Skip to main content

Posts

Showing posts from 2012

நீயற்ற பொழுது

தனிமை தன் கோப்பையில் உன்னையே திரும்பத் திரும்ப ஊற்றிக் கொள்கிறது. எங்கு தேடியும் கிடைப்பதில்லை

உன் போன்ற ஒரு மணப் பெண் வாழ்க்கையை உன்னிடம்

பகிர்ந்த அளவுக்கு யாருடனும் பகிர முடியவில்லை

புன்னகை அற்புதமான கவனயீர்ப்புக் கருவி.

உங்களை இந்த சமூகம் விரும்ப வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? ‘ஆம்’ என்றால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நீங்கள் இந்த சமூகத்தை விரும்ப வேண்டும். கண்ணாடியில் சிரித்த முகம் காண விரும்பினால் கண்ணாடியோடு சிரித்தே ஆக வேண்டும். எனவே, சமூகம் ஒரு கண்ணாடி போன்றது.


உங்களுடைய கறுத்த, இறுகிய முகத்தைக் காண சமூகம் விரும்புவதில்லை. அதனால் சமூகத்துக்கு முன்னால் உங்கள் துக்கங்களை முகத்தில் தேக்கிவைத்துக் காட்டாதீர்கள்.

உனக்காக வாழ்ந்து பார், உன்னோடு வாழ்ந்து பார்

வாழ்வு எனும் அரும்பெரும் பொக்கிஷம் வற்றாத ஊற்றுப்போல தன்னையும் சூழலையும் பசுமையாக வைத்திருக்கும். வாழ்வு என்றுமே வசந்த காலமாய் பூத்துக் குலுங்காது. கோடை காலமும் இலையுதிர் பருவமும் வாழ்வை கடந்தே செல்கின்றன. வாழ்வை உயிர்ப்பிக்கவும் ரசிக்கவும் பலர் மறந்தே போகின்றனர். நிறையப்பேர் வாழ்வின் யதார்த்தங்களை புரிவதற்கு தயாரில்லை. சகலதும் துக்கமெனக் கருதி கண்ணீரோடு கழிப்போரும் உள்ளனர். உச்ச இன்பங்களுக்கான திறந்த களம் தான் வாழ்வு என்று நினைப்போரும் உள்ளனர்.


வாழ்தலைப் பாடுகின்றேன்...

காணாமல் போய்விட்ட ஒரு குட்டி நட்சத்திரம் பற்றி யாருமே கவலைகொள்வதற்கில்லை; லட்சக்கணக்கானவை இன்னுமே வான்வெளியில் கண்சிமிட்டிக்கொண்டே இருக்கின்றன... -----------------------
அலையோடு போய்விட்ட சருகுக்காய் கரையோர நாணல்கூட அலட்டிக்கொள்வதில்லை; பச்சை மரத்து இலைகள் கோடி கிளைகளெங்கினும் அசைந்தாடும்போது... ---------------------------
முகில்கள் மறைப்பினும் அமாவாசை தோன்றினும் நிலவுபற்றிய நினைவுகளை எல்லாம் விளக்குகள் கழுவிச் செல்கின்றன... --------------------------------
சூரியனே காணாத குளுகுளு அறைகளில் வாழ்க்கை மொத்தமும் சத்தமின்றி நகர்கின்றது... ------------------------------
நிலவாய், சருகாய், குட்டி நட்சத்திரமாய், சூரிய வெளிச்சமாய் இருப்பதை மறுதலி

மாணவ சமுதாயமும் டியூஷன் வகுப்புக்களும்.

பாடசாலைக் கல்வி என்பது நாட்டிலுள்ள ஒவ்வொரு பிள்ளையின் மீதும் அத்தியவசியமாக்கப்பட்டதாகும். சிறு பராயம் தொடக்கம் டீன் ஏஜ் முடியும் வரை (கிட்டத்தட்ட) தொடரும் கல்வி வட்ட அமைப்பே பாடசாலைக்கல்வியாகும். ஓவ்வொரு பிள்ளை மீகும் கல்வி என்ற அடித்தளம் சரியான முறையில் இடப்பட்டால் எதிர்காலக்கட்டடங்கள் அழகான முறையில் மேலோங்கி கம்பீரமாக காட்சியளிக்கும். 


வாழ்வைப் புரிந்துகொள்வோம்

எல்லோரும் நினைப்பது இவ்வுலகில் நிம்மதியாய், சந்தோஷமாய் வாழவேண்டுமென்றுதான். ஆனால் இறைவனின் நியதி, அது சிலருக்கு சாதகமாய் அமைவது போல் சிலரது வாழ்வில் அது பாதகமாய் அமைகிறது.

