குத் தெரியாமலே ஆழமாக ஊடுருவி விடுகிறது. இதில் மிகுந்த பாதிப்படைவது பெண்கள் தான். இந்த தலைமுறையினருக்கு வாசிப்பின் மீதான ஆர்வம் இருக்கிறதா? என்று கேட்டால் அறவே கிடையாது. இருக்கும் கொஞ்ச நஞ்ச வாசிப்பும் ரமணிச்சந்திரனின் காதல் நாவல்களோடு நிறைவடைந்து விடுகிறது. மூன்றாம் தரமான குப்பை நாவல்களோடும், சினிமாக்களோடும் ரசனையும், சிந்தனையும் முடங்கிப் போய், சிந்தனை ஊணமுற்றுக் கிடக்கும். Awareness, அதாவது விழிப்புணர்வாக இதை எடுத்துக் கொண்டாலும் சரி, ஒரு பைத்தியத்தில் உளரலாகப் பார்த்தாலும் சரி. வாழ்க்கையையே கடைசியில் கேள்வியாக மாற்றிக் கொண்டு வெந்து கொண்டிருப்பவர்கள் அதிகம், அதிகமே!


Comments

Popular posts from this blog

The Wind will Carry Us

ஈரானியத் திரையுலகில் முக்கியமான ஒருவர் அப்பாஸ் கிராஸ்தமி. சாதாரண மனிதர்களுடைய  வாழ்வியல் அம்சங்களை எதார்த்தமாகத் திரையில்  கொண்டுவருவதே இவரது படைப்புக்களின் வெற்றி. the wind will carry us பெயரே கவிதையின் மயக்கத்தை தருகிறதில்லையா, Forough Farrokhzad என்கிற ஈரானிய பெண் கவிஞரின் கவிதையின் தலைப்பே படத்தின் பெயரும் கூட. வெனீஸ் திரைப்பட விருது உட்பட பல விருதுகளை வென்று குவித்தித்ததோடு மட்டுமன்றி ஒரு தலைசிறந்த படைப்பாக இன்றைக்கும் தனித்து நிற்கிறது. 
இறப்பின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும், வயதான மூதாட்டி ஒருத்தியின் மரணத்தை எதிர்பார்த்த படி, அதன் பின்னரான சடங்குகளை ஆவணப்படுத்துவதற்காக பத்திரிகையாளனான பெஸாட்டும் அவனது நண்பர்கள் இருவரும்,  பொரியாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு குர்திஷ் கிராமமொன்றிற்கு வருகை தருகின்றனர். அதன் பின்னரான கதையும், சம்பவங்களின் கோர்வைகளும் தொடர்ச்சியாக நம்மை கதைக்குள்ளே உள்வாங்கி ஒரு கதாப்பாத்திரம் போல உள்ளே நுழைத்துவிடும். 
தனியாக கிணறு தோண்டும் ஒரு வாழிபன், உணவுக்காக காசு வாங்காமல் பால் கறந்து கொடுக்கும் ஒரு பெண், தேநீர் கடை நடத்தும் ஒரு பெண், இடங்களைச்…

சிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )

இளைஞனே வா!
உன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்

எதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.

புன்னகை அற்புதமான கவனயீர்ப்புக் கருவி.

உங்களை இந்த சமூகம் விரும்ப வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? ‘ஆம்’ என்றால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நீங்கள் இந்த சமூகத்தை விரும்ப வேண்டும். கண்ணாடியில் சிரித்த முகம் காண விரும்பினால் கண்ணாடியோடு சிரித்தே ஆக வேண்டும். எனவே, சமூகம் ஒரு கண்ணாடி போன்றது.


உங்களுடைய கறுத்த, இறுகிய முகத்தைக் காண சமூகம் விரும்புவதில்லை. அதனால் சமூகத்துக்கு முன்னால் உங்கள் துக்கங்களை முகத்தில் தேக்கிவைத்துக் காட்டாதீர்கள்.