Skip to main content

Posts

Showing posts from 2015

நிச்சயமற்ற போதை

இப்பொழுது போல நினைவிருக்கு, மச்சான் அவள தான் முடிப்பேன். அவ இல்லாத வாழ்க்கைய நினைச்சுக் கூட பார்க்க முடியல்ல, அவ தாண்டா எனக்கு எல்லாமே என்று நண்பனொருவன் சொல்லிச் சொல்லி அழுதது. இரண்டு வருடங்களாக இப்படியே உருகி உருகிக் காதலித்தவனுக்கு வேறு ஒரு பெண்கூட கல்யாணம் நிச்சயிக்கும் வரை தெரியாது இதே போல உருகி உருகி இன்னொரு பெண்னையும் காதலிச்சிருக்கான் என்று. வாழ்க்கை நிச்சயமற்ற போதை, இன்றைக்கோ நாளையோ அல்லது இருபது, நாட்பது வருஷம் கழிச்சோ என்றோ ஒரு நாள் முடிந்து போகக் கூடியது. ஆனால் துரோகங்கள் என்றைக்கும் தீர்ந்து, முடிந்து போவதில்லை. இனம் புரியா ரூபத்தில் நமக்குப் பின்னால் வரக்கூடியவர்களையும் சேர்த்தே ருசித்துக் கொள்ளும். 
ஜந்து வருடங்கள் இருக்கும் வெற்றி FM என்று நினைக்கிறேன். அதில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நேயர்கள் தங்களுடைய கவலைகள் எல்லாம் கொட்டித்தீர்த்துக் கொண்டிருந்தனர். ஒரு பெண் சொல்கிறாள் உண்மையில் சொல்வதற்குக் கூட அவளுக்கு வார்த்தை வரவில்லை. அவ்வளவும் அழுகையே! தன்னை நான்கு வருடங்களாக ஒருவன் காதலித்து விட்டு அவன் சொல்லாமலே வசதியான ஒரு பெண்ணை திருமணம் முடித்துவிட்டதா…

DOWNFALL - சர்வாதிகாரத்தின் சரிவு

என்ன தான் தலைகீழாக நின்று ஆட்டம் போட்டாலும் நம் உடலைச் சுமந்திருக்கும் ஆத்மா ஒரு நாள், ஒரு சமயம், அளவிட முடியாத சில நொடிகளில் நம்மைவிட்டுப் போகத்தான் போகிறது. இரண்டாம் உலகப்போரில் அதிக உயிர்களை பலிகொண்டு, ஜரோப்பாவை ஆட்டம் காண  வைத்ததில் மிகப்பெரிய பங்கு ஜேர்மனுடையது. முதலாம் உலகப் போரில் மிக மோசமான வீழ்ச்சி கண்ட ஜேர்மன்  ஹிட்லரின் வருகைக்குப் பின் அபாரமான வளர்ச்சி கண்டு இரண்டாம் உலகப் போரின் பயங்கரமான வேட்டைக்காரனாக உருவெடுத்து மாண்டு போனது. 
ஆரியர்கள் தான் உலகத்தை ஆளவும், தலைமை வகிக்கவும் தகுதிபடைத்தவர்கள். ஏனைய மனிதப் பிறவியெல்லாம் அவர்களின் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும் என்பது தான் ஹிட்லரின் எண்ணம். அது போக சோவித், கம்யூனிசம் என்கிறதையெல்லாம் காட்டுத்தனமாக வெறுத்தார். பிரான்சை நாஜிகள் வெற்றி கொண்ட பிறகு பிரிட்டன் பக்கம் திரும்பினார், ஆனால் அது எதிர்பார்த்தபடி இலகுவான ஒன்றாக இருக்கவில்லை, படிப்படியாக தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்த சமயம், 1941 ஜுன் 22 ஹிட்லர் சோவியத் மீதும் போரைத் தொடக்கி வைத்தார். ஆரம்பகட்டங்களில் சோவியத் சரிந்து கொண்டு போனாலும் ஸ்டாலினுடனான மக்களின் ஆபார ஒத்துழைப…

