Skip to main content

Posts

Showing posts from 2014

பிடித்த பட்டியல்.

அஸ்கர் பர்ஹாதியின் A Separation படம் பார்த்த பின்பு தான்அவருடைய ஏனைய படைப்புக்களைப் பார்க்க வேண்டும் என்கிற ஈர்ப்பு ஏற்பட்டது.  அதன் பின்னர் Fireworks Wednesday, The Beautiful City, About Elly, The Past படங்களை எப்போதோ பதிவிறக்கம் செய்தும் பார்ப்பதற்கு சரியான நேரம் அமையாமையால் நீண்ட இடைவெளி எடுத்துவிட்டது .
நேற்று About Elly பார்க்கக் கிடைத்து. பர்ஹாதியின் தலைசிறந்த படைப்புக்களில் About Elly ம் உள்ளடங்கும்.சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்திற்கான விருது என பல தளங்களில் பல விருதுகளை வாங்கிக் குவித்தது About Elly. இது பர்ஹாதியின் நான்காவது படைப்பாகும்.

கடந்து போன வகுப்பரை –

சொல்லப்படும் விடயத்தை உள்வாங்கிக் கொள்வது எல்லோரைப் பொருத்தவரையிலும் வித்தியாசப்படும். சிலர் இலகுவாக அதனை உள்வாங்கிக் கொள்வர். இன்னும் சிலரைப் பொறுத்தவரையில் அதற்கென சற்று நேரம் எடுக்கும். சொல்லப்பட்ட விடயத்தை மீண்டும் மீண்டும் திருப்பக் கேட்டு பல முறை கேட்டு கஷ்டப்பட்டு உள்வாங்கக்கூடிய ஒரு தொகையினர் இருக்கின்றனர். இவர்களை ஆசிரியர்கள் என்னமாதிரியான முறையில் வழிநடத்துகின்றனர் என்று பார்ப்பதற்குஇ ஒவ்வொருவரும் நான் காட்டும் வகுப்பரையைக் கவனியுங்கள்.


A Dirty Carnival

நான் பாடசாலையில் தரம் 11ல் படித்துக் கொண்டிருந்த போது. அப்போதெல்லாம் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு கேங். அடிதடியெல்லாம் சதாரணமாக வாரத்துக்கு 2 முறை நடக்கும். சில போது சண்டை உச்சத்துக்கே போய் கத்தி உழி எல்லாம் எடுத்துவந்த சந்தர்ப்பங்கள் உண்டு. ஒரு முறை இருவருக்குள் நடந்த சண்டையில் ஒருத்தனுக்கு பலத்த அடி. மறு நாள் அவன் ஸ்கூல் பக்கமே வரவில்லை. ஸ்கூல் விட்டு வெளிய வந்ததும் தான் தெரிஞ்சது ஒரு 6 பேர் கூட வந்திருக்கான். நேத்து வாங்கினத இவனுக்கு திருப்பிக் கொடுக்கணும். இப்போ கண்பார்மா சண்டையின்டு தெரியும் இவனும். யோசிக்கவேயில்லை. பொன்னேன் கூட்டத்தோடய வந்திருக்க, பேக்கை கலட்டி வீசிவிட்டு ஓடி வந்தவனுக்கு பாய்ந்து ஒரு உதை. கீழே விழுந்தவன் கைகளில் கல்லை எடுத்து சைடில் வந்த இருவருக்கும் பொத்தி ரெண்டு அடி; வந்த ஆறு போருக்கும் பலத்த அடி. தனியாளாக அவனும் அடி வாங்வே செய்தான். திருப்பி அடிக்கும் அந்த தைரியம் இருக்கே, அந்த ஆக்ரோஷமும் வெறித்தனமும் இன்னும் அப்படியே நினைவுகளில் இருக்கு. என் கண் முன் நடந்தது மறக்க முடியுமா என்ன. 
கட்.
ரியலிஸ்ட்டிக் அதாவது எதார்த்தமான எக்ஷன் சீக்வன்ஸ் கொண்ட neo-noir கேங்ஸ்டர் பட…

