Skip to main content

A Dirty Carnivalநான் பாடசாலையில் தரம் 11ல் படித்துக் கொண்டிருந்த போது. அப்போதெல்லாம் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு கேங். அடிதடியெல்லாம் சதாரணமாக வாரத்துக்கு 2 முறை நடக்கும். சில போது சண்டை உச்சத்துக்கே போய் கத்தி உழி எல்லாம் எடுத்துவந்த சந்தர்ப்பங்கள் உண்டு. ஒரு முறை இருவருக்குள் நடந்த சண்டையில் ஒருத்தனுக்கு பலத்த அடி. மறு நாள் அவன் ஸ்கூல் பக்கமே வரவில்லை. ஸ்கூல் விட்டு வெளிய வந்ததும் தான் தெரிஞ்சது ஒரு 6 பேர் கூட வந்திருக்கான். நேத்து வாங்கினத இவனுக்கு திருப்பிக் கொடுக்கணும். இப்போ கண்பார்மா சண்டையின்டு தெரியும் இவனும். யோசிக்கவேயில்லை. பொன்னேன் கூட்டத்தோடய வந்திருக்க, பேக்கை கலட்டி வீசிவிட்டு ஓடி வந்தவனுக்கு பாய்ந்து ஒரு உதை. கீழே விழுந்தவன் கைகளில் கல்லை எடுத்து சைடில் வந்த இருவருக்கும் பொத்தி ரெண்டு அடி; வந்த ஆறு போருக்கும் பலத்த அடி. தனியாளாக அவனும் அடி வாங்வே செய்தான். திருப்பி அடிக்கும் அந்த தைரியம் இருக்கே, அந்த ஆக்ரோஷமும் வெறித்தனமும் இன்னும் அப்படியே நினைவுகளில் இருக்கு. என் கண் முன் நடந்தது மறக்க முடியுமா என்ன. 
கட்.

ரியலிஸ்ட்டிக் அதாவது எதார்த்தமான எக்ஷன் சீக்வன்ஸ் கொண்ட neo-noir கேங்ஸ்டர் படம் என்றால் எப்படியிருக்கும். கட்டாயம் கொரியன் பக்கம் தான் போக வேண்டும்.

தான் செய்யும் தொழிலில் அவனுக்கு அதிகமான விறுப்பம் இல்லை. எல்லா இடங்களிலும் அவமானம் தான். வறுமை அவனை ஒரு தாதா கும்பலுக்குத் தலைவனாக மாற்றி விடுகிறது. அவனுக்கு மேலே இன்னொருவன். அவனுக்கு மேலே இன்னொருவன். வரும் உத்தரவின் படி எல்லாம் செய்து முடிக்க வேண்டும். இதற்கிடையே கேங்ஸ்டரின் வாழ்க்கையை தெரிந்து ரியலிஸ்டிக்காக ஒரு படம் பண்ண வேண்டும் என்று அவனுடைய நண்பன் ஒருவன் வந்து சேர்கிறான். ஒரு மென்மையான காதல், அடிதடி, வருமையை வெல்ல வேண்டிய சூழ்நிலை, முன்னுக்கு வர வேண்டும், துரோகம், கொலை என்று படம் எல்லா சந்து பொந்துகளிலும் புகுந்து வேகமாக நகர்ந்து விடுகிறது.
கட்.

சரி ஒரு விடயம் பேசுவோம்.
குடும்பம் என்பதைப்பற்றி நீங்கள் என்ன அர்த்தத்தைப் புரிந்து வைத்திருக்கிறீர்கள்?
குடும்பம் என்றால் நாங்கள்… 
சரி கேள்..
குடும்பம் நாம், நமது வாய், அது ஒன்றாக ஒரே மேசையில் அமர்ந்து சாப்பிடும்.
ஒரு வாய், இரண்டு வாய், மூன்று, நான்கு, ஜந்து, ஆறு, நான் உட்பட ஏழு
நாங்கள் எல்லோரும் ஒரு வாய்

தனியாக சாப்பிட நினைப்பவன் யார்?
அவன் குடும்பத்தவனாக இருக்க முடியாது. அவன் குடும்பத்தில் இல்லை.
அந்நியமானவன்.

