Skip to main content

The constant gardener - பகிர்வுஅதிகமான எதிர்பார்ப்புக்களுடன் ஒரு படத்தைப் பார்க்கும் போது அதன் ஒவ்வொரு காட்சியும் சலிக்காமல் எந்தவிதத்திலாவது ரசனையைக் கூட்டிக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருப்போம். அப்படிப் பிடித்துப் போகும் படங்களை புகழ்ந்து கொண்டாடி பிடித்த வரிசைக்குள் அடக்கி அதன் துள்ளியமான ஒரு பிரதியை எது வடிவிலாவது சேமித்து வைப்போம். இது போன்ற தன்மைகள் எத்தனை பேரிடம் இருக்கிறது என்று தெரியாது. ஆனால் நான் இப்படித்தான் என்பது ஒருபக்கம். அந்த வரிசையில் சேர்கிறது The constant gardener.

ஒரு த்ரில்லர் படம் பார்க்கும் போது எந்தமாதிரியான காட்சிகளை வித்தியாசத் தன்மையை எதிர்பார்போம், அதுவே ஒரு காதல், ட்ராமா வகையைச் சேரும் போது அது எதுமாதிரியான புதுமையாக அமைந்திருக்க வேண்டும் என்பதில் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட எதிர்பார்ப்புக்கள் இருக்கும். ஒரு வேகமான த்ரில்லர், ஆக்‌ஷன் அல்லது ஹாரர் படத்துடன் காதல் காட்சிகள் கலக்கும் போது படத்தின் வேகத்துக்கு ஒரு போதும் தடையாக இருக்கக் கூடாது என்பதில் படைப்பாளி கட்டாயம் கரிசனையுடையவராக இருக்க வேண்டும். அல்லது கதையுடன் தொடரும் அந்த காதல் காட்சிகள் பின்னே வரக்கூடிய காட்சிகளுக்கு எந்தவிதத்திலாவது உயிர் கொடுப்பதாக இருக்க வேண்டும். தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் தேவையே இல்லாமல் நேரத்தை வீணடிப்பதற்காகவே பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன கதைக்குச் சம்பந்தமே இல்லாத காதல் காட்சிகள் இருக்கும். நாம் எதிர்பார்ப்பது போன்ற கதைகள் தமிழில் வருவது அரிதே! கேட்டால் எடுப்பதற்குக் கதையில்லை என்று சப்பைக் கட்டுக் கட்டுவார்கள். சரி அதை விடுவோம்.  

the constant gardener படத்தைப் பார்க்கும் போது காதலையும், த்ரில்லரையும் எப்படி அலவாக மிக்ஸ் செய்து mystery தன்மை கெடாமல் அதன் மூலம்  ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் தருகிறது என்பதை அவதானிக்க முடியும்.

 பிரிட்டிஷ் தூதர் மனைவி கென்யாவில் பயணித்துக்கொண்டிருக்கும் போது மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறாள். கொலைகளுக்கான காரணங்கள் பொருந்தாமல் கோர்த்தவைகள் போலத் தெரிவதால் அவளுடைய கணவன்  பழைய நினைவுகளைச் சுமந்து கொண்டு அதற்கான காரணங்களை, அதன் பின்னே உள்ள சூழ்ச்சியைத் தேடி நகர்கிறான். 

2001 ல் வெளிவந்த John le Carré ன் the constant gardener நாவல் தான் அதே பெயரில் 2005ல் படமாக வெளிவந்து பலவிருதுகளை வென்று குவித்தது. கென்யா என்றதுமே அந்த மக்களின் வாழ்வியல், வறுமை, கலாச்சாரம், சூழல் போன்றவற்றை ஒளிப்பதிவு இயல்பாகப் பதிவு செய்துவிடுகிறது. இசை படத்திற்கு மிகப் பெரிய பலம். 
ayub ogada என்ற பாடலை கேட்டுப்பாருங்கள் அவ்வளவு அற்புதம். 
நடிப்பைப் பற்றிச் சொல்லும் போது எந்தவித செயற்கைத் தன்மையுமின்றி பட்டையான எதார்த்தமான நடிப்பு.


Comments

Popular posts from this blog

சிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )

இளைஞனே வா!
உன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்

எதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.

ராமர்களுக்கு இன்று ரத்தமில்லை

வைகாசி வந்தால்
முப்பத்து மூன்று
முடிகிறது அவளுக்கு

அவள் திருமணத்தை நிச்சயிக்க நினைத்த
நாளில் மட்டும்
சொர்க்கத்திற்கு
விடுமுறை போலும்


தன் பெயரைக்-
கல்யாணப் பத்திரிகையிலேனும்
அச்சில் பார்க்க
அவள் ஆசைப்பட்டாள்
ஆனால்-
அச்சு எந்திரங்களைப் போலவே
மனித எந்திரங்களுக்கும்
மனசு இல்லை

பாவம்
தன்
கண்ணீர் முத்துக்களைக்
கோக்கத்தான்
நொந்து நொந்து அவள்
நூலாய் இளைத்தாளோ?

மாலையிட மாட்டார்கள்
ஆனால் எல்லா வாலிபரும்
அவளை
பெண்பார்ப்பது போல்தான்
பார்க்கிறார்கள்

முன்னொரு பிராயத்தில்…
பூக்களின்
அணிவகுப்பு மரியாதையைத்
தன் கூந்தலில் ஏற்றுக் கொண்டாள்

இன்றும்தான் சூடுகிறாள்
இது
தான் விதவையல்ல என்று
வெளிக்காட்ட மட்டுந்தான்

முன்பெல்லாம்
கனவுகளுக்காகவே
உறங்கினாள்
இப்போதோ
உறக்கமே
ஒரு கனவாகி விட்டது

முன்பெல்லாம்…
எப்போதாவது
சட்டென்று தோன்றி
மறையும் அந்த ஜன்னல் மின்னல்

இப்போது
அசையாமல் உட்கார்ந்து
ஜன்னலுக்குத்
தானும் ஒரு
கம்பியானாள்

சிரிப்பு என்பது
அவளுக்கு
இதழில் இல்லை
ஞாபகத்தில் இருக்கிறது

மன்மதன்
அவன்மீது எய்த
மலர்க்கணைகள்
இன்று
சுள்ளிகளாகிவிட்டன.

முன்பெல்லாம்
ஆண்டாள் படிக்கச் சொன்ன
அப்பா
இன்று
பட்டினத்தாரும்
பரவாயில்லை என்கிறார்

அவள்
பெருமூச்சு வெப்பத்தில்
ம…

உனக்காக வாழ்ந்து பார், உன்னோடு வாழ்ந்து பார்

வாழ்வு எனும் அரும்பெரும் பொக்கிஷம் வற்றாத ஊற்றுப்போல தன்னையும் சூழலையும் பசுமையாக வைத்திருக்கும். வாழ்வு என்றுமே வசந்த காலமாய் பூத்துக் குலுங்காது. கோடை காலமும் இலையுதிர் பருவமும் வாழ்வை கடந்தே செல்கின்றன. வாழ்வை உயிர்ப்பிக்கவும் ரசிக்கவும் பலர் மறந்தே போகின்றனர். நிறையப்பேர் வாழ்வின் யதார்த்தங்களை புரிவதற்கு தயாரில்லை. சகலதும் துக்கமெனக் கருதி கண்ணீரோடு கழிப்போரும் உள்ளனர். உச்ச இன்பங்களுக்கான திறந்த களம் தான் வாழ்வு என்று நினைப்போரும் உள்ளனர்.