Skip to main content

மெட்ராஸ் - பகிர்வு“மூஞ்சப் பார்த்தாலே தெரியுது ரெபிட் பிடிக்குற டாக்குன்னு” இது மெட்ராஸ் படத்தில் அரசியல்வாதி மாரியின் போஸ்டரைப் பார்த்து ஜானி ஒரு கட்டத்தில் பேசும் வசனம். கேட்பதற்குச் சாதரணமாக இருந்தாலும் எவ்வளவு அர்த்தங்கள் பொதிந்த கிடக்கிறது. அது போலத்தான் மெட்ராஸ் படத்தினுடைய கதையும். 

சில காட்சிகள் பார்ப்பதற்குச் சாதரணமாக ஒருவரைக் கடந்து போகும் போது பேசிச் செல்வது போல இருந்தாலும் வட சென்னை மக்களுடைய அடையாளங்களை, வாழ்வியலை கண்முன்னே நிறுத்துகிறது என்கிறதாலே  மெட்ராஸ் வித்தியாசமானதாகத் தெரிகிறது. 

ஒன்றாக இயங்கிவந்த அரசியல்கட்சி இரண்டாகப் பிரிவதால் ஒரு ஊரைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் தங்களுக்குள் முரண்பட்டு எதிராளியாக மாற கட்சிப் போஸ்டர் ஒட்டும் ஒரு சுவர் அவர்களுக்குள் போட்டியாக வர, இருதரப்பிளும் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் பழி தீர்க்கக் கொன்று கொள்ள தீராத ஒரு பிரச்சினையாக சுவர் வளர்ந்து நிற்கிறது. ஒரு சுவர் அதில் யாருடைய படம் வர வேண்டும் என்பது சாதாரண விடயம். உட்கார்ந்து பேசினாலே தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால் அது அப்படி முடிந்து போவதில்லை. எதார்த்தமாக மனிதனுடைய மனது அவ்வளவு சீக்கிரமாக ஒருவனுக்குச் சாய்ந்து கொடுக்காது. அப்படிப்பட்ட நிலை வந்தாலும் அதனுள் இருக்கும் அரசியல் எளிதாக அதற்கு தீர்வை காணவிட்டு விடாது. பகை, பழியுணர்வு எவ்வளவு பெரிய அடக்க முடியாத வக்கிரத்தை உருவாக்கி ஒருவனை ஒருவன் வெட்டிச் சாய்த்துக்கொள்ளும் நிலைமைக்குக் கொண்டுவருகிறது என்று யோசிக்கத் தேவையில்லை மனிதன் என்ற வகையில் இயல்பிலேயே இது மாதிரியான வன்முறைக்கு நாம் நகர்ந்து போய்விடுவோம். இல்லையெனில் நகர்த்தப்பட்டுவிடுவோம். இதன் பின்புலத்தில் நின்று இயங்கக்கூடிய அரசியல் அப்படிப்பட்டாதக இருக்கும். ஒரு கண்ணோட்டத்தில் மெட்ராஸ் படத்தை இப்படியும் பார்க்க முடியும்.
அதிகப்படியான தமிழ் சினிமாக்களில் அடுத்து நகர்ந்து செல்லும் காட்சி சில வேலைகளில் கதைக்குச் சம்பந்தமே இல்லாமல் நகைச்சுவைக்கென ஒரு சீன் எனவும் காதலுக்கென வேறு கலமும் மீதி ஹீரோவை மட்டுமே முழுமைப்படுத்தியதாகவும் இருக்கும். அதுவே மெட்ராசில் ஒரு ஹீரோ இருக்கிறான். அவனுக்காகப் பின்னப்பட்ட கதை என்பதாக இதைப் பார்க்க முடியாது. அந்த சூழலை மையமாக வைத்து கதை நகர்கிறது. ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொருவரும் நகர்த்த வேண்டியிருக்கிறது. அந்தந்த கதாப்பாத்திரங்கள் வெறுமனே வந்து போவதில்லை. அதற்கென ஒரு பெறுமதி இருக்கிறது. எல்லாம் இணையும் போது தான் கதையின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. 

அந்தச் சூழலில் நடக்கக் கூடிய வன்முறையில் நாம் எப்படி உள்வாங்கப்படுகிறோம். நமக்குள் எதுமாதிரியான ஒரு பயத்தை உருவாக்குகிறது என்பதை அவதானிக்கும் போது அந்தக் காட்சிப்படுத்தல் அவ்வளவு அருமையாக இருக்கிறது. புதுப்பேட்டை, தடையற தாக்க, பாண்டிய நாடு போன்ற படங்களில் நான் இது மாதிரியான ஒரு பயத்தை அதனுடைய அந்தக் காட்சிகளின் வன்முறையின் போது உணர்ந்திருக்கிறேன். அது ஒருவிதமான பதட்டம் என்று கூடச் சொல்லாம். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது போல! 

