Skip to main content

கடந்து போன வகுப்பரை –சொல்லப்படும் விடயத்தை உள்வாங்கிக் கொள்வது எல்லோரைப் பொருத்தவரையிலும் வித்தியாசப்படும். சிலர் இலகுவாக அதனை உள்வாங்கிக் கொள்வர். இன்னும் சிலரைப் பொறுத்தவரையில் அதற்கென சற்று நேரம் எடுக்கும். சொல்லப்பட்ட விடயத்தை மீண்டும் மீண்டும் திருப்பக் கேட்டு பல முறை கேட்டு கஷ்டப்பட்டு உள்வாங்கக்கூடிய ஒரு தொகையினர் இருக்கின்றனர். இவர்களை ஆசிரியர்கள் என்னமாதிரியான முறையில் வழிநடத்துகின்றனர் என்று பார்ப்பதற்குஇ ஒவ்வொருவரும் நான் காட்டும் வகுப்பரையைக் கவனியுங்கள்.


சரி இப்பொழுது வகுப்பரையில் ஒவ்வொருவரும் ஆங்கிலப் பாடத்திற்காக தங்களை ஆயத்தம் செய்து கொள்கின்றனர். ஆசிரியர் வருகிறார். பாடப்புத்தகத்தில் ஒரு பகுதியை வாசிக்கச் சொல்லிட்டு அவர் பாட்டில் அமர்ந்து கொண்டிருக்கிறார். சிறிது நேரத்தில் எழுந்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பத்தியை எழுந்து வாசிக்கச் சொல்கிறார். அதுவும் யாரால் சரியாகஇ உச்சரிப்பு வரும்படியாக வாசிக்க முடிகிறதோ அவர்கள் தான் எழுந்து அல்லது எழுப்பப்பட்டு வாசிக்கின்றனர். சரி வாசித்து முடித்த பாடத்தில் கேட்கப்பட்டுள்ள ஒவ்வொரு கேள்விற்கும் ஆசிரியர் வாசித்துக் காட்டி பாதி விடையைச் சொல்லியும் சொல்லாமல் சொல்லித்தருகிறார். முன்வரியில் வாரத்திற்கு மூன்று முறை ஆங்கில மேலதிக வகுப்புக்குச் செல்லும் ஆசிரியரின் செல்ல மாணவன்இ அந்தப் பாடத்தில் திறமையான மாணவன்இ ஆசிரியரின் அன்புக்கும் முன்னிலைக்கும் உரியவன் முந்திக் கொண்டு மிகுதி பதிலைச் சொல்லிவிடுகிறான். ஏனையர்கள் தலையாட்டிக் கொண்டிருக்கிறோம்.


மணி அடித்துவிட பாடம் முடிந்து ஆசிரியர் போய்விடுகிறார். மறவாமல் நாளை அந்தக் கேள்விகளை செய்துகொண்டு வரும்படி சொல்லிட்டுச் செல்கிறார். அடுத்தது தமிழ் பாடம். வந்ததும் நேற்றுத் தந்த வீட்டுப் பயிற்சியை எல்லாரும் செஞ்சாச்சா? செய்யாதவங்க செய்யுங்க. செஞ்சவங்க அடுத்த பாடத்த எடுத்து வாசிங்க. ஒரே தலவலியா இருக்கு. அப்படியே உட்கார்ந்து வேறு வகுப்பு மாணவர்களின் கொப்பி திருத்தலில் ஈடுபடுகிறார். பாடம் முடிய போய் விடுகிறார். அடுத்து கணிதம். அவர் பாட்டுல இறுக்குற பாடத்த சொல்லிதந்துட்டு கொஞ்சம் பயிற்சிகள செய்யச் சொல்லிட்டு பாடம் முடியவும் போயிடுறார். இவ்வளவு பாடத்தையும் அயராது படித்த பின்வரி மாணவன் ஒருத்தன் தூங்கிக் கொண்டிருக்கிறான். விஞ்ஞானப் பாட ஆசிரியர் ஒரு வித மூளைச் சூடுபிடித்தவர். உடனே கோபம் வந்து விடும். வந்தவர் இவன் தூங்கியதைக் கண்டதும் கோவம் தலைக்கு ஏற டஸ்டரை தூக்கி ஒரு வீசு. தலையெல்லாம் சுண்ணாம்பு படிய எழுந்து நிற்கிறான். வாயில் வந்த எல்லா வார்த்தைகளாலும் திட்டி அவன் அழுக்கைத் துடைப்பதாக நினைத்து அவனை வெளியே நிற்க வைக்கிறார்.