இது டர்டி கார்னிவல் படத்தில் வரும் வசனம். உண்மை தான். ஒரு கட்டத்தில் குடும்பமாக இருக்கும் எல்லோரும் ஒன்றாக சாப்பிடுகின்றனர். அங்கே பாசத்திற்குப் பஞ்சமே இருக்காது. தனித்தனியாக சாப்பிட்டால் அதிகமாக சாப்பிட்டு விடலாமென்று ஒரு பேரவா வாயில் தொற்றிக் கொள்கிறது.
அது ஒவ்வொருவராகக் கடந்து போகும் போது. குடும்பம் சிதைந்து விடுகறது. 
கட்.

ஆரியா, பரத் நடித்த ஒரு கேங்ஸ்டர் படம் இருக்கிறது. பட்டியல், சூழ்ந்திருப்பவர்கள் செய்யும் துரோகம், அடிதடி, காதல் என்று பல தளங்களில் பயணிக்கும். டர்ட்டி கார்னிவல் பார்க்கும் போது, பட்டியல், ஜிகிர்தண்டா படம் நினைவில் வருவதை தடுக்க முடியவில்லை. எங்கோ ஏதோ ஒரு விடயம் முட்டுவதாகவே தோன்றுகிறது. இதே பின்னனியில் தமிழிலும் செச்சப் படங்கள் வந்திருந்தாலும் வித்தியாசப்படுத்துவது எது.

பொதுவாக தமிழ் படங்களுக்கும் இந்தப் படங்களுக்கும் உள்ளபெரிய வித்தியாசம்; எடிடிங், கதை நீட்டாக நகரக்கூடிய தரமான எடிட்டிங் தான் ஒரு படத்தை தூக்கி நறுத்தும். அதிகமான தமிழ் படங்களில் இந்த எடிட்டிங் விடயத்தில் பல்ட்டி அடித்து விடுவார்கள். சம்பந்தமில்லாத காட்சிகள் இடைக்கிடையே வந்து அறுவை போட்டுக் கொண்டிருக்கும் போது பின்னனி இசை இங்கொன்றும் அங்கொன்றுமாக மாறி மாறி கொத்துப் பரோட்டா போட்டுக் கொண்டிருக்கும். சீர் இல்லாத தன்மை வரிசையாக காணப்படும். ஆனால் இது மாதிரியான கொரியன் படங்களை எடுத்துக் கொண்டால். எல்லாம் ஒரு அலவாக இருக்கும். அது தேவையான இடங்கள் மிக்ஸ் செய்யப்பட்டு பார்வையாளனின் கவனத்தை திசை திருப்பாமல் கதையோடு அவனுடைய கவனத்தை ஈர்த்து நகர்ந்து கொண்டேயிருக்கும். அடுத்து இது போல நல்ல ஆக்ஷன் காட்சிகள் காணவே முடியாது. ஹீரோயிச வியாதி வந்து தொற்றிக் கொள்ளும். அதற்குள்ளாக ஸ்லோ மோஷன் வைரஸ் பல காட்சிகளை ஆக்கிரமித்து படையெடுப்பே நடத்தி விடும். கட்

பார்த்து பழகிய கதைக்களம் என்றாலும் ஒரு புதுப்பிப்பு, அதற்கென ஒரு ஸ்டைல் இருக்கிறது. அதற்காகவே படத்தை திரும்பத் திரும்பப் பார்க்கலாம். கட்.

  1. A Dirty Carnival
    2006 Film
  2. 7.5/10-IMDb
  3. Initial releaseJune 15, 2006 (South Korea)
  4. Running time141 minutes
  5. Initial DVD releaseMay 20, 2008

Comments

Popular posts from this blog

சிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )

இளைஞனே வா!
உன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்

எதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.