மெட்ராஸ் படத்தில் கடைசி 20 நிமிடங்கள் தோய்வாக நகர்கிறது போலத் தோன்றினாலும். ஒருவன் ஒரு சோகத்தில் இருந்து மீள்கிறான். அவன் பிணைந்துள்ள அந்த சூழல், காதல் அவனை எப்படி அதிலிருந்து மீட்கிறது என்பதைச் சொல்ல அந்த நேரம் எடுத்துக் கொள்கிறது என்பதாகவே தோன்றுகிறது. பின்னாடி வரக்கூடிய திருப்பத்தை அந்த கதாப்பத்திரம் எப்படி ஏற்றுக் கொள்ளும் என்பதற்கான ஒரு மாறுதல் போல உணர முடிகிறது. ஒவ்வொரு காட்சியையும் உயிரோட்டமாக நகர்த்துவது சந்தோஷ் நாரயணின் பின்னனி இசையே. படத்திற்கு, காட்சிகளை தூக்கி நிறுத்த எது தேவையோ அதையே கொடுத்திருக்கிறார். பல பாடல்களை ரசிக்க முடிந்தது. சுவர் உட்பட ஒவ்வொரு கதாப்பாத்திரம் இயல்பாகவே படத்துடன் ஒன்றிவிடுகிறது. இறுதி சண்டைக் காட்சி இன்னும் வலுவாக உருவாக்கப்பட்டிருந்தால் செம்மையாக இருந்திருக்கும். அது மட்டுமே திருப்தியில்லாமல் அமைந்தது போலத் தோன்றுகிறது. 
இறுதியாக ரியல் மெட்ராஸ் படம் பார்த்த ஒரு திருப்தி கிடைத்தது.    


Comments

Popular posts from this blog

The Wind will Carry Us

ஈரானியத் திரையுலகில் முக்கியமான ஒருவர் அப்பாஸ் கிராஸ்தமி. சாதாரண மனிதர்களுடைய  வாழ்வியல் அம்சங்களை எதார்த்தமாகத் திரையில்  கொண்டுவருவதே இவரது படைப்புக்களின் வெற்றி. the wind will carry us பெயரே கவிதையின் மயக்கத்தை தருகிறதில்லையா, Forough Farrokhzad என்கிற ஈரானிய பெண் கவிஞரின் கவிதையின் தலைப்பே படத்தின் பெயரும் கூட. வெனீஸ் திரைப்பட விருது உட்பட பல விருதுகளை வென்று குவித்தித்ததோடு மட்டுமன்றி ஒரு தலைசிறந்த படைப்பாக இன்றைக்கும் தனித்து நிற்கிறது. 
இறப்பின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும், வயதான மூதாட்டி ஒருத்தியின் மரணத்தை எதிர்பார்த்த படி, அதன் பின்னரான சடங்குகளை ஆவணப்படுத்துவதற்காக பத்திரிகையாளனான பெஸாட்டும் அவனது நண்பர்கள் இருவரும்,  பொரியாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு குர்திஷ் கிராமமொன்றிற்கு வருகை தருகின்றனர். அதன் பின்னரான கதையும், சம்பவங்களின் கோர்வைகளும் தொடர்ச்சியாக நம்மை கதைக்குள்ளே உள்வாங்கி ஒரு கதாப்பாத்திரம் போல உள்ளே நுழைத்துவிடும். 
தனியாக கிணறு தோண்டும் ஒரு வாழிபன், உணவுக்காக காசு வாங்காமல் பால் கறந்து கொடுக்கும் ஒரு பெண், தேநீர் கடை நடத்தும் ஒரு பெண், இடங்களைச்…

சிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )

இளைஞனே வா!
உன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்

எதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.

புன்னகை அற்புதமான கவனயீர்ப்புக் கருவி.

உங்களை இந்த சமூகம் விரும்ப வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? ‘ஆம்’ என்றால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நீங்கள் இந்த சமூகத்தை விரும்ப வேண்டும். கண்ணாடியில் சிரித்த முகம் காண விரும்பினால் கண்ணாடியோடு சிரித்தே ஆக வேண்டும். எனவே, சமூகம் ஒரு கண்ணாடி போன்றது.


உங்களுடைய கறுத்த, இறுகிய முகத்தைக் காண சமூகம் விரும்புவதில்லை. அதனால் சமூகத்துக்கு முன்னால் உங்கள் துக்கங்களை முகத்தில் தேக்கிவைத்துக் காட்டாதீர்கள்.