மெட்ராஸ் - பகிர்வு

“மூஞ்சப் பார்த்தாலே தெரியுது ரெபிட் பிடிக்குற டாக்குன்னு” இது மெட்ராஸ் படத்தில் அரசியல்வாதி மாரியின் போஸ்டரைப் பார்த்து ஜானி ஒரு கட்டத்தில் பேசும் வசனம். கேட்பதற்குச் சாதரணமாக இருந்தாலும் எவ்வளவு அர்த்தங்கள் பொதிந்த கிடக்கிறது. அது போலத்தான் மெட்ராஸ் படத்தினுடைய கதையும். 
சில காட்சிகள் பார்ப்பதற்குச் சாதரணமாக ஒருவரைக் கடந்து போகும் போது பேசிச் செல்வது போல இருந்தாலும் வட சென்னை மக்களுடைய அடையாளங்களை, வாழ்வியலை கண்முன்னே நிறுத்துகிறது என்கிறதாலே  மெட்ராஸ் வித்தியாசமானதாகத் தெரிகிறது. 
ஒன்றாக இயங்கிவந்த அரசியல்கட்சி இரண்டாகப் பிரிவதால் ஒரு ஊரைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் தங்களுக்குள் முரண்பட்டு எதிராளியாக மாற கட்சிப் போஸ்டர் ஒட்டும் ஒரு சுவர் அவர்களுக்குள் போட்டியாக வர, இருதரப்பிளும் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் பழி தீர்க்கக் கொன்று கொள்ள தீராத ஒரு பிரச்சினையாக சுவர் வளர்ந்து நிற்கிறது. ஒரு சுவர் அதில் யாருடைய படம் வர வேண்டும் என்பது சாதாரண விடயம். உட்கார்ந்து பேசினாலே தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால் அது அப்படி முடிந்து போவதில்லை. எதார்த்தமாக மனிதனுடைய மனது அவ்வளவு சீக்கிரமாக ஒருவனுக்குச்…

The constant gardener - பகிர்வு

அதிகமான எதிர்பார்ப்புக்களுடன் ஒரு படத்தைப் பார்க்கும் போது அதன் ஒவ்வொரு காட்சியும் சலிக்காமல் எந்தவிதத்திலாவது ரசனையைக் கூட்டிக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருப்போம். அப்படிப் பிடித்துப் போகும் படங்களை புகழ்ந்து கொண்டாடி பிடித்த வரிசைக்குள் அடக்கி அதன் துள்ளியமான ஒரு பிரதியை எது வடிவிலாவது சேமித்து வைப்போம். இது போன்ற தன்மைகள் எத்தனை பேரிடம் இருக்கிறது என்று தெரியாது. ஆனால் நான் இப்படித்தான் என்பது ஒருபக்கம். அந்த வரிசையில் சேர்கிறது The constant gardener.
ஒரு த்ரில்லர் படம் பார்க்கும் போது எந்தமாதிரியான காட்சிகளை வித்தியாசத் தன்மையை எதிர்பார்போம், அதுவே ஒரு காதல், ட்ராமா வகையைச் சேரும் போது அது எதுமாதிரியான புதுமையாக அமைந்திருக்க வேண்டும் என்பதில் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட எதிர்பார்ப்புக்கள் இருக்கும். ஒரு வேகமான த்ரில்லர், ஆக்‌ஷன் அல்லது ஹாரர் படத்துடன் காதல் காட்சிகள் கலக்கும் போது படத்தின் வேகத்துக்கு ஒரு போதும் தடையாக இருக்கக் கூடாது என்பதில் படைப்பாளி கட்டாயம் கரிசனையுடையவராக இருக்க வேண்டும். அல்லது கதையுடன் தொடரும் அந்த காதல் காட்சிகள் பின்னே வரக்கூடிய காட்சிகள…

வன போஜனம்

மனித நடமாட்டமே இல்லாத அந்தக் குட்டித் தீவை நோக்கி (madribar island) நகர்ந்துகொண்டிருந்தோம். கடல் பயணம் என்பது முற்றிலும் மாறுபட்ட ஒன்று, 20 நிமிடங்கள் கடந்து கப்பல் கரையைத் தொட்டது. அடர்ந்த பச்சை நிறத்தில் மரங்கள், அதனைச் சுற்றி வெள்ளை மணல் என அந்தச் சூரிய வெளிச்சத்தில் தலையை நிமிர்த்திப் பார்க்கும் போது கண்கள் கூசத் தொடங்கிவிட்டது. அலைகள் வேகமாகவும் உயரமாகவும் அடித்துக் கொண்டிருந்தது. 
இதற்காகத் தான் விதி என்னை இங்கு அழைத்துவந்ததா? சத்தியமாக வியந்து போனதில் ஆச்சரியமே இல்லை. நான் பார்த்துக் கொண்டிருந்தது இயற்கையின் அதிசயங்களில் ஒன்று. ஆனால் எத்தனை நாள் இந்தத் தீவு இன்னும் உயிருடன் இருக்கும் என்பதில் தான் நிச்சயமில்லை. கடல் அதனைக் கொஞ்சம் கொஞ்சமாக தின்றுகொண்டிருந்ததை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த வன போஜனம் ஒரு நான்கு மணித்தியாளமாக நீண்டது. இரண்டு முறைக்கும் மேலாக தீவைச் சுற்றினோம். பவளப்பாறைகள் ஒரு பக்கமாகக் குவிந்துகிடந்தது, நடக்கும் போது சில இடங்களில் கால் மணலில் ஒரு ஆலம் வரை புதைந்து விடுகிறது அடுத்த அடி எடுத்து வைக்கும் போது அதே நிலை தான். இதற்கு முன்பு இது எப்படி இருந்தி…

EDGE OF TOMORROW - LIVE. DIE. REPEAT.