இப்படியாக இவ்வொரு பாடத்துடனும் போராடி கடைசியாக பாடசாலை விடும் நேரத்தில் சித்திரப் பாடம் வருகிறது. ஆசிரியர் வருகிறார். வரைதல் என்றாலே இருக்கும் எல்லா சோம்பலும் மறந்து போய் அவர் சொல்லும் தலைப்பின் கீழ் எல்லோரும் ஒவ்வொரு உலகை கற்பனையில் வாங்கிக் கிறுக்க ஆரம்பித்துவிடுவோம். இடையிடையே அசிரியர் ஒவ்வொருவரினுடைய இடத்திற்கும் போய் அவர்கள் வரைவதை அவதானித்து பிழைகளைச் சொல்லிக்கொடுக்கிறார். சில முக்கிய வரைதல் நுட்பங்களை மட்டும் எல்லோருக்கும் ஓரேயடியாக வரைந்துகாட்டிச் சொல்லிக் கொடுக்கிறார். பாடசாலை விடுகிறது.

இது என்னுடைய பாடசாலை நாட்களில் நான் அனுபவித்த ஒரு நாள். சுருக்கமாகக் காட்டியிருக்கிறேன். ஆசிரியர்களை குத்தம் சொல்வது என்னுடைய நோக்கமில்லை. இது மாதிரியாகத் தான் அநேகமான நாட்கள். சில பேருக்கு படிப்பே வெறுத்துப் போய்விடும். பாடசாலையை விட்டு வெளியாகி நல்ல தகைமை இல்லாமல் தொழில் செய்வதற்கு வழி இல்லாமல் திண்டாடும் போது நன்றாகப் படித்திருக்கலாம் என்று பலதடவைகள் யோசிக்க நேர்கிறது. ஆழமாக சிந்தித்து அந்த சூழலைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் அங்கே படிப்பதற்கான சூழ்நிலை மட்டமான நிலையிலேயே இருக்கும். எதைக் கொடுக்க வேண்டும் என்கிற யோசனையின்றி ரோபோ வடிவில் தங்களுடைய கடமையை முடித்துக் கொள்ளும் ஆசிரியர்கள்இ திறமையானவனுக்கு மட்டுமே அங்கேயும் முன்னுரிமை என்கிற அடிப்படையில் அமைந்துவிடுகிறது. புரிந்து கொள்ளும் தன்மை குன்றியவனுக்கு மார்தட்டிச் சொல்லிக்கொடுக்கும் முறைமை எப்போதாவது ஒருவாட்டி யாராலேயோ தான் நடைபெறும். உதாரணத்திற்கு சித்திரப் பாட ஆசிரியர் போல. இது தான் அந்த நாட்களின் சாரம்சம். அதுவும் இல்லையா படிக்க வேண்டும் என்கிற ஊக்கம் குடும்ப அடிப்படையிலிருந்து சரி வரவேண்டும். இது எதுவுமே இல்லாமல் போகும் போது பாதை மாறுவதையும்இ இழப்பையும் வருங்காலங்களில் எண்ணி நொந்து போகும் துர்ப்பாக்கியம் படிப்பில் சற்றே ஆர்வம் குன்றியவர்களுக்கு ஏற்படுவதுண்டு.இந்த பிரச்சினைக்கு வடிகாலாக டியூஷன் இருக்கிறது? ஆனால்இ இந்த டியூஷனின் நிலைமை என்ன? பாடசாலையில் அந்தப் பாடத்திற்குறிய ஆசிரியரிடம்தான் டியூஷன் செல்ல வேண்டும். மாற்றமாக வேறு ஒருவரிடம் டியூஷன் செல்லும் மாணவனை ஏதோ ஒரு ஜந்துவைப் பார்ப்பது போன்று பார்ப்பார்கள். ஏதோ கதைக்காகச் சொல்லவில்லை. அனுபவித்த சந்தர்ப்பங்கள் உண்டு. அது நான் உயர்தரம் படித்துக் கொண்டிருந்த சமயம். பொருளியல் பாடம் நடக்காது. அவர் டியூஷனில் சொல்லித்தந்ததை மீட்டுக்கொள்ளச் சொல்லுவார். அப்போ டியூஷன் போகாத எங்களுடைய நிலைமை? அந்த நோட்ஸை பார்த்து எழுதுவது. கடைசியாக ஒரு வழியாகத் திண்டாடி அவருடைய டியூஷன் போக வேண்டிய நிலை ஏற்பட்டது வேறு கதை. கணிதம்இ விஞ்ஞானப் பாடங்கள் தரம் 11 வரும் போது சீசன் வியாபாரம் போல அமோகமாக இருக்கும். அந்தந்த ஆசிரியர்களுடைய டியூஷன் போகவில்லையென்றால் பாடவேலையின் போது கழுவி ஊற்றப்படுவது நடக்கும். ஆரம்பத்தில் சொன்னது போன்று ஒருவரை குத்தம் காண்பது நோக்கம் அல்ல. எது மாதிரியான ஒரு சீரழிவுத் தன்மையை தகைமைகளிடம் நாம் அவதானிக்கிறோம் என்பதைச் சொல்கிறேன். இதற்கிடையே நல்ல ஆசிரியர்களும் உண்டு. பொதுவாக அவதானிக்கும் போது எல்லோருக்கும் அப்படி வாய்ப்பதில்லையே!


