Skip to main content

Posts

Showing posts from 2013

நான் உனக்கான பொழுது_ Aashiqi 2

நீ எவ்வளவு வெற்றிகளை வேண்டுமானாலும் சந்தித்திருக்கலாம் நீ அடையும் தோல்வியை ஒரு கூட்டம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் நீ அந்த தோல்வியிலிருந்து எழும்பும் பொழுதெல்லாம் திரும்பத் திரும்ப உன்னை வீழ்த்திவிட அந்த கூட்டமானது உன்னை பின்தொடர்ந்தபடியே இருக்கும்.
நமது வாழ்வின் எதார்த்தங்களுக்குள் சொல்லப்படாமல் ஒளிந்துகொண்டிருக்கும் ஒரு உண்மையாக அது எப்போதும் இருக்கும். அதை எல்லோருமே உணர மறுக்கிறோம். நாமும் சில போது அதுவாக மாறிப்போவதால்.
ஒரு வெற்றிபெற்ற பாடகன். ஒன்றின் பின் ஒன்றாக தொடர் வெற்றிகளை குவித்துக் கொண்டிருந்த அந்த பாடகன். தோல்வியை தழுவுகிறான்இ குடியும் போதையும் அவனது திறமைகளை மழுங்கடித்துவிடுகிறது. முன்கோபமானது அவனை தன்னிலை மறந்து தடுமாற வைக்கிறது. தன்னுடைய இலக்கை மறந்துவிடுகிறான். குடி மட்டுமே அவனை இயக்குகிறது. அவனுடைய பாடலை ஒரு நாள் அவனை விட அழகாகப் பாடும் பெண்ணை காண்கிறான். ஏழ்மை அவளது திறமைகளை கண்டுகொள்ள மறுக்கிறது. அவளது திறமையை அவன் உணர்கிறான். தன்னுடைய பாடல்களில் அவன் விட்ட பிழைகளை தெரிந்துகொள்கிறான். ஒரு பெரிய பாடகியாக உன்னை என்னால் உருவாக்க முடியும். உனக்கான …

Guillermo del Toro: ஹாலிவூடின் தனித்த பயணி

“Demon! What are you waiting for? This is what you want, isn’t it? Look at it. The last of its kind. Like you and I. If you destroy it, the world will never see its kind again… You have more in common with us than with them. You could be a king… If you cannot command, then you must obey.” - Prince Nuada, Hellboy: the Golden Army


லத்தின் அமெரிக்காவின் பதியப்பட்ட வரலாறு தொடங்குவது கொலம்பஸின் “புதிய உலகு” கண்டுபிடிப்புடனேயே. அதன் பிறகான லத்தின் அமெரிக்கா காலனித்துவத்தின் வேட்டைக்காடாக உருமாற்றம் பெற்றது. இன்கா, மாயன், அஸ்டெக் போன்ற வளமிக்க கலாச்சார நாகரீக பின்னணி கொண்ட இவ்வழகிய கண்டத்தின் வரலாறு மூடி மறைக்கப்பட்டு காலனித்துவ வேட்டையர்கள் சுதந்திரப் போராளிகளாக மேற்கு வரலாற்றாசிரியர்களால் உருமாற்றம் பெற்றனர். இத்தகைய கொடுமைமிக்க 500 வருடகால வரலாற்றை அற்புதமாக விளக்குவார் Eduardo Galeano தனது Open Veins of Latin America என்ற படைப்பில். இது பழைய கதை. சமீபத்திய நிலவரம் என்ன? உண்மையில் மேற்குறித்த வரலாற்றிலிருந்து சிறிதளவேனும் மாறுபடவில்லை அது. ஸ்பெய்ன் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பதி…

கால யந்திரமும் இலக்கியச் சிக்கல்களும்..