ஏலியன்களுடனான கொடூரமான ஒரு போர்க்களத்தில் கட்டாயப்படுத்தப்பட்டு எந்தவிதமான  பயிற்சியுமின்றி போரில் கலந்துகொள்ளும் நிலைக்குத்தள்ளப்படுகிறான் வில்லியம் கேஜ். 

எந்த விதமான முன்போர் அனுபவம் இல்லாத மேஜர் வில்லியம் கேஜ் மறு நாள் Battery Charge ல் இயங்கும் இரும்புக்கவசம் அடங்கிய Jacket எனும் போர் உடை அணியப்பட்டு ஆயிரக்கணக்கான வீரர்களுடன் ஒருவனாக பயணமாகிறான் .  போர்க்களத்தை அண்மித்ததும் விமானம் தாக்கப்பட்டு வெடித்துக் கீழே விழ குதிக்கிறான்.
முற்றிலும் மாறுபட்ட ஒரு போர்க்களமாக காட்சியளிக்கிறது. மூச்சு விட்டு தன்னை சுதாரித்துகொள்ளும் முன்னமே அனேகமானவர்கள் இறந்து விடுகின்றனர். மிமிக்ஸ் எனப்படும் இந்த வகை ஏலியன்கள் மிகவும் வேகமாக செயற்படக்கூடியதாக இருக்கிறது. போராட்டத்தில் ஒரு ஆல்பா மிமிக்ஸை கொன்றுவிடுகிறான் கேஜ். அதன் இரத்தம் இவன் மீது படிய இவனும் இறந்து விடுகிறான். 

இறந்தவன் கண் விழிக்கிறான். போருக்கு முந்தைய நாள் முதல் நாள் நடந்த அதே சம்பவம் நடக்கிறது, மீண்டும் போர் இறக்கிறான். மறு நாள் திரும்பவும் இறக்கிறான். போர்க்களத்தில் அவன் இறக்கும் ஒவ்வொரு தருணமும் அதற்கு முந்தைய நாளுக்கு Repeat  செய்யப்பட…

ஜிகர்தண்டா

"டாரண்டினோவின் Genre தமிழில் இதுவரை வந்ததில்லை. அந்த வகையில் ஜிகர்தண்டாவே தமிழில் இந்த வகையில் முதல் படம்." இந்த வசனத்தை கருந்தேள் ராஜேஷ் ஜிகர்தண்டா படத்தைப் பற்றிச் சொல்லும் போது சொல்லியிருப்பார். ஏற்கனவே படத்தின் Trailer, Songs, Background Score எல்லாமே சூப்பராக இருந்ததினால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இடையில் இந்த டாரண்டினோவின் Genre என ராஜேஷ் சொல்ல எதிர்பார்ப்பு இன்னுமாகக் கூடிவிட்டது. 
ஆனால் என்ன படத்தை டியேட்டரில் பார்க்கத்தான் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இங்கே அஞ்சான், ஜில்லா என சூர மொக்கைத் திரைப்படங்களே அதிகமாக வெளியிடப்படுகின்றன. நல்ல படங்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு ரொம்பவே குறைவு தான். Original DVD வாங்குவது என்றாலும் வாய்ப்பே இல்லை. எல்லா DVD கடைகளிலும் Torrent ல் Download செய்து கலர் கவர் போட்டு விக்குறானுங்க. Colombo போய் DVD வாங்கனும் என்றால் பொருளாதாரம் முட்டிக்கும். ஒரே தீர்மானம் Piracy தான். சோ நேற்றுத் தான் ஜிகர்தாண்டா படம் பார்க்கக்கிடைத்தது.

Despicable me -

னிமேஷன் திரைப்படங்களை எப்பொழுதுமே ரசித்துப் பார்ப்பவனாக இருக்கிறேன். சில போது நண்பர்கள் லாப்டாப்பில் கிடக்கும் அனிமேஷன் திரைப்படங்களின் பட்டியலைப் பார்த்துவிட்டு கிண்டலடிப்பதுண்டு, அவர்களுக்கெங்கு புரியப்போகுது அதனுடைய தனித்தன்மை வாய்ந்த ரசனை. Despicable me இது 2010 இல் வெளிவந்த அனிமேஷன் திரைப்படம்.
எகிப்தின் பிரமிட்டை வெக்டர் எனும் வில்லன் ஒருவன் திருடி விடுகிறான், தன்னை வில்லன் நொம்பர் 1 என் நினைத்துக் கொண்டிருக்கும் க்ரூ வின் பெருமைக்கு இது பங்கமாக அமைகிறது. தன்னை மீண்டும் நொம்பர் 1 வில்லன் என்று பெருமைப்படுத்த, க்ரூ நிலாவையே திருட திட்டம் வகுக்கிறான். நிலவிற்குச் செல்வதற்கு ராக்கெட் தயாரிக்க நிதியுதவி கேட்டு கொடூர செயல்களுக்கு நிதியுதவி வழங்கும் Bank Of Evil இற்குச் செல்கிறான், அங்கே நிலாவை சுறுக்கிச் சிறியதாக்கும் கருவியை திருடிக்கொண்டு வரும்படியும், அதன்பின் நிதியுதவி வழங்குவதாகவும் கூற க்ரூவும் அந்த கருவியை திருடுகிறான். க்ரூ விடம் இருந்த கருவியை வில்லன் வெக்டர் திருடிப்போக அதைத்தருப்பி கைப்பற்ற முடியாமல் க்ரூ நிறையவாட்டி பல்ப் (ஆப்பு)வாங்குகிறான்.
3 அநாதைச் சிறுமிகள் வெக்டரின…

