Skip to main content

புன்னகை அற்புதமான கவனயீர்ப்புக் கருவி.உங்களை இந்த சமூகம் விரும்ப வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? ‘ஆம்’ என்றால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நீங்கள் இந்த சமூகத்தை விரும்ப வேண்டும். கண்ணாடியில் சிரித்த முகம் காண விரும்பினால் கண்ணாடியோடு சிரித்தே ஆக வேண்டும். எனவே, சமூகம் ஒரு கண்ணாடி போன்றது.உங்களுடைய கறுத்த, இறுகிய முகத்தைக் காண சமூகம் விரும்புவதில்லை. அதனால் சமூகத்துக்கு முன்னால் உங்கள் துக்கங்களை முகத்தில் தேக்கிவைத்துக் காட்டாதீர்கள்.
வாசனை தடவிய ஒரு கைக்குட்டையை பையிலிருந்து எடுத்து முகம் துடைக்கும்போது அதன் மணத்தை நம்மைச் சுற்றியுள்ளவர்களும் அனுபவிக்கின்றனர். நாம் வீதியில் காரோட்டிச் செல்லும்போது, அதிலிருந்து வெளியாகும் புகை வீதியிலிருந்து நடந்து செல்வோருக்கு கஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
அது போலவே உங்களுடைய புன்முறுவல் மற்றவர்களை சந்தோஷப்படுத்துகிறது. உங்களுடைய கறுத்த முகம் மற்றவர்களை வெறுப்படையச் செய்கிறது.

நாம் சிந்தும் புன்சிரிப்பு மற்றவர் துக்கத்தை நிவர்த்தி செய்ய நாம் செய்யும் உதவியாகும். சொந்த சகோதரனை சிரித்த முகத்துடன் வரவேற்பதும் இறை திருப்திக்குரிய செயலாகும். இறை தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை விட அதிகமாக புன்னகைக்கும் ஒரு நபரை நான் கண்டதே இல்லையென்று நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் (றழி) கூறினார்கள்.

கவலைகளை மனதுக்குள் புதைத்து, கண்ணீர் எனும் நீர் பாய்ச்சி, முகமெங்கும் நாற்றுவிடும் வரிக்கோடுகளை அறுவடை செய்யாமல், சிரிப்பினால் சிந்தையை இலேசாக்கினால் பாதிப் பிரச்சினைகளை எளிமையாகத் தீர்த்து விடலாம்.


சிரிப்பு அற்புதமான மாத்திரை, பசியை அதிகரிக்கச் செய்கிறது. சிரிப்பு மனதையும் உடலையும் தெம்பாக வைத்திருக்க உதவி செய்கிறது. சிரிக்கும் போது இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. சுவாசம் வேகம் பெறுகிறது. உடல் அமைப்பு நலம் பெறுகிறது.

சிரிப்பை எத்தனை முறை செலவழித்தாலும் குறையாத பொக்கிஷமாக இறைவன் மனித சமூகத்திற்கு வழங்கியுள்ளான். துன்பங்களை சமாளிப்பதற்கு இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள மிகப்பெரிய கொடை புன்னகையாகும்.அதே நேரம் மனதில் களங்க உணர்வை ஏற்படுத்தவும் புன்னகையால் முடியும் என்பதை மறவாதீர்கள்.
எனவே, பிறரைப் பார்த்தவுடன் இதமாய் சிரித்து, சிநேகமாகப் பேசி, சுற்றுப்புறத்தை சந்தோஷத்தின் இருப்பிடமாய், கலகலப்பின் பிறப்பிடமாய் மாற்றிப் பாருங்கள். உங்கள் மனதும் குளிரும், பலரும் உங்களை விரும்புவர்.

ஸ¬ல்பா ஸவாஹிர் - உலப்பனை
வைகறையில் வெளியானது. 

Comments

Popular posts from this blog

சிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )

இளைஞனே வா!
உன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்

எதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.

ராமர்களுக்கு இன்று ரத்தமில்லை

வைகாசி வந்தால்
முப்பத்து மூன்று
முடிகிறது அவளுக்கு

அவள் திருமணத்தை நிச்சயிக்க நினைத்த
நாளில் மட்டும்
சொர்க்கத்திற்கு
விடுமுறை போலும்


தன் பெயரைக்-
கல்யாணப் பத்திரிகையிலேனும்
அச்சில் பார்க்க
அவள் ஆசைப்பட்டாள்
ஆனால்-
அச்சு எந்திரங்களைப் போலவே
மனித எந்திரங்களுக்கும்
மனசு இல்லை

பாவம்
தன்
கண்ணீர் முத்துக்களைக்
கோக்கத்தான்
நொந்து நொந்து அவள்
நூலாய் இளைத்தாளோ?

மாலையிட மாட்டார்கள்
ஆனால் எல்லா வாலிபரும்
அவளை
பெண்பார்ப்பது போல்தான்
பார்க்கிறார்கள்

முன்னொரு பிராயத்தில்…
பூக்களின்
அணிவகுப்பு மரியாதையைத்
தன் கூந்தலில் ஏற்றுக் கொண்டாள்

இன்றும்தான் சூடுகிறாள்
இது
தான் விதவையல்ல என்று
வெளிக்காட்ட மட்டுந்தான்

முன்பெல்லாம்
கனவுகளுக்காகவே
உறங்கினாள்
இப்போதோ
உறக்கமே
ஒரு கனவாகி விட்டது

முன்பெல்லாம்…
எப்போதாவது
சட்டென்று தோன்றி
மறையும் அந்த ஜன்னல் மின்னல்

இப்போது
அசையாமல் உட்கார்ந்து
ஜன்னலுக்குத்
தானும் ஒரு
கம்பியானாள்

சிரிப்பு என்பது
அவளுக்கு
இதழில் இல்லை
ஞாபகத்தில் இருக்கிறது

மன்மதன்
அவன்மீது எய்த
மலர்க்கணைகள்
இன்று
சுள்ளிகளாகிவிட்டன.

முன்பெல்லாம்
ஆண்டாள் படிக்கச் சொன்ன
அப்பா
இன்று
பட்டினத்தாரும்
பரவாயில்லை என்கிறார்

அவள்
பெருமூச்சு வெப்பத்தில்
ம…

உனக்காக வாழ்ந்து பார், உன்னோடு வாழ்ந்து பார்

வாழ்வு எனும் அரும்பெரும் பொக்கிஷம் வற்றாத ஊற்றுப்போல தன்னையும் சூழலையும் பசுமையாக வைத்திருக்கும். வாழ்வு என்றுமே வசந்த காலமாய் பூத்துக் குலுங்காது. கோடை காலமும் இலையுதிர் பருவமும் வாழ்வை கடந்தே செல்கின்றன. வாழ்வை உயிர்ப்பிக்கவும் ரசிக்கவும் பலர் மறந்தே போகின்றனர். நிறையப்பேர் வாழ்வின் யதார்த்தங்களை புரிவதற்கு தயாரில்லை. சகலதும் துக்கமெனக் கருதி கண்ணீரோடு கழிப்போரும் உள்ளனர். உச்ச இன்பங்களுக்கான திறந்த களம் தான் வாழ்வு என்று நினைப்போரும் உள்ளனர்.