இலங்கை முஸ்லிம்களை பொறுத்தவரையில் கலை, இலக்கியம், சினிமா, இசை, அரசியல், பெண்கள், கல்வி போன்ற பகுதிகளில் குவிக்கப்படும் கவனம் (அ) அறிவு என்பது மிகவும் பிற்போக்குத்தனமாகவும் எரிச்சலூட்டக்கூடியதாகவும் இருக்கின்றன. முகப்புத்தக "செயற்பாட்டாளர்கள்" சமூகவலைத்தள "புரட்சியாளர்கள்" என்று மார்த்தட்டிக் கொள்ளும் இவர்களிடம் இயக்க போதையும், மையநீரோட்ட அரசியலும், பிற்போக்குவாதங்களும் மிகைத்து நிற்கின்றன. தாம் சார்ந்துள்ள கருத்தை நிறுவுவதற்கு எடுக்கும் பிரயத்தனங்கள் அந்த கருத்து முரணானதாக இருப்பினும் கூட தனது "வாதத்" திறமையை காட்டிக் கொள்வதற்காக நடாத்தும் யுத்தம்... யப்பா! தனது கருத்து பிழையெனக் கண்டு அதனை வாபஸ் பெறுபவர்களை காண்பது அரிது.

சரி விசயத்துக்கு வருகிறேன். பேசிப் பேசி சலித்துப்போன விடயமாக இருப்பினும் எழுத்தில் (அதாவது சமூகவலைத்தளத்தில்) பதியப்படவில்லை என்பதாலும் (அ) இது பேசுபொருளாக அமையவில்லை என்பதாலும் சில கேள்விளை முன்வைக்கிறேன்.

எமக்கான இலக்கியங்கள் ஏன் இன்னும் உருவாக்கப்படவில்லை? இதற்கு பதிலாக உதாரணங்கள் முன்வைக்கப்படலாம். இஸ்லாமிய "இலக…

என்றாலும் நான் எழுவேன்!

கசப்பான திரிபுற்ற பொய்களைப் பூசி வரலாற்றில் கடைநிலையில் என்னை நீ எழுதலாம்; அழுக்குக்குள் தோயும்படி அழுத்தமாய் மிதிக்கலாம் என்றாலும் நான் எழுவேன், சிறு புழுதியைப் போல!
எனது தோற்றமுனை வருத்துகின்றதா? வாட்டமுற்று நீ வருந்துவதேன்? என் வீட்டின் முன்னறை அருகிருந்து முடுக்கிவிடத் தோதான - பல எண்ணெய்க் கிணறுகளை அடையப்பெற்றதுபோல் - நான் நடப்பதைக் கண்டுதானோ?
நிலவினைப் போல் பகலவன் போல் - கடலதன் மேலெழும் அலைகளைப் போல் கிளர்ந்தே உயர்ந்தெழும் நம்பிக்கைகளைப் போல் மேலும் நான் எழுவேனே!
தாழ்த்திய விழியுடன் தலை கவிழ்ந்திருக்க, அழுதழுது அரற்றியே தொய்வுற்ற ஆன்மா, கண்ணீர்த் துளியென துவள்கிற தோளுடன் நொறுங்கிய நிலையில் - எனைக் காணவோ விழைகிறாய்?

நடுநிலை தவறாதீர்கள்..

எப்போதுமே ஒரு பிழை, இன்னொரு பிழையை நியாயப்படுத்தி விடுவதில்லை. இதனை நமது சகோதரர்கள் சிலர் நினைத்துப் பார்க்க மறந்து விடுகின்றார்கள்.
தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்த கதையாடல்கள் மேலெழும் சந்தர்ப்பத்தில் எல்லாம், சில சகோதரர்கள் காத்தான்குடிப் படுகொலைப் படங்களையும் இன்னும் சிலர் இந்திய இராணுவத்தைவிட இலங்கை இராணுவம் எவ்வளவு பெருந்தன்மையானது என்று ஒப்பீடு செய்யும் ஒரு படத்தையும் பகிர்ந்துகொள்கின்றார்கள்.
இதையெல்லாம் பார்க்கும் போது மிகுந்த ஆயாசமாக இருக்கிறது.
ஏன் இவர்கள் இப்படிப் பக்கசார்பாகவும், மனிதநேயமின்றியும் சிந்திக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இது தொடர்பாகச் சிந்திக்கும்போது, இவர்கள் அரசுக்கு வால் பிடிக்கிறார்களா, அல்லது பிரச்சினையை வேறு திசை நோக்கித் திருப்ப முனைகின்றனரா, அல்லது தமது அபிமானத்துக்குரிய ஆலிம்கள் கடந்த ஜெனீவா பேரவையில் செய்த நீதியற்ற செயலுக்கு வக்காலத்து வாங்க முற்படுகின்றனரா என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
தமிழ்ச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாய்க் கூறிக்கொண்ட ஓர் ஆயுதக்குழு காத்தான்குடியில் படுகொலைகளை மேற்கொண்டதையும், 1990 இல் வடபு…

நீ..... தீ......

