Skip to main content

பேய்க்கதை


2014-03-30_Home - Copy
நவ்பர் ஹோட்டல் ஒன்றில் வைட்டராக வேலை செய்துகொண்டிருந்தான். வேலை முடிஞ்சு வீடுவந்து சேர எப்படியும் இரவு ஒன்றைக் கடந்துவிடும். ஆற்றங்கரையோரமாக ஒரு காட்டுவழி உண்டு. ரோட்டை சுற்றி வந்தால் சுத்துக் கூடவாக இருக்குமென்பதால் வழமையாகவே அந்தக் காட்டு வழியைத் தான் பயன்படுத்துவான். அந்த வழி மிகவும் ஆபத்தானது. மோகினிப் பிசாசு, இரவு நேரத்தில் அங்கே அழைந்து திரியும் என்று கட்டுக் கதைகள் ஊரில்  பரவிக் கிடக்கும் காலமது. நவ்பருக்கு இதில் எந்தவித நேரடி அனுபவமும் இல்லாததால் இந்தக் கட்டுக் கதைகள் மீது அவனுக்கு நம்பிக்கையிருக்கவில்லை. ஒரு இரவு. வேலை முடித்துவிட்டு வரும் போது மணி 12.30 ஜக் கடந்து கொண்டிருந்தது.


பின்னர் சில நாட்கள் கடும் காய்ச்சல். நவ்பரால் அசையக் கூட முடியவில்லை. மனதை விட்டு பய உணர்வு அகழ்வதாயில்லை. சரியாக மூன்றாம் நாள் வீட்டு யன்னலுக்கு அருகே வெள்ளைப் புடவை கட்டி நீண்ட தலைவிரி கோலத்துடன் ஒரு பெண் இவனைப் பார்த்துக் கொண்டிருப்பதை அவதானித்தான். திரும்பிப் பார்க்கும் போது காணவில்லை. இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது கதவை யாரோ தட்டும் சத்தம். இது தொடர்ந்தது. அவனை யாரோ கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குவது போன்ற உணர்வு.
சரியாக இரண்டு மாதம் கடந்த நிலையில் நவ்பர் பைத்தியமாகிப் போனான். மோகினி வருகிறாள், என்று புலம்பிக் கொண்டிருப்பான். அதிர்ச்சியில் ஊர் மக்கள் இருக்க,  ஒரு நாள் நவ்பர் தூக்கு மாட்டி இறந்து போனான். காலம் 1995.

காலம் இப்படித்தான் பேய்க்கதைகளையும் சம்பவங்களையும், கொஞ்சம் கூட்டி, நீட்டி, பெருக்கி, ஒரு டிசைன் வடிவில் நம்மை வந்தடைகிறது. இந்தக் கதையை முதன் முதலாகக் கேட்டு அதன் பயத்தை அனுபவித்த போது கற்பனையில் மோகினி என்ற பேய், வெள்ளை உடையணிந்து நீண்ட கூந்தல் கொண்டவளாக பதியப்பட்டு விட்டாள். காலப்போக்கில் அவள் ஒரு கைக்குழந்தையையும் சுமந்து கொண்டு வருவாள் என்று டிவலப் செய்யப்பட்டது. நவ்பர் ஏன் அந்த மோகினிப் பேயால், காரணமின்றி தற்கொலை வரை சென்றான், என்ன நடந்தது என்ற விரிவான விளக்கம் இல்லையென்றாலும் , பின்னே நான் அறிந்து கொண்டது படி பேய்கள் துரத்தும் போது வீடு செல்லக் கூடாது என்பது தான். வீட்டை பேய்கள் ஆக்கிரமித்துக் கொள்ளுமா? என்பது எந்தளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் சிலரால் இன்றுவரை நம்பப்பட்டு வருகிறது.