மழை பற்றிய நினைவு

நேற்று இரவு ஆரம்பித்த மழை, இடைக்கிடையே 10 நிமிடம் என இடைவெளி எடுத்தபடி பெய்து கொண்டே இருக்குது. இதுவரை விடுவதான ஐடியாவே இல்லை போல தெரிகிறது.  மண்ணும், காற்றும் நன்றாகவே குளிர்ந்துவிட்டிருக்கு, பகல் கூட மாலை 6 மணி பீலிங்கா இருட்டியிருந்தது. அதிகமாக வீடுகளில் கதவுகள் அடைக்கப்பட்டு உறக்கமே நாளின் பாதியாகிவிட்டிருக்கிறது. சூடா ஒரு இஞ்சு கலந்த சாயா (பிலேன்டி) குடிக்கும் போது தான், தூங்கிக் கொண்டிருக்கும் நரம்புகள் சோம்பல் கலைத்து எழுந்து கொள்கிறது. 
வயதானவர்களுக்கும், தூரத்தே பணிபுரிந்து வீடு திரும்புபவர்களுக்கும் மழை ஒரு சகிக்க முடியாத துன்பியல் அனுபவம் தான், பார்க்கும்போது முகத்தை சுழித்துக் கொண்டு மழையைக் கடிந்துகொள்வது இயல்பாகவே தெரிந்துவிடுகிறது. இருந்தும் குழந்தைகளுக்குக் கொண்டாட்டம் தான், ஆனால் இன்றைய நாட்களில் எத்தனை பேர் மழையை ரசிக்கின்றனர் என்று தெரியவில்லை. பாடசாலை செல்லும் நாட்களில் மழை அவ்வளவாகப் பிடிக்கும், எவ்வளவு பெய்து ஓய்ந்தாலும் தீராத் தாகமாகவே தெரியும். பாடசாலை விட்டு வீடு திரும்பும் போது எப்பவும் உடை நனைந்து ஸகூல் பேக்கில் இருந்து தண்ணி வடியும், உம்மா ஏசி ஏசியே ஒவ்வொரு…

SUPER SIZE ME -

McDonald's, KFC, Pizza Hut, என்று பெறுமை அடித்துக் கொள்ள இந்த Fast food கடைகள் பக்கம் ஓடுபவர்கள் ஏராளமாக இருக்கின்றனர். இவர்களுக்கு என்னமோ அதில் சாப்பிடவில்லையென்றால் சாப்பாடே தொண்டைக்குழிக்கு அப்பால் இறங்காது போல ஒரு மேனரிசம் காட்டுவார்கள். அப்பாடா நம்மலால இதயெல்லாம் தாங்க முடியாது . சிலர் இப்படிக் காரணம் சொல்வார்கள், வேலை வேலையென்று பிசியாகவே இருப்பதால் நல்ல சாப்பாடு சாப்பிட நேரமே கிடைப்பதே இல்லை, அது தான் Fast food பக்கம் போகிறோம் என்று, ஆஹா எப்படியெல்லாம் சாமாலிக்குறாங்கப்பா! பொதுவாக இந்த Fast food கடைகளுக்கென்று தனி வரலாறே இருக்கும். Leader Ship Programme களில் இது போன்ற சப்பைக் கட்டுக் கதைகள் எல்லாம் கேட்டு காதே கேட்காமல் போகும் அளவிற்கு அழுப்பாக இருக்கும். 
இந்த Fast food இல் அப்படி என்னதான் விஷமா இருக்குன்னு நீங்க என்னய கேக்க மாட்டீங்க, நானே சொல்றேன், தொடர்ந்து ஒரு வருடத்திற்கு சாப்பிடும் போது பாரிய அளவிலான மாற்றத்தை உணர்வீர்கள். cholesterol, heart disease, Heart failure, Diabetes, mood swing, Sex week என்று எல்லா வகையான நோய்களையும் இலவசமாக பெற்றுக் கொள்வீர்கள். நமது நாட்…

