Skip to main content

பிடித்த பட்டியல்.அஸ்கர் பர்ஹாதியின் A Separation படம் பார்த்த பின்பு தான்அவருடைய ஏனைய படைப்புக்களைப் பார்க்க வேண்டும் என்கிற ஈர்ப்பு ஏற்பட்டது. 
அதன் பின்னர் Fireworks Wednesday, The Beautiful City, About Elly, The Past படங்களை எப்போதோ பதிவிறக்கம் செய்தும் பார்ப்பதற்கு சரியான நேரம் அமையாமையால் நீண்ட இடைவெளி எடுத்துவிட்டது .

நேற்று About Elly பார்க்கக் கிடைத்து. பர்ஹாதியின் தலைசிறந்த படைப்புக்களில் About Elly ம் உள்ளடங்கும்.சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்திற்கான விருது என பல தளங்களில் பல விருதுகளை வாங்கிக் குவித்தது About Elly. இது பர்ஹாதியின் நான்காவது படைப்பாகும்.

மத்திய தர குடும்பத்தைச் சேர்ந்த நண்பர்கள் விடுமுறையைக்கழிப்பதற்காக மூன்று நாள் பயணமொன்றை ஈரானின் தலைநகரான தெஹ்ரானிற்கு மோற்கொள்கின்றனர். கடலோரப்பகுதியில் தங்குவதாக முடிவாகிறது. 
பின்னர் எதுமாதிரியான ஒரு சூழ்நிலையில் அவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள், அதற்கிடையிலான அவர்களுடைய மனநிலை, தனிமனித ஆவேசம், பொய், உண்மைகள் என இவை இரண்டிற்கும் நடுவே வேகமான திரைக்கதை அமைத்துக் கதையை நகர்த்தியிருக்கிறார் பர்ஹாதி.
ஒரு நல்ல திரை அனுபவம் என்பது போக சொல்ல முடியாத ஒரு தாக்கத்தையும் , பாரத்தையும் About Elly ஏற்படுத்தியது என்பது தான் பொருத்தமாக இருக்கும். Elly என்பவள் யார்? என நாமும் வேகமாக அவளை பின்தொடர ஆரம்பிக்கிறோம். இவ்வொரு கதாப்பாத்திரமும் நாமாக மாறிப் போகிறோம். ஒவ்வொருவருடைய மன நிலையிலும் நின்று நியாயம் காண முற்படுகிறோம்.Elly பற்றி கடைசியில் தெரிந்து கொள்ளும் போது அமைதியாக நகர்ந்துவிடுகிறோம்.
...................................................................................................................................................................


Ernest என்கிற கரடி க்கும், Celestine என்கிற எலிக்கும் நட்பு உருவாகிவிடுகிறது. எலி, கரடியின் நட்பு எப்படியிருக்கும்.Ernest & Celestine எனிமேஷன் படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும். ஜாலியான ஒரு படம். பால்ய காலத்திற்கே சென்று வந்தது போல உணர்ந்தேன். 

சின்ன வயதில் முயல், சிங்கம் நட்பு அதனைப் பிரிக்க திட்டம் தீட்டும் தந்திர நரி என்று நிறைய கதைகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இடைப்பட்ட காலத்தில் கதை சொல்லும் வழமையே காணாமல் போய்விட்டது. இது மாதிரியான எனிமேஷன், ஜாலியான கதை என்று பார்க்கும் போது அந்த நாட்களை திரும்பக் கடந்து வருவது போல் உணர்வு தட்டுவது என்னமோ உண்மை தான்.

...................................................................................................................................................................இயக்குனர் Alejandro Gonzalez Inarritu வின் Amores perros, Biutiful படங்கள் தந்த அனுபவத்தை மறக்கவே முடியாது. கடைசியில் இன்று babel பார்த்துவிட்டேன். மீண்டும் ஒரு முறை பார்க்கலாம் என்று இருக்கேன். அற்புதமான திரையனுபவம் அது.

சாரு..
மொராக்கொ, ஜப்பான், மெஹிகோ, அமெரிக்கா ஆகிய நான்கு தேசங்களில் பல்வேறு பின்னணியில் வசிக்கும் வித்தியாசமான மனிதர்களை எப்படி ஒரே சம்பவம் பின்னிப் பிணைக்கிறது என்பதை இந்த நான்கு தேசங்களின் சமூக, கலாச்சார, அரசியல் பிரச்சினைகளோடு கலந்து ஒரு அரசியல் சினிமாவாக ஆக்கிக் கொடுத்திருக்கிறார் கொன்ஸாலஸ் இனாரித்து.

...................................................................................................................................................................


The Man from Nowhere படத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். அதன் இயக்குனர் Lee Jung beom இன் புதிய படைப்புத்தான் No Tears for the Dead. 
தேர்ந்த கொலைகாரன் துப்பாக்கிச் சண்டையின் போது தற்செயலாக அவனை அறியாமல் ஒரு பிழையைச் செய்து விடுகிறான். 
அவன் செய்த பிழையின் பின்னே அவன் நகர்த்தப்பட ஆரம்பிக்கிறான். மெல்லிய சொல்லப்படாத காதலுடனும், தோட்டாக்கள் துளைக்க இரத்தம் தெரிக்கும் எக்‌ஷன் காட்சிகளுடனும் விறுவிறுப்பாக கதை பயணிக்கிறது. கொரியன் விரும்பிகள் லிஸ்ட் ல் சேர்த்துக் கொள்ளவும். 

..................................................................................................................................................................


