Skip to main content

வன போஜனம்மனித நடமாட்டமே இல்லாத அந்தக் குட்டித் தீவை நோக்கி (madribar island) நகர்ந்துகொண்டிருந்தோம். கடல் பயணம் என்பது முற்றிலும் மாறுபட்ட ஒன்று, 20 நிமிடங்கள் கடந்து கப்பல் கரையைத் தொட்டது. அடர்ந்த பச்சை நிறத்தில் மரங்கள், அதனைச் சுற்றி வெள்ளை மணல் என அந்தச் சூரிய வெளிச்சத்தில் தலையை நிமிர்த்திப் பார்க்கும் போது கண்கள் கூசத் தொடங்கிவிட்டது. அலைகள் வேகமாகவும் உயரமாகவும் அடித்துக் கொண்டிருந்தது. 

இதற்காகத் தான் விதி என்னை இங்கு அழைத்துவந்ததா? சத்தியமாக வியந்து போனதில் ஆச்சரியமே இல்லை. நான் பார்த்துக் கொண்டிருந்தது இயற்கையின் அதிசயங்களில் ஒன்று. ஆனால் எத்தனை நாள் இந்தத் தீவு இன்னும் உயிருடன் இருக்கும் என்பதில் தான் நிச்சயமில்லை. கடல் அதனைக் கொஞ்சம் கொஞ்சமாக தின்றுகொண்டிருந்ததை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த வன போஜனம் ஒரு நான்கு மணித்தியாளமாக நீண்டது. இரண்டு முறைக்கும் மேலாக தீவைச் சுற்றினோம். பவளப்பாறைகள் ஒரு பக்கமாகக் குவிந்துகிடந்தது, நடக்கும் போது சில இடங்களில் கால் மணலில் ஒரு ஆலம் வரை புதைந்து விடுகிறது அடுத்த அடி எடுத்து வைக்கும் போது அதே நிலை தான். இதற்கு முன்பு இது எப்படி இருந்திருக்கும் என கற்பனைகள் பற்றிக் கொள்ள ஆரம்பித்ததுவிட்டது. ஒரு இடத்தில் காய்ந்து வரண்ட ஒரு பெரிய மரம். அதனை அலைகள் சூழ்ந்து கொண்டிருக்க தூரத்திலிருந்து பார்க்கும் போது ஒரு உருவம் கண்ணத்தில் கை வைத்து அமர்ந்திருப்பது போன்ற தோற்றம். 

Cast away படத்தில் விமானம் விபத்துக்குள்ளாகி ஒரு தீவில் நாயகன் கரை ஒதுங்குவான் தனிமை ஒரு வித பைத்திய நிலையை உருவாக்கும் அவனுக்குள்ளாக, உண்மையில் ஆழ்ந்து பார்க்கும் போது தனிமை யாரையும் பைத்தியமாக்குவதில்லை, தனிமையில் ஒரு வித பைத்தியம் இருக்கிறது அது தான் நம்மை பீடித்துக் கொள்கிறது. ஆழ்ந்த அந்த மொளனத்தின் நடுவே அலைகளின் புலம்பல்களை மட்டும் தான் கேட்க முடிகிறது. உடை கலைந்த வானம், சிரித்துக் கொண்டிருக்கும் சூரியன், காற்று கொண்டாட்டமாக எல்லாத் திசைகளிலும் அழைந்து கொண்டிருந்தது. ஆஹ் இயற்கை குதூகலமாக எதையோ கொண்டாடிக் கொண்டிருந்தது. நான் மட்டும் தான் அங்கே என்ற பிரம்மை சுற்றிக் கவலை, கோபம் இன்ன பிற கசப்புக்கள்  எதுவுமில்லை, இயற்கையுடன் நானும் குதூகலமாக இருந்த தருணங்கள் சுபஹானல்லாஹ். 

ஒரு நல்ல கெமரா கையில் இருக்கவில்லை என்பது தான் நீண்ட கவலையாக இருந்தது. சந்தர்ப்பங்கள் எப்பொழுதும் வாய்ப்பதில்லை. ஒருந்தாலும் ஒவ்வொரு காட்சியும் அனுபவங்களும் மனதில் சுத்தமாகப் பதிந்திருக்கிறது. 

Comments

Popular posts from this blog

The Wind will Carry Us

ஈரானியத் திரையுலகில் முக்கியமான ஒருவர் அப்பாஸ் கிராஸ்தமி. சாதாரண மனிதர்களுடைய  வாழ்வியல் அம்சங்களை எதார்த்தமாகத் திரையில்  கொண்டுவருவதே இவரது படைப்புக்களின் வெற்றி. the wind will carry us பெயரே கவிதையின் மயக்கத்தை தருகிறதில்லையா, Forough Farrokhzad என்கிற ஈரானிய பெண் கவிஞரின் கவிதையின் தலைப்பே படத்தின் பெயரும் கூட. வெனீஸ் திரைப்பட விருது உட்பட பல விருதுகளை வென்று குவித்தித்ததோடு மட்டுமன்றி ஒரு தலைசிறந்த படைப்பாக இன்றைக்கும் தனித்து நிற்கிறது. 
இறப்பின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும், வயதான மூதாட்டி ஒருத்தியின் மரணத்தை எதிர்பார்த்த படி, அதன் பின்னரான சடங்குகளை ஆவணப்படுத்துவதற்காக பத்திரிகையாளனான பெஸாட்டும் அவனது நண்பர்கள் இருவரும்,  பொரியாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு குர்திஷ் கிராமமொன்றிற்கு வருகை தருகின்றனர். அதன் பின்னரான கதையும், சம்பவங்களின் கோர்வைகளும் தொடர்ச்சியாக நம்மை கதைக்குள்ளே உள்வாங்கி ஒரு கதாப்பாத்திரம் போல உள்ளே நுழைத்துவிடும். 
தனியாக கிணறு தோண்டும் ஒரு வாழிபன், உணவுக்காக காசு வாங்காமல் பால் கறந்து கொடுக்கும் ஒரு பெண், தேநீர் கடை நடத்தும் ஒரு பெண், இடங்களைச்…

சிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )

இளைஞனே வா!
உன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்

எதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.

புன்னகை அற்புதமான கவனயீர்ப்புக் கருவி.

உங்களை இந்த சமூகம் விரும்ப வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? ‘ஆம்’ என்றால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நீங்கள் இந்த சமூகத்தை விரும்ப வேண்டும். கண்ணாடியில் சிரித்த முகம் காண விரும்பினால் கண்ணாடியோடு சிரித்தே ஆக வேண்டும். எனவே, சமூகம் ஒரு கண்ணாடி போன்றது.


உங்களுடைய கறுத்த, இறுகிய முகத்தைக் காண சமூகம் விரும்புவதில்லை. அதனால் சமூகத்துக்கு முன்னால் உங்கள் துக்கங்களை முகத்தில் தேக்கிவைத்துக் காட்டாதீர்கள்.