சிலபோது

சில விடயங்களை பேச நினைக்கும் போது நாம் எதார்த்தமாக சிந்திக்க மறுத்துவிடுவது உண்மை தானே! எந்த ஒரு விடயத்தை எடுத்துக் கொண்டாலும் நாம் பேச நினைக்கிற விடயம் எவ்வளவு தூரம் நடைமுறையோடு ஒத்துப்போகிறது என்று சிந்துத்துப் பேச கடமைப்பட்டுள்ளோம். எதார்த்தத்தை கடந்து கற்பனைப் போக்காக எவ்வளவு விடயங்களை வேண்டுமானலும் நாம் பேசிவிட்டுப் போக முடியும், ஆனால் செயற்பாடு என்று வரும்போது நாமே பின்வாங்கிவிடுவோம்.
சரி சொல்ல வந்த விடயத்திற்கு வருகிறேன். இப்போது எனக்கான திறமைகளை எப்படி இனங்கண்டு அதனை நான் எவ்வாறு செயற்படுத்துகிறேன் / செயற்படுத்த முயற்சிக்கிறேன் என்ற ஒரு விடயத்தை எடுத்துக்கொள்வோம். எவ்வளவு தூரம் நாம் இந்த முயற்சிகளை நமக்குள்ளாக உள்வாங்கி அதனில் வெற்றிகண்டிருக்கிறோம் அல்லது நமக்கான திறமைகளை இனம் காண முயற்சித்திருக்கிறோம். அதிகமானவர்களிடம் இந்த கேள்வியை கேட்கும் போது 100 இல் 40 வீதமானவர்கள் கூட தனக்குப் பிடித்தமான, தனது திறமையை நரூபிக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதில்லை அல்லது வெளிப்படுத்த முயற்சிப்பதில்லை. தனக்கான சந்தர்ப்பம் கிடைப்பதில்லை, நேரமின்மை, தொழில் விடயம், மற்றவர்களுக்காக தான்னு…

பேய்க்கதை

நவ்பர் ஹோட்டல் ஒன்றில் வைட்டராக வேலை செய்துகொண்டிருந்தான். வேலை முடிஞ்சு வீடுவந்து சேர எப்படியும் இரவு ஒன்றைக் கடந்துவிடும். ஆற்றங்கரையோரமாக ஒரு காட்டுவழி உண்டு. ரோட்டை சுற்றி வந்தால் சுத்துக் கூடவாக இருக்குமென்பதால் வழமையாகவே அந்தக் காட்டு வழியைத் தான் பயன்படுத்துவான். அந்த வழி மிகவும் ஆபத்தானது. மோகினிப் பிசாசு, இரவு நேரத்தில் அங்கே அழைந்து திரியும் என்று கட்டுக் கதைகள் ஊரில்  பரவிக் கிடக்கும் காலமது. நவ்பருக்கு இதில் எந்தவித நேரடி அனுபவமும் இல்லாததால் இந்தக் கட்டுக் கதைகள் மீது அவனுக்கு நம்பிக்கையிருக்கவில்லை. ஒரு இரவு. வேலை முடித்துவிட்டு வரும் போது மணி 12.30 ஜக் கடந்து கொண்டிருந்தது.

பின்னர் சில நாட்கள் கடும் காய்ச்சல். நவ்பரால் அசையக் கூட முடியவில்லை. மனதை விட்டு பய உணர்வு அகழ்வதாயில்லை. சரியாக மூன்றாம் நாள் வீட்டு யன்னலுக்கு அருகே வெள்ளைப் புடவை கட்டி நீண்ட தலைவிரி கோலத்துடன் ஒரு பெண் இவனைப் பார்த்துக் கொண்டிருப்பதை அவதானித்தான். திரும்பிப் பார்க்கும் போது காணவில்லை. இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது கதவை யாரோ தட்டும் சத்தம். இது தொடர்ந்தது. அவனை யாரோ கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குவ…

அனுபவம்.... 1.0

உயர் தரம் படித்துக் கொண்டிருக்கும் நாட்களில் தான் புத்தகங்களுடனான ஈர்ப்பு அதிகமானது. ஆரம்பத்தில் வைரமுத்துவின், கருவாச்சிக் காவியம், கொஞ்சம் தேநீர் நிறைய வானம், இன்னொரு தேசிய கீதம், அப்துல் ரகுமானின் கவிதைத் தொகுதிகள் அதில் அடிக்கடி மீட்டி மீட்டி வாசித்த மின்மினிகளால் ஒரு கடிதம் கஸல் தொகுதி, மு.மேத்தாவின் சில கவிதைத் தொகுதிகள் அதிலும் அதிகத் தடவைகள் மீட்டி வாசித்த, ஒரு வானம் இரு சிறகு மிகவும் பிடித்துப் போன கவிதைத் தொகுதி, என்று புத்தகங்கள், எழுத்துக்களுக்குள்ளாக மூழ்க ஆரம்பித்த நாட்கள்.
அப்துல் ரகுமானின் கஸல் படித்துவிட்டு 80 பக்க வரைதல் கொப்பி ஒன்றை வாங்கி ஒவ்வொரு பக்கமாக படங்கள் வரைந்து ஹைக்கூ கவிதைகள் என்று சொல்லிக் கொண்டு எழுத ஆரம்பித்த நாட்கள். இரண்டு கிழமையில் முழுவதுமாக எழுதி முடித்துவிட்டு நண்பர்கள் பார்வைக்கு விட்டு பாராட்டுக்கள் பெற்றுக் கொண்டிருந்த சமயம், கொப்பி காணாமலேயே போய்விட்டது. (எவளோ பொறாமைக்காரி திருடிவிட்டாள்)