The Salesman

Emad, Rana தம்பதியினர் ஏற்கனவே வசித்துக்கொண்டிருந்த Apartment இடியும் அபாயம் காரணமாக அதிலுள்ளவர்கள் வெளியேற்றப்பட விரைவாக வேறு இடம் தேட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். இருவரும் தயாரிப்பில் இருக்கும் Arthur Miller இன் The Death of Salesman நாடகத்தில் முக்கியக் காதாப்பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நிலையில் நண்பர் Babak அவர்களுக்கான ஒரு இடத்தை தேடிக் கொடுக்கிறான். புது இடத்துக்கு குடிபெயரும் அவர்களது வாழ்க்கையில் எதிர்பாராது ஏற்படும் பிரச்சினையால் இருவருக்கும் இடையில் ஏற்படும் மாற்றங்கள், அதற்கான தீர்வகள் தான் Salesman.
அஷ்கர் பர்ஹாதியினுடைய படங்களில் கதாப்பாத்திரம் பார்வையாளனுக்கு நெருக்கமானதாக இருக்கும். ஒரு பிரச்சினைக்குப் பின்னால் அன்றாட வாழ்க்கையைக் கடந்து செல்லும் குறிப்பிட்ட பாத்திரத்தின் உளவியலை கச்சிதமாக Visual ல் கொண்டுவந்திருப்பார். Fire wok Wednesday, About ally, The past, Separation  இப்போது The Salesman.

குறிப்பிட்ட பிரச்சினையை அன்றாட செயற்பாடுகளுக்கு மத்தியில் சாதாரண மனிதன் எப்படி எதிர்கொள்வான் அதன் எதிர்வினை எப்படியாக இருக்கும் என்பதெல்லாம் கச்சிதமாகக்…

ராமர்களுக்கு இன்று ரத்தமில்லை

வைகாசி வந்தால்
முப்பத்து மூன்று
முடிகிறது அவளுக்கு

அவள் திருமணத்தை நிச்சயிக்க நினைத்த
நாளில் மட்டும்
சொர்க்கத்திற்கு
விடுமுறை போலும்


தன் பெயரைக்-
கல்யாணப் பத்திரிகையிலேனும்
அச்சில் பார்க்க
அவள் ஆசைப்பட்டாள்
ஆனால்-
அச்சு எந்திரங்களைப் போலவே
மனித எந்திரங்களுக்கும்
மனசு இல்லை

பாவம்
தன்
கண்ணீர் முத்துக்களைக்
கோக்கத்தான்
நொந்து நொந்து அவள்
நூலாய் இளைத்தாளோ?

மாலையிட மாட்டார்கள்
ஆனால் எல்லா வாலிபரும்
அவளை
பெண்பார்ப்பது போல்தான்
பார்க்கிறார்கள்

முன்னொரு பிராயத்தில்…
பூக்களின்
அணிவகுப்பு மரியாதையைத்
தன் கூந்தலில் ஏற்றுக் கொண்டாள்

இன்றும்தான் சூடுகிறாள்
இது
தான் விதவையல்ல என்று
வெளிக்காட்ட மட்டுந்தான்

முன்பெல்லாம்
கனவுகளுக்காகவே
உறங்கினாள்
இப்போதோ
உறக்கமே
ஒரு கனவாகி விட்டது

முன்பெல்லாம்…
எப்போதாவது
சட்டென்று தோன்றி
மறையும் அந்த ஜன்னல் மின்னல்

இப்போது
அசையாமல் உட்கார்ந்து
ஜன்னலுக்குத்
தானும் ஒரு
கம்பியானாள்

சிரிப்பு என்பது
அவளுக்கு
இதழில் இல்லை
ஞாபகத்தில் இருக்கிறது

மன்மதன்
அவன்மீது எய்த
மலர்க்கணைகள்
இன்று
சுள்ளிகளாகிவிட்டன.

முன்பெல்லாம்
ஆண்டாள் படிக்கச் சொன்ன
அப்பா
இன்று
பட்டினத்தாரும்
பரவாயில்லை என்கிறார்

அவள்
பெருமூச்சு வெப்பத்தில்
ம…