நியாயங்களின் விலை இங்கே அதிகமாகி விட்டது! எனவேதான் ஏழைகளால்  அதை வாங்க இயலவில்லை.
சட்டம் என்பது வசதி படைத்தவர்களுக்கு வகுத்துக் கொடுத்த சௌகரியமாகிவிட்டது!
இங்கே நீதி செத்துக் கிடக்கிறது.. குற்றுயிரும் குலை உயிருமாகி நீதி மன்றத்தின் நிழலிலேயே நீதி செத்துக் கிடக்கிறது!
வழக்கறிஞர்களுக்குள் கடுமையான வாதம் இறந்து போய்விட்ட நீதியின் பிணத்தை எரிப்பதா.. புதைப்பதா?? என்று!
இருதரப்பு வழக்கறிஞர்களும் வீராவேசமாக  விவாதிக்கிறார்கள்-
நம்மிடமே கட்டணம் வாங்கிக் கொண்டு!
மு.மேத்தா

மௌனப் புரட்சிகளின் மையம்

சினிமா!

விஞ்ஞான தேவதை
கையில் ஏந்தி நிற்கும்
கலாதீபம்!

இந்த தீபத்தை
விட்டில்களல்ல
நட்சத்திரங்களே மொய்க்கும்

இந்த தீபம்
சில சூரியன்களை ஈனும்
சுயபலம் வாய்ந்தது

நேற்றுப் பதிதாய்ச்
சிலேட்டுப் பிடித்த
சிறுவன் மாதிரி
நம் வாழ்க்கையின்
பல பிரதேசங்களை
இது
கிறுக்கி வைத்திருக்கிறது.

நம்மூர்த் தாமரைகள்
இன்று
சூரியனைப் பார்த்தல்ல
திரைப்பாட்டின்
மெட்டுக்கள் கேட்டே
மொட்டுகள் விரிக்கும்

பட்டணத்துக் குழந்தைகள்
தாயின் தாலாட்டுக் கேட்டால்
ஒப்பாரி வைக்கும்!
விவித்பாரதி
காதில் விழுந்தால்தான்
கண் வளரும்!

சினிமாச் சுவரொட்டிகள்
கல்லறையின் மீது தவிர
ஒவ்வொரு சுவரிலும்
ஒட்டப்பட்டு விட்டன!

இங்கு ஓட்டுப் பெட்டிகளையும்
சவப்பெட்டிகளையும் கூட
படப்பெட்டிகளே தீர்மானிக்கும்!

தேனின் சத்தும்
விஷத்தின் வீரியமும்
சேர்ந்த கலவையே சினிமா!

இது மௌனப் புரட்சிகளின் மையம்

ராமர்களுக்கு இன்று ரத்தமில்லை

வைகாசி வந்தால்
முப்பத்து மூன்று
முடிகிறது அவளுக்கு

அவள் திருமணத்தை நிச்சயிக்க நினைத்த
நாளில் மட்டும்
சொர்க்கத்திற்கு
விடுமுறை போலும்


தன் பெயரைக்-
கல்யாணப் பத்திரிகையிலேனும்
அச்சில் பார்க்க
அவள் ஆசைப்பட்டாள்
ஆனால்-
அச்சு எந்திரங்களைப் போலவே
மனித எந்திரங்களுக்கும்
மனசு இல்லை

பாவம்
தன்
கண்ணீர் முத்துக்களைக்
கோக்கத்தான்
நொந்து நொந்து அவள்
நூலாய் இளைத்தாளோ?