இப்படித் தான் எழுத்துக்கும் எனக்குமான நெருக்கம் ஆரம்பித்தது,
எந்த கவிதையாக எடுத்துக் கொண்டாலும் அதிகமாக காதல் தான் பாடு பொருளாக இருந்தது. தபூ சங்கர், வைரமு…

மாங்காய் கதை

மாங்காய் சீசன் வந்தாச்சு. இந்த மாதத்திலிருந்து அதிலும் கருத்தகொலம்பான் மாங்காய் என்றால் தனி ஸ்பெஷல், எங்க ஊரில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கருத்தகொம்பான் மாங்கா மரம் உண்டு. அந்தப்பக்கமாகச் செல்லும் எல்லோருக்குமே அந்த மரத்தின் மீது தீராத கண். இருந்தாலும் பாருங்கோ இத்தன பேர் கண் பட்டும் செத்துப் போகாமல் படுபிட்டி வராலாற்றில் ஒரு பாத்திரமாக மாறியிருக்கிறது, எதிர்காலத்துக் கதை சொல்லியின் கதையில் அது இடம் பிடித்து உலகப்புகழ் பெற்றாலும் சொல்லுவதற்கில்லை.
அந்த கருத்தக் கொலம்பான் ருசி இருக்கிறதே சொல்லி சொல்லிமாளாது. ஒரு நாள் அவ்பர் காக்கா சுபஹ் தொழுகை முடித்து, அந்தப்பக்கமாக சென்றுகொண்டிருக்கும் போது மாங்காய் கண்ணில் பட்டுவிட்டது. பின் என்ன தொடர்ந்து காக்கா ஒரு வாரமாக மாங்காய் வேட்டை தான். படுபாவிப்பய! சுபஹ் தொழுதுட்டு செய்ற வேலயா இது. இது இப்படியே நடக்க வராற்றுச் சிறப்பு மிக்க மாங்காய் மரத்தை நட்டவர் மயிரா புடுங்கிட்டு இருப்பார், எல்லா மாங்காய்களையும் சொப்பின் பேக்கால் சுத்திக் கட்டிவிட்டார். அன்றிலிருந்து அவ்பர் காக்காவின் சுபஹ் தொழுகையும் தடைப்பட்டு விட்டது.
மாங்காய் மரங்களைச் சுற்றி நிற…

என் பெயர் சிவப்பு – ஒரு அனுபவம்.

நண்பன் லபீஸ் கட்டார் செல்லும் போது அவனுடைய பல இஸ்லாமிய நூற்களை சொந்தமாக வைத்துக் கொள்ளும் படியும், IFEDல் இருந்து,சாரு வின் சில விமர்சனப் புத்தகங்கள், ஷோபா சக்தியின் “ம்”, ஓரான் பாமுக் இன் “என் பெயர் சிவப்பு” நாவல்களையும், வாசித்து தவறாமல் ஒப்படைத்துவிட வேண்டுமென்றும் தந்து விட்டுச் சென்றான். நன்றாக நினைவிருக்கிறது ஆட்டோவிற்குக் கூட அவன் தான் காசு கொடுத்தான், IFED ல் இருந்து எடுத்த புத்தகங்களை வாசித்து ஒப்படைத்து விட்டேன் “என் பெயர் சிவப்பு”; தவிர. ஆர்வமாக வாசிக்க எடுத்து நேரமின்மையால் நான்கு பக்கங்களோடு நிறுத்திவிட்டேன். ஜந்து மாதங்கள் கடந்திருக்கும் அதன் பின்னர் புத்தகத்தை தொடவே இல்லை. 655 பக்கங்களைக் கொண்ட அந்த நாவலை ஆரம்க்கபிக்க எது தடையாக இருந்திருக்கும் அதன் பக்கங்களையும், சோம்பலையும் தவிர.  உமரைச் சந்தித்த போது திருப்பி ஒப்படைக்கப்படாத  நாவலை நினைவு படுத்தினான். வரும் ஞாயிறு  தந்து விடுவதாகச் சொன்னேன்.
கொடுக்கப்பட்டவைகளை பயனின்றி திருப்பி ஒப்படைக்க நேரும் போது ஒரு வித பொறாமை நம்மைத் தொற்றிக் கொள்ளும் அல்லவா? அந்த நோய் என்னையும் விட்டு வைக்கவில்லை. இடையே வாசித்துக் கொண்டிருந்த …

Letters from Iwo Jima.