இது போன்ற கதைகள் கிராமப் பகுதிகளில் நிறையவே இருக்கிறது.
ஒரு சூனியக்காரி வாடகைக்கு வந்த வீட்டில் தூக்கு மாட்டி இறந்து போயிருக்கிறாள். பின் அங்கே வரும் ஒவ்வொருவரும் கொஞ்ச நாளிலேயே காலி செய்துவிடுகின்றனர். காரணம், பாத்ரூம் போகும் போது தூக்கில் தொங்குவது போல் உருவம் தெரிகிறது, நடு நிசியில், கண்ணாடிகள் தானாக உடைகிறது, யாரோ சிரிக்கும் சத்தம். அப்பா! கதை சொல்லிக்கே பயம் வந்து விடும் போல! இதை கதையல்ல நிஜம் போல கூட்டி வைத்து விவாதமெல்லாம் நடத்தி நிரூபிக்க முடியாது,சொல்வதைத் தெரிந்து அனுபவித்துக் கொள்ளவும். பின்னர் சூனியம் செய்யும் ஒருவனிடம் விசாரித்த போது, அந்த வீட்டைச் சுற்றி சூனியம் செய்யப்பட்டிருக்கிறது, கெட்ட ஜின்கள் உலாவுமிடமாகவும் இருக்கிறது என்றானாம்.
ஜின், ஷைத்தான், சூனியம் என்பதெல்லாம் உண்மையே, ஆனால் பேய்கள் என்று வரும் போது தனிப்பட்ட அனுபவமே அவனுக்குப் பேய் பற்றிய அனுபவத்தை உணர வைக்கிறது.இன்னும் நிறையவே பேய்க்கதைகள், சொல்லப்படாமல் இருக்கிறது. அதன் வரலாறு தோண்டப்பட்டு, ஒரு நாள் கதை சொல்லி உங்களிடம் சொல்லுவான்.

Comments

Popular posts from this blog

The Wind will Carry Us

ஈரானியத் திரையுலகில் முக்கியமான ஒருவர் அப்பாஸ் கிராஸ்தமி. சாதாரண மனிதர்களுடைய  வாழ்வியல் அம்சங்களை எதார்த்தமாகத் திரையில்  கொண்டுவருவதே இவரது படைப்புக்களின் வெற்றி. the wind will carry us பெயரே கவிதையின் மயக்கத்தை தருகிறதில்லையா, Forough Farrokhzad என்கிற ஈரானிய பெண் கவிஞரின் கவிதையின் தலைப்பே படத்தின் பெயரும் கூட. வெனீஸ் திரைப்பட விருது உட்பட பல விருதுகளை வென்று குவித்தித்ததோடு மட்டுமன்றி ஒரு தலைசிறந்த படைப்பாக இன்றைக்கும் தனித்து நிற்கிறது. 
இறப்பின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும், வயதான மூதாட்டி ஒருத்தியின் மரணத்தை எதிர்பார்த்த படி, அதன் பின்னரான சடங்குகளை ஆவணப்படுத்துவதற்காக பத்திரிகையாளனான பெஸாட்டும் அவனது நண்பர்கள் இருவரும்,  பொரியாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு குர்திஷ் கிராமமொன்றிற்கு வருகை தருகின்றனர். அதன் பின்னரான கதையும், சம்பவங்களின் கோர்வைகளும் தொடர்ச்சியாக நம்மை கதைக்குள்ளே உள்வாங்கி ஒரு கதாப்பாத்திரம் போல உள்ளே நுழைத்துவிடும். 
தனியாக கிணறு தோண்டும் ஒரு வாழிபன், உணவுக்காக காசு வாங்காமல் பால் கறந்து கொடுக்கும் ஒரு பெண், தேநீர் கடை நடத்தும் ஒரு பெண், இடங்களைச்…

சிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )

இளைஞனே வா!
உன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்

எதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.

புன்னகை அற்புதமான கவனயீர்ப்புக் கருவி.

உங்களை இந்த சமூகம் விரும்ப வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? ‘ஆம்’ என்றால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நீங்கள் இந்த சமூகத்தை விரும்ப வேண்டும். கண்ணாடியில் சிரித்த முகம் காண விரும்பினால் கண்ணாடியோடு சிரித்தே ஆக வேண்டும். எனவே, சமூகம் ஒரு கண்ணாடி போன்றது.


உங்களுடைய கறுத்த, இறுகிய முகத்தைக் காண சமூகம் விரும்புவதில்லை. அதனால் சமூகத்துக்கு முன்னால் உங்கள் துக்கங்களை முகத்தில் தேக்கிவைத்துக் காட்டாதீர்கள்.