நாம் வசதியாக இருக்கிறோம். சமூகத்தில் நல்ல அந்தஸ்த்து, மரியாதை எல்லாம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதே நிலை தொடர வேண்டும் என்று தான் எல்லோரும் அசைப்படுவோம். நம்மைப் போலவே நமது குழந்தைகளும் படித்து உயர்நிலையில் இருக்கவேண்டும் என்பது நமது கனவாக இருக்கும். அவர்கள் தொழில் தொட்டு செய்யும் ஒவ்வொரு வேலையும், நண்பர்களும் ஒரு Branded போலவே தான் இருக்கும். கடைசியில் அவர்களுக்கான ஜோடிப் பொருத்தமும் அந்தஸ்த்து, தகைமை, இன்ன பிற இத்யாதிகள் எல்லாம் பார்த்துப் பொருத்தப்படும்.

மேலே சொன்ன வசதி ,மனோ நிலை கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவன் கொஞ்ச நாட்கள் இது எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டு 
சாதாரண ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் நிலைக்கு நகர்த்தப்படுகிறான். அப்படிப் பயணிக்கும் பைசலின் அனுபவங்கள் மாற்றங்கள் தான் உஸ்தாத் ஹோட்டல். பசி, சாப்பாடு, உறவு பற்றிய அழகான கவிதை உஸ்தாத் ஹோட்டல்.

Comments

Popular posts from this blog

சிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )

இளைஞனே வா!
உன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்

எதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.

The Salesman

Emad, Rana தம்பதியினர் ஏற்கனவே வசித்துக்கொண்டிருந்த Apartment இடியும் அபாயம் காரணமாக அதிலுள்ளவர்கள் வெளியேற்றப்பட விரைவாக வேறு இடம் தேட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். இருவரும் தயாரிப்பில் இருக்கும் Arthur Miller இன் The Death of Salesman நாடகத்தில் முக்கியக் காதாப்பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நிலையில் நண்பர் Babak அவர்களுக்கான ஒரு இடத்தை தேடிக் கொடுக்கிறான். புது இடத்துக்கு குடிபெயரும் அவர்களது வாழ்க்கையில் எதிர்பாராது ஏற்படும் பிரச்சினையால் இருவருக்கும் இடையில் ஏற்படும் மாற்றங்கள், அதற்கான தீர்வகள் தான் Salesman.
அஷ்கர் பர்ஹாதியினுடைய படங்களில் கதாப்பாத்திரம் பார்வையாளனுக்கு நெருக்கமானதாக இருக்கும். ஒரு பிரச்சினைக்குப் பின்னால் அன்றாட வாழ்க்கையைக் கடந்து செல்லும் குறிப்பிட்ட பாத்திரத்தின் உளவியலை கச்சிதமாக Visual ல் கொண்டுவந்திருப்பார். Fire wok Wednesday, About ally, The past, Separation  இப்போது The Salesman.

குறிப்பிட்ட பிரச்சினையை அன்றாட செயற்பாடுகளுக்கு மத்தியில் சாதாரண மனிதன் எப்படி எதிர்கொள்வான் அதன் எதிர்வினை எப்படியாக இருக்கும் என்பதெல்லாம் கச்சிதமாகக்…

ராமர்களுக்கு இன்று ரத்தமில்லை

வைகாசி வந்தால்
முப்பத்து மூன்று
முடிகிறது அவளுக்கு

அவள் திருமணத்தை நிச்சயிக்க நினைத்த
நாளில் மட்டும்
சொர்க்கத்திற்கு
விடுமுறை போலும்


தன் பெயரைக்-
கல்யாணப் பத்திரிகையிலேனும்
அச்சில் பார்க்க
அவள் ஆசைப்பட்டாள்
ஆனால்-
அச்சு எந்திரங்களைப் போலவே
மனித எந்திரங்களுக்கும்
மனசு இல்லை

பாவம்
தன்
கண்ணீர் முத்துக்களைக்
கோக்கத்தான்
நொந்து நொந்து அவள்
நூலாய் இளைத்தாளோ?

மாலையிட மாட்டார்கள்
ஆனால் எல்லா வாலிபரும்
அவளை
பெண்பார்ப்பது போல்தான்
பார்க்கிறார்கள்

முன்னொரு பிராயத்தில்…
பூக்களின்
அணிவகுப்பு மரியாதையைத்
தன் கூந்தலில் ஏற்றுக் கொண்டாள்

இன்றும்தான் சூடுகிறாள்
இது
தான் விதவையல்ல என்று
வெளிக்காட்ட மட்டுந்தான்

முன்பெல்லாம்
கனவுகளுக்காகவே
உறங்கினாள்
இப்போதோ
உறக்கமே
ஒரு கனவாகி விட்டது

முன்பெல்லாம்…
எப்போதாவது
சட்டென்று தோன்றி
மறையும் அந்த ஜன்னல் மின்னல்

இப்போது
அசையாமல் உட்கார்ந்து
ஜன்னலுக்குத்
தானும் ஒரு
கம்பியானாள்

சிரிப்பு என்பது
அவளுக்கு
இதழில் இல்லை
ஞாபகத்தில் இருக்கிறது

மன்மதன்
அவன்மீது எய்த
மலர்க்கணைகள்
இன்று
சுள்ளிகளாகிவிட்டன.

முன்பெல்லாம்
ஆண்டாள் படிக்கச் சொன்ன
அப்பா
இன்று
பட்டினத்தாரும்
பரவாயில்லை என்கிறார்

அவள்
பெருமூச்சு வெப்பத்தில்
ம…