1945, ஜப்பான்- அமெரிக்கா இரண்டாம் உலகப்போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்தன. இவோ ஜிமா _கல், மலைகளால் சூழப்பட்ட ஜப்பானை அண்மித்திருக்கக் கூடிய சிறிய தீவு. ஜப்பான் மீதான தாக்குதலுக்கு மூலோபாயமான, போர் திறன் மிக்கதான ஒரு இடமாக இது அமைந்திருந்ததால் அதனை கைப்பற்ற அமெரிக்கப்படைகள் நகர்த்தப்பட்டன. 
இவோ ஜிமா _தீவில் வரவிருக்கும் அமெரிக்கப்படையை எதிர்ப்பதற்குக் குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களுடன் மலைகளுக்குள்ளாக குடைந்து குகைகளை அமைத்துக் கொண்டு எதிர்த் தாக்குதலை நடத்துகிறார் ஜெனரல் Tadamichi Kuribayashi (Ken Watanabe).
மரணத்தை ருசி பார்க்கும் போருக்கு மனித நேயம் தெரிவதில்லை. அதன் தேவை வெறும் சாவுகள் தான். நிச்சயமாக நாம் இறந்து தான் போவேம், சாவு எமக்குப் பக்கத்தில் தானிருக்கிறது. அடுத்த கனமே அது நம்மைக் கவ்விக் கொல்லும் என்று தெரிந்து கொண்டு போரில் ஈடுபடும் ஒருவனின் மனநிலை. குடும்பம், குழந்தை, உறவுகள் பற்றிய அவனது ஏக்கம், வலியின் உச்சம், வேதனைகளை அவனுள்ளே புதைத்துக் கொண்டு போருக்குத் தயாராகிறான். 
இங்கே யார் தரப்பு நியாயங்களும் தேவையில்லை. தேவை போரை எதிர் கொள்ளும் வீரன். கட்டாயத்தின் ப…

யாமம் நாவல் ஒரு அனுபவம்.

எவ்வளவு நேரம் வானத்தை வெறித்தபடியே பார்த்துக்கொண்டிருந்தேனென்று தெரியவில்லை.மேக மூட்டங்கள் தான் செல்லும் திசையில் எந்தவித சந்தேகமோ தயக்கமோயின்றி காற்று அழைக்கும் திசையில் தன் பாட்டில் நகர்ந்துகொண்டிருந்தது. எவ்வளவு மனக்கசப்பாக இருந்தாலும் வானத்தை வெறித்தபடியே பார்த்துக்கொண்டிருந்தால் தன் சுமையின் பாதி அறியாமலே கரைந்துவிட்டதான திருப்தி கிடைக்கிறது.
தூக்கம் கண்களை அதன் பக்கம் ஈர்த்துக்கொண்டிருந்தது.இரவும் சரியான தூக்கமின்மையால் குழப்பமாக இருக்கும் எண்ணங்களிலிருந்து கொஞ்சம் விடுதலை வேண்டியவனாக தலைசாய்த்துக் கொண்டேன்.
கனவிலும் கூட மதராப்பட்டணத்தில் அழைந்து கொண்டிருக்கும் மீர்காசிம், அப்துல் கரீம், சுரையா, வஹீதா, ரஹ்மானி, பத்ரகிரி, திருச்சிற்றம்பலம், விசாலா, தையல், கிருஷ்ணப்ப கரையாளர், எலிசபத், சதாசிப் பண்டாரம், சந்தீபா என்று ஒவ்வொரு கதாப்பாத்திமும் அவர்களுடைய வாழ்க்கை பற்றிய ஏமாற்றங்கள், என்று தொடர்ந்து கொண்டேயிருந்தது. என்ன வேலை செய்தும், எண்ணங்களை எவ்வளவு திசை திருப்ப முயன்றும், யாமத்தின் வாசம் என்னை விட்டு நீங்குவதாக இல்லை.
நேற்று அந்திபடும் வேலையில் மழை இருட்டியிருந்தது. வெளியே சென்ற…

Delhi 6_ இசை மழை

எல்லோருக்கும் பரீட்சயமாகியிருக்கும் ரஹ்மானின் மசக்கலி பாடல், இந்தப்பாடலுக்காகவே டெல்லி 6 படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. ஒரு வழியாக நேற்று பார்தாகி விட்டது. 
ரங்தே பஸந்தி படத்தின் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷின் மற்றுமொரு படைப்பு டெல்லி 6. 