ida - வலியின் அனுபவம்

இரண்டாம் உலகப் போர் ஆரம்ப கட்டத்திலேயே யூத இன அழிப்பை ஹிட்லர் ஆரம்பித்துவிட்டிருந்தான். ஜந்திலிருந்து ஆறு மில்லியன் வரையான யூதர்கள் கூட்டம் கூட்டமாக கொத்துக் கொத்தாக கொன்று ஒழிக்கப்பட்டனர். 1939 இன் கணக்கெடுப்பின் படி இரண்டாம் உலகப்போரின் போது உலக சனத்தொகையில் மூன்று வீதத்தினர் சுமார், 60 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இத்தனை கொடூரமான போர், இன அழிப்பை ஏற்படுத்தியதில், சதாரண மக்களை கொலைகாரர்களாக மாற்றியதில் ஹிட்லரின் பங்கு அலாதியானது.  அதிகாரத்தை யார் தக்கவைத்துக் கொள்கிறார்கள், நீ பெரியவனா நான் பெரியவனா? யார் அதிகம் நிலப்பரப்புக்களைக் கைப்பற்றுகிறார்கள் என்கிற அரசுகளுக்கிடையிலான அதிகார வர்க்க மோதலில் பகடையாகப் பழியாகியது என்னமோ அப்பாவி மக்களே!

முடிவின் தொடக்கம்

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வந்திருக்கு நல்ல விஷயம், கூடவே எதிர்பார்த்த தரம் கிடைக்காமை, போதிய ரிசல்ட் இல்லாததால் தற்கொலை முயற்சி என்றும் செய்திகள் வந்துகொண்டே இருக்கு! எந்த நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்குறீர்கள் மிஸ்டர் என்ட் மிசிஸ் தற்கொலையாளர்ளே! இந்த வீணாப்போன ஒரு ரிசல் போதாது என்பதால் வாழ்க்கையே முடிஞ்சி போச்சு என்பது யார் சொல்லித் தந்த பாடம். கேவலம் ஒரு ரிசல்ட் அளவு தானா வேர்த் இந்த வாழ்க்கை. ரிசல்ட்டே இல்லாமல் உலகத்தில் பல துறைகளில் சாதித்த நிறையப் பேர் இருக்கிறார்கள். சரி அதை விடுவோம்.
ஏண்டா வாழ்க்கையில் தோல்வியே வராதா?

பாத்துமாவின் ஆடு - பஷீரின் அற்புதம்.

பஷீருடைய புத்தகங்களை வாசிக்கும் போது மனதுக்குள் ஒரு உற்சாகம் உயிர்பெற்று நடனம் ஆட ஆரம்பிக்கிறது. இது பஷீருடைய தனித்தன்மை, நாவல்களில் வரும் நகைச்சுவையும், எளிமையான எழுத்தும் கதை சொல்லியின் பின்னால் அதன் உலகத்துக்குள் கண்டவாறு அழைய வைக்கிறது. எனக்குப் பிடித்த எழுத்தார்களில் முதன்மையானவர் பஷீர். இதுவரை பால்காலசகி, சப்தங்கள், ஆனைவாரியும் பொன்குருசும் நாவல்களை வாசித்திருக்கிறேன். இணையத்தில் நிறைய சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். எல்லாம் தனித்துவமானவை ஒவ்வொன்றிலும் பஷீரின் முத்திரை தெரியும். கடைசியாக பாத்துமாவின் ஆடு வாசித்து முடித்தேன்.

காதலும்_சாபமும்_

நல்ல முறையில் ஏதாச்சும் எழுதலாம் என்று தான் யோசித்துக் கொண்டிருந்தேன், குப்பைகளைக் கிண்டும் போது நாற்றம் தானே அடிக்கும் இனி எங்கே நல்ல முறையில் எழுதித் தொலைப்பது. தூஷன வார்த்தைகள் பேசுவது இழி மனநிலையின் வெளிப்பாடு என்று சொல்லுவார்கள். இந்த சீரழிவுச் சமூகத்தை ஞானக் கண்ணால் பார்த்து, ஆத்மா திருப்தி அடைவதில்லை, இழிவடைந்து தான் போகும். கடைசியில் தூசன வார்த்தைகள் தான் அதன் ஆதர்சனமாக இருக்கும்.