Skip to main content

மாங்காய் கதை

2014-05-04-17-06-

மாங்காய் சீசன் வந்தாச்சு. இந்த மாதத்திலிருந்து அதிலும் கருத்தகொலம்பான் மாங்காய் என்றால் தனி ஸ்பெஷல், எங்க ஊரில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கருத்தகொம்பான் மாங்கா மரம் உண்டு. அந்தப்பக்கமாகச் செல்லும் எல்லோருக்குமே அந்த மரத்தின் மீது தீராத கண். இருந்தாலும் பாருங்கோ இத்தன பேர் கண் பட்டும் செத்துப் போகாமல் படுபிட்டி வராலாற்றில் ஒரு பாத்திரமாக மாறியிருக்கிறது, எதிர்காலத்துக் கதை சொல்லியின் கதையில் அது இடம் பிடித்து உலகப்புகழ் பெற்றாலும் சொல்லுவதற்கில்லை.

அந்த கருத்தக் கொலம்பான் ருசி இருக்கிறதே சொல்லி சொல்லிமாளாது. ஒரு நாள் அவ்பர் காக்கா சுபஹ் தொழுகை முடித்து, அந்தப்பக்கமாக சென்றுகொண்டிருக்கும் போது மாங்காய் கண்ணில் பட்டுவிட்டது. பின் என்ன தொடர்ந்து காக்கா ஒரு வாரமாக மாங்காய் வேட்டை தான். படுபாவிப்பய! சுபஹ் தொழுதுட்டு செய்ற வேலயா இது. இது இப்படியே நடக்க வராற்றுச் சிறப்பு மிக்க மாங்காய் மரத்தை நட்டவர் மயிரா புடுங்கிட்டு இருப்பார், எல்லா மாங்காய்களையும் சொப்பின் பேக்கால் சுத்திக் கட்டிவிட்டார். அன்றிலிருந்து அவ்பர் காக்காவின் சுபஹ் தொழுகையும் தடைப்பட்டு விட்டது.
மாங்காய் மரங்களைச் சுற்றி நிறையக் கதைகள் இருக்கின்றன. ஆராய்ந்து பார்க்கும் போது மாங்காய்களுக்கும் நிறையவே கதைகள்.

Comments

Popular posts from this blog

The Wind will Carry Us

ஈரானியத் திரையுலகில் முக்கியமான ஒருவர் அப்பாஸ் கிராஸ்தமி. சாதாரண மனிதர்களுடைய  வாழ்வியல் அம்சங்களை எதார்த்தமாகத் திரையில்  கொண்டுவருவதே இவரது படைப்புக்களின் வெற்றி. the wind will carry us பெயரே கவிதையின் மயக்கத்தை தருகிறதில்லையா, Forough Farrokhzad என்கிற ஈரானிய பெண் கவிஞரின் கவிதையின் தலைப்பே படத்தின் பெயரும் கூட. வெனீஸ் திரைப்பட விருது உட்பட பல விருதுகளை வென்று குவித்தித்ததோடு மட்டுமன்றி ஒரு தலைசிறந்த படைப்பாக இன்றைக்கும் தனித்து நிற்கிறது. 
இறப்பின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும், வயதான மூதாட்டி ஒருத்தியின் மரணத்தை எதிர்பார்த்த படி, அதன் பின்னரான சடங்குகளை ஆவணப்படுத்துவதற்காக பத்திரிகையாளனான பெஸாட்டும் அவனது நண்பர்கள் இருவரும்,  பொரியாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு குர்திஷ் கிராமமொன்றிற்கு வருகை தருகின்றனர். அதன் பின்னரான கதையும், சம்பவங்களின் கோர்வைகளும் தொடர்ச்சியாக நம்மை கதைக்குள்ளே உள்வாங்கி ஒரு கதாப்பாத்திரம் போல உள்ளே நுழைத்துவிடும். 
தனியாக கிணறு தோண்டும் ஒரு வாழிபன், உணவுக்காக காசு வாங்காமல் பால் கறந்து கொடுக்கும் ஒரு பெண், தேநீர் கடை நடத்தும் ஒரு பெண், இடங்களைச்…

சிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )

இளைஞனே வா!
உன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்

எதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.

புன்னகை அற்புதமான கவனயீர்ப்புக் கருவி.

உங்களை இந்த சமூகம் விரும்ப வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? ‘ஆம்’ என்றால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நீங்கள் இந்த சமூகத்தை விரும்ப வேண்டும். கண்ணாடியில் சிரித்த முகம் காண விரும்பினால் கண்ணாடியோடு சிரித்தே ஆக வேண்டும். எனவே, சமூகம் ஒரு கண்ணாடி போன்றது.


உங்களுடைய கறுத்த, இறுகிய முகத்தைக் காண சமூகம் விரும்புவதில்லை. அதனால் சமூகத்துக்கு முன்னால் உங்கள் துக்கங்களை முகத்தில் தேக்கிவைத்துக் காட்டாதீர்கள்.