இவ்வுலகில் எல்லோரும் வருமையிலிருந்தும், பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை பெறவே இறைவனிடம் பிரார்த்திக்கின்றனர். நம்மில் அதிகமானோர் வாழ்க்கை வட்டத்தின் விழிம்பில் நின்று யோசிக்கின்றோம். நம் இருள்நிறைந்த வாழ்விலிருந்து ஒளியைப் பெறவே முயற்சிக்கின்றோம். ஒவ்வொருவருக்குப் பின்னாலும் ஏதோ ஒரு பிரச்சினை அவர்களை துரத்திக்கொண்டுதானிருக்கிறது.

swades; கலைத்துவமும் மண் வாசனையும்

மோகன்  பார்கவா  அமெரிக்காவில்  நாஸாவில் பணி புரியும்  ஒரு விஞ்ஞானி. தன் குழந்தைப் பருவத்து வளர்ப்புத் தாயான காவிரியம்மாவின் நினைவு காரணமாக இந்தியாவுக்கு வருகிறார். உத்ரபிரதேசத்தில் உள்ள அழகிய வறிய கிராமம் தான் சரன்பூர்.  அங்கு மின்சாரம் கூட இல்லை.நாஸாவில் பணிபுரியும் விஞ்ஞானியின் ஊரில் இதுதான் நிலமை.இது மோகனின் உணர்வைப் பாதிக்கின்றது. தனது அறிவனால் ஊருக்கு மின்சாரம் பெற்றுத் கொடுக்கிறார். இதுதான் ஸ்வாதேஸின் சுருக்கம் .Lagaan ,Jodha akbar போன்ற படங்களைத் தந்த  Ashutosh Gowariker இன் கலைத்துவம் மிக்க படைப்புதான் ஸ்வாதேஸ். சில படங்கள் மீண்டும் மீண்டும் பார்க்கச் சொல்லும் அனுபவத்தைத் தரக் கூடியவை. அந்த வரிசையில் இந்தத் திரைப்படத்தையும் சொல்லலாம்.
கல்வியில் சிகரத்தை அடைபவர்கள் எங்கெங்கோ தங்கி விடுகின்றனர். அவர்கள் வாழ்ந்த மண்னையும் அதன் வாசனையையும் மறந்து விடுகின்றனர்.  அறிவுஜீவிகளுக்கும் அவர்களது சொந்த மண்னுக்கும் இடையில் உள்ள இடைவெளியையும் அதன் பாதிப்புக்களையும் ஸ்வாதேஸ் தன் கலைத்துவம் மிக்க மொழியில் இயல்பாகப் பேசுகிறது.


சொந்த ஊரின் தூசி படிந்த, மறையாத நினைவுகளை அதன் பெறுமதியை தன் சினிமா மொ…

A Separation - அன்பின் பிரிகோடு...

Asghar Farhadiயின் A Separation திரைப்படம் சிறந்த பிற நாட்டு மொழிப் படத்திற்கான ஒஸ்கார் விருதினை வென்றிருக்கின்றது. இதுவே ஈரான் திரைப் படம் ஒன்று முதலாவதாக ஒஸ்காரைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பமாகும். இப்படம் இஸ்ரேலின் திரைப்படத்தை தோற்கடித்திருப்பது ஈரானில் பெரும் பேசு பொருளாக மாறி இருக்கின்றது.  இரு நாடுகளினதும் முறுகல் நிலையில் இவ் வெற்றி பெறப் பட்டிருப்பதனால் அது மேலும் கொண்டாடப்படுவதாக பொருள் கொள்ள முடியும்.

கெமராக்காரன் வரும் போது...

கெமராக் காரன் வரும் போது எல்லோரும் தம்மைக் கொஞ்சம் சுதாகரித்துக் கொள்கிறார்கள்

தலைகளைக் கொஞ்சம் கைகளைக் கொண்டு
சீவிக் கொள்கிறார்கள்

தம் பார்வைகளை ஒரு சின்னப் போஸுக்கு
தயார்படுத்திக் கொள்கிறார்கள்

நாம் கவனிக்கப்படுகிறோம் என்பதனை
மறைத்துக் கொள்ள முயல்கிறார்கள்..

சிலர் கெமராவின் பார்வையிலிருந்து
தப்பித்துக் கொள்ள அதிகபட்சம்
முயற்சிக்கிறார்கள்.

இது எப்போது எந்தத் தொலைக்காட்சியில்
ஓளிபரப்பாகும் எனக் கேட்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

இவர்கள் போட்டோ எடுத்தென்ன 
அமெரிக்காவுக்கா அனுப்பப் போகிறார்கள்
என ஒருவர் கேட்கும் போது
கெமராவைத் தூக்கியிருக்கின்ற கை
இன்னும் வலிக்கத் தொடங்கிவிடுகிறது...

http://insafsalahudeen.blogspot.com

ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை...

அதிகாலை ஒரு அதிகாலை என்பது எவ்வளவு இனிமையானது. இருந்தாலும் அதன் அழகை தூக்கம் காவுகொண்டு விடுகின்றது. அதிகாலையின் அழகை இந்த உல கில் நிறையப்பேர் தூக்கத்திலேயே காண்கின்றனர். அதிகாலை என்பது ஒரு பிரத்தியேகமான மகிழ்ச்சி, குதூகலம். இந்தக் காலை ஒவ்வொருத்தருக்கும் ஒவ் வொரு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. 
எங்கள் இறைவனே (உன் தூதரின்) அழைப்பை நாங்கள் நிச்சயமாக செவியுற் றோம். (அவர்) எங்களை நம்பிக்கையின் பக்கம் அழைத்து உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள் என்று கூறினார். நாங்களும் (அவ்வாறே) நம்பிக்கை கொண்டோம். ஆதலால் எங்கள் இறைவனே நீ எங்கள் குற்றங்களை மன்னிப்பாயாக, எங்கள் பாவங்களை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக. (முடிவில்) நல்லோர்களுடன் எங்களை மரணிக்கும்படி செய்வாயாக’.