மாலையிட மாட்டார்கள்
ஆனால் எல்லா வாலிபரும்
அவளை
பெண்பார்ப்பது போல்தான்
பார்க்கிறார்கள்

முன்னொரு பிராயத்தில்…
பூக்களின்
அணிவகுப்பு மரியாதையைத்
தன் கூந்தலில் ஏற்றுக் கொண்டாள்

இன்றும்தான் சூடுகிறாள்
இது
தான் விதவையல்ல என்று
வெளிக்காட்ட மட்டுந்தான்

முன்பெல்லாம்
கனவுகளுக்காகவே
உறங்கினாள்
இப்போதோ
உறக்கமே
ஒரு கனவாகி விட்டது

முன்பெல்லாம்…
எப்போதாவது
சட்டென்று தோன்றி
மறையும் அந்த ஜன்னல் மின்னல்

இப்போது
அசையாமல் உட்கார்ந்து
ஜன்னலுக்குத்
தானும் ஒரு
கம்பியானாள்

சிரிப்பு என்பது
அவளுக்கு
இதழில் இல்லை
ஞாபகத்தில் இருக்கிறது

மன்மதன்
அவன்மீது எய்த
மலர்க்கணைகள்
இன்று
சுள்ளிகளாகிவிட்டன.

முன்பெல்லாம்
ஆண்டாள் படிக்கச் சொன்ன
அப்பா
இன்று
பட்டினத்தாரும்
பரவாயில்லை என்கிறார்

அவள்
பெருமூச்சு வெப்பத்தில்
ம…

தாழிடப்பட்ட கதவுகள்

தாழிடப்பட்ட கதவுகள்
ஏதோ ஒரு சோகம், ஏதோ ஒரு மர்மம்
ஏதோ ஓர் எதிர்ப்புணர்வின் உருக்கொண்டு
எம் முகத்தினில் அறைகின்றன...


மூடித் தாழிட்ட கதவுகள்
சிறையினது கொடூரத்தை...
விரட்டப்பட்ட - ஓர்
அகதியின் துயரத்தை...
இறந்துபோனவனி/ளின் வெற்றிடத்தை...
அடையாளமிழந்த சமூகமொன்றின்
வரலாற்றுத் தோல்வியினை
இப்படியான எதையெல்லாமோ
காற்றிடம் சொல்லியழுது
முறையிடக் கூடும்!


இறுக மூடிய கதவுகள்
இறுக மூடிய இதயங்கள்
இவையிரண்டில்...
வன்முறை உச்சங்கொள்வது
இரண்டாவதில்தான்!


-- லறீனா அப்துல் ஹக்--

சூடு

ள்ளிக் கூடத்தில் மணியொலி ‘கணீர் கணீ’ ரெனக் கேட்க, மாணவர்கள் கோரஸாக ஸலவாத் ஓதிவிட்டு, வெண்புறாக் கூட்டமாய் பிரதான வாயிலினூடாக வெளியேரிக் கொண்டிருந்தார்கள். யாரையும் இடிக்காமல், நிதானமாய் வந்து கொண்டிருந்த றிழ்வானின் முகத்தில் இனம் புரியாத பரபரப்பு குடி கொண்டிருந்தது.

ஆண்டு ஆறில் கல்வி கற்கும் கெட்டிக்கார மாணவன் றிழ்வான், கணவனால் கைவிடப்பட்ட கதீஜாவின் ஒரே மகன். வீடுகளில் சமயல் வேலை செய்து கிடைக்கும் சொற்ப வருவாயில் தன் மகனைப் படிக்க அனுப்புகிறாள். தான் எடுக்கும் கூலிக்கு, வஞ்சனையின்றி உழைப்பவள் என்று ஊரில் அவளுக்கு எப்போதும் நல்லபெயர்.

தன் தாயைப் பற்றி சிந்தனையில் நடந்த றிழ்வான், அந்தப் புதுக் குடியிருப்புப் பகுதியை அடைந்ததும், நடையைத் துரிதமாக்கிப் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு வீட்டை அண்மித்தான். அவனைக் கண்ட மேஸ்திரி கரீம் நாநா, “அடடே! கதீஜாட மவனா? வா வா இன்னைக்கும் சரியான நேரத்துக்கு வந்துட்டே, ஏதும் சாப்பிட்டியா?” எனக் கரினையோடு விசாரித்தார்.

‘இல்லை’ என்பதாக தலையை இருபுறமும் ஆட்டிய றிழ்வானிடம் “ இந்தா இந்தப் ‘பார்சல்’ல கொஞ்சம் சோறு இரிக்கி. நீ சீக்கிரமா சாப்பிட்டுட்டு,…