தன் பாட்டியின் கடைசி கால ஆசை டெல்லி செல்ல வேண்டும் என்பது. அமெரிக்காவில் இருந்து தன் பாட்டியை அழைத்துக் கொண்டு டெல்லி விரைகிறான் ரோஷன். அதன் பின்னரான கதை, குரங்கு மனிதன் ஒருவன் டெல்லியை சுற்றி வருகிறான் என்று வதந்தி பரவிக் கொண்டிருக்க, கடைசியில் அது இந்துவா, முஸ்லிமா என்ற பிரச்சினையாக மாறி பிரிவினையாகி விடுகிறது. இன்னும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு, பகை, காதல், உறவு என்று பல தளங்களில் கதை நகர்கிறது. 
டெல்லியை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அவ்வளவு அருமையாக இருந்தது. A.R. Rahman னின் இசையை இரண்டரை மணித்தியாலம் அனுபவிக்க வேண்டுமென்றால் கட்டாயம் டெல்லி 6 படம் பார்த்தாக வேண்டும்.  பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி அந்தளவு காட்சிகளோடு ஒன்றியிருக்கிறது. 
மனிதனுடைய மனம் ஒரு குரங்கு போல தனக்குச் சாதகமாக எந்த நிமிடமும் அது கிளை…

"கிராமத்துக் கனவுகள்"

ஐந்து வருடங்கள் இருக்கும் ஒரு நாவலை வாசித்துவிட்டுபல மாத காலமாக தூக்கமின்றி அந்த கதாப்பாத்திரங்களை நினைத்தபடியே இருந்தது நினைவில் மீள்கிறது. இடையில் நாவலின் பெயரையும் அதன் ஆசிரியரையும் மறந்து தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருந்தேன். லரீனா தாத்தாவின் உதவியால் நாவல் கிடைத்துவிட்டது. 
எம். எச். எம் ஷம்ஸ் எழுதிய "கிராமத்துக் கனவுகள்" 
அந்த நாட்களில் முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் இழையோடிப்போயிருந்த மூடநம்பிக்கைகள் சம்பிரதாயங்களை சித்தரிப்பதோடு  பள்ளித் தலைவர்கள் செய்யும் சுரண்டல்கள், குலப் பெருமை காத்தும் மூட நம்பிக்கையின் உச்சத்தாலும் சொத்துக்களையும் எதிர்காலத்தையும் இழக்கும் குடும்பம்இ நஸீமா, ரபீக்கிடம் கனியும் காதல் அதன் பின்னரான விபரீதங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள்  என எதார்த்தங்களை இலங்கை முஸ்லிம்களின் மொழிவழக்கில் (பேச்சுமொழியில்) பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். 
இப்பொழுதெல்லாம் பல திரைப்படங்கள் ஏற்படுத்தாத திருப்தியை நிறைவை நாவல்களில் பெற்றுக்கொள்கிறேன். அந்த வகையில் எனக்கு நல்ல நிறைவை ஏற்படுத்திய நாவல் தான் கிராமத்துக் கனவுகள்.  பால்யகால சகி சுகராவும்இ கிராமத்துக் கனவுகள் நஸ…

Gravity - அனுபவம்.

ரயன் ஸ்டோன் அவளுடைய வாழ்க்கையில் முதலாவது விண்வெளிப் பயணமது. விண்வெளியில்மிதந்தபடியே தொலைநோக்கியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்துகொண்டிருக்கிறாள். உள்ளுக்குள் சிரிதான அச்சம் ஒட்டிக்கொண்டிருந்தாலும் அனுபவம் வாய்ந்த சக நண்பர்களான கோவால்ஸ்கிஇ ஷரீஃப் உட்பட சிலர் இருப்பதால் உன்னிப்பாகவும்இ பொறுமையாகவும் தனது வேலையை செய்துகொண்டிருக்கிறாள்.
அபாய எச்சரிக்கையாக தங்களுடைய விண்வெளி ஓடத்திற்கு அவசரமாகத் திரும்பும்படியும் வெடிக்கச் செய்யப்பட்ட ரஷ்ய செயற்கைக்கோளின் துண்டங்கள் வேகமாக பூமியைச் சுற்றிவருவதால் ஆபத்து நேரிடக்கூடும் என்றும் அறிவுறுத்தல் வரவே திரும்ப முனைகின்றனர். சிதறிய செயற்கைக்கோள் துண்டங்கள் சில நொடிகளிளே அவர்களை நெருங்கி மோதுகிறது. விண்வெளி ஓடம் வெடித்துச் சிதறுகிறது. நண்பர் கோவால்ஸ்கியைத் தவிர மற்றையவர்கள் இறந்துவிடுகின்றனர். ஈர்ப்புவிசையற்ற வெளியில் ரயன் ஸ்டோன் தனித்துவிடப்படுகிறாள். ரயன் ஸ்டோன்,கோவால்ஸ்கி பூமி திரும்பினார்களா? வாழ்வா சாவா என்ற அடுத்தகட்ட நகர்வுகள் என்ன என்பதை சுவாரஷ்யமான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார் Director Alfonso Cuarón.
நமக்கு முற்றிலும் அந்நியமான ஒரு இடம் விண…