சொல்லவருவது ஒரு சின்ன விடயம் தான்இ தகப்பனாக இருந்தால்இ சகோதரனாக இருந்தால்இ உறவாக இருந்தால் கல்வியின் அவசியத்தை பாடசாலை நாட்களில் ஒவ்வொருவருக்கும் உணர்த்துங்கள். உதவி செய்யுங்கள். ஒவ்வொரு குழந்தையின் வகுப்பறையும் என்ன மாதிரியான சூழ்நிலையால் பின்னப்பட்டிருக்கிறது என ஒவ்வொரு பெற்றோரும் கவனித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக ஆசிரியர்கள் பற்றிய மாணவர்களுடைய புரிதலை அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளுங்கள். ஆர்வம் குன்றியவர்களை கொஞ்சம் அக்கரையாகக் கவனித்துச் சொல்லிக் கொடுங்கள். இது அவ்வளவு பெரிய விடயமில்லை. சாதாரண விடயம் பலருக்கு அக்கறையில்லை. நேரம் இல்லை என்பது தான் அவர்களது வாதம். ஆசியரைக் கேட்டால் தனித்தனியாக ஒவ்வொருவரையும் கருத்தில் கொள்ள முடியாது என்பதை நியாயமாகச் சொல்லுவார்கள். கடைசியாக அந்தரத்தில் தொங்கும் ஒரு நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். புரியாதவனுக்கு வாழ்க்கையே புதிராய்ப் போய்விடுகிறது.  

News View ல் வெளியான கட்டுரை.  

Comments

Popular posts from this blog

The Wind will Carry Us

ஈரானியத் திரையுலகில் முக்கியமான ஒருவர் அப்பாஸ் கிராஸ்தமி. சாதாரண மனிதர்களுடைய  வாழ்வியல் அம்சங்களை எதார்த்தமாகத் திரையில்  கொண்டுவருவதே இவரது படைப்புக்களின் வெற்றி. the wind will carry us பெயரே கவிதையின் மயக்கத்தை தருகிறதில்லையா, Forough Farrokhzad என்கிற ஈரானிய பெண் கவிஞரின் கவிதையின் தலைப்பே படத்தின் பெயரும் கூட. வெனீஸ் திரைப்பட விருது உட்பட பல விருதுகளை வென்று குவித்தித்ததோடு மட்டுமன்றி ஒரு தலைசிறந்த படைப்பாக இன்றைக்கும் தனித்து நிற்கிறது. 
இறப்பின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும், வயதான மூதாட்டி ஒருத்தியின் மரணத்தை எதிர்பார்த்த படி, அதன் பின்னரான சடங்குகளை ஆவணப்படுத்துவதற்காக பத்திரிகையாளனான பெஸாட்டும் அவனது நண்பர்கள் இருவரும்,  பொரியாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு குர்திஷ் கிராமமொன்றிற்கு வருகை தருகின்றனர். அதன் பின்னரான கதையும், சம்பவங்களின் கோர்வைகளும் தொடர்ச்சியாக நம்மை கதைக்குள்ளே உள்வாங்கி ஒரு கதாப்பாத்திரம் போல உள்ளே நுழைத்துவிடும். 
தனியாக கிணறு தோண்டும் ஒரு வாழிபன், உணவுக்காக காசு வாங்காமல் பால் கறந்து கொடுக்கும் ஒரு பெண், தேநீர் கடை நடத்தும் ஒரு பெண், இடங்களைச்…

சிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )

இளைஞனே வா!
உன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்

எதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.

புன்னகை அற்புதமான கவனயீர்ப்புக் கருவி.

உங்களை இந்த சமூகம் விரும்ப வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? ‘ஆம்’ என்றால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நீங்கள் இந்த சமூகத்தை விரும்ப வேண்டும். கண்ணாடியில் சிரித்த முகம் காண விரும்பினால் கண்ணாடியோடு சிரித்தே ஆக வேண்டும். எனவே, சமூகம் ஒரு கண்ணாடி போன்றது.


உங்களுடைய கறுத்த, இறுகிய முகத்தைக் காண சமூகம் விரும்புவதில்லை. அதனால் சமூகத்துக்கு முன்னால் உங்கள் துக்கங்களை முகத்தில் தேக்கிவைத்துக் காட்டாதீர்கள்.