Skip to main content

தாரிக் இப்னு ஸியாத்


மத்தியத் தரைக்கடல் வழியாக அட்லாண்டிக் மகா சமுத்திரத்திற்குள் நுழையும் ஒவ்வொரு கப்பலும் ஜிப்ரால்டர் ஜலசந்தியைக் கடந்தே சென்றாக வேண்டும் அல்லது அங்கு சிறிது தாமதித்து இளைப்பாறிச் செல்ல வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த ஜிப்ரால்டர் ஜலசந்தியானது ஐரோப்பாவின் தென்மேற்கு முனையில் மற்றும் மொராக்கோவுக்கு எதிர்புறமாக அமைந்துள்ளது.


சரி..! ஜிப்ரால்டர் என்று ஏன் அழைக்கப்படுகின்றது என்று தெரியுமா உங்களுக்கு?
ஜிப்ரால்டர் என்பது ஜபல் அல் தாரிக் அல்லது ''தாரிக்(இப்னு ஸியாத்)மலைக்குன்று'' என்பதனை மொழிமாற்றி, சுருங்கச் சொல்லப் பொன்னால் அரபி மொழியை மோசடி செய்து, அதனை ஜிப்ரால்டர் என்று மேற்குலகு அழைத்துக் கொண்டிருக்கின்றது. இது நாம் காணப் போகும் வரலாற்று நாயகரான தாரிக் இப்னு ஸியாத் அவர்களின் பெயரைத் தாங்கித் தான் நிற்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய வரலாற்றுச் சிறப்புக்குச் சொந்தக்காரரைப் பற்றி நாம் இங்கு சிறிது காண்போமா..!

வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள பெர்பர்களின் வம்சாவழியில், நஃப்ஸாவா என்னும் குலத்தில் தோன்றியவர் தான் தாரிக் பின் ஸியாத். உக்பா இப்னு நாஃபி அல் ஃபிஹ்ரி என்பவரின் தலைமையில் சென்ற முஸ்லிம்களின் படை வடக்கு ஆப்ரிக்காவைக் கைப்பற்றிய பொழுது, அதன் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர் தான், தாரிக் இப்னு ஸியாத் தந்தை. தந்தை இறந்ததன் பின்பு, வாழ்க்கையின் வசந்த காலத்தில் வீற்றிருந்த தாரிக் பின் ஸியாத் அவர்கள், தன்னுடைய இளமைக்காலத்தை வடக்கு ஆப்ரிக்க முஸ்லிம் படையில் இணைந்து தனது உன்னத சேவையை ஆரம்பித்தார். இளமையின் வேகம்.., அதனுடன் இணைந்த இறைநம்பிக்கையின் உறுதி, இவை ஆப்ரிக்க மக்களின் மனங்களில் இஸ்லாத்தின் தூதுத்துவத்தை நிரப்புவதற்கான பணிகளில் முனைப்புடன் இவரை ஈடுபட வைத்தது.

தாரிக் இப்னு ஸியாத் அவர்களின் இளமைக்கால அர்ப்பணிப்புகளால் கவரப்பட்ட ஆட்சியாளர் மூஸா இப்னு நுஸைர், டேன்ஜியர் என்ற பகுதிகளை ரோமர் வசமிருந்து கைப்பற்றிக் கொண்டவுடன் அந்தப் பகுதிக்கு, அதாவது இன்றைய மொராக்கோ பகுதிக்கு தாரிக் பின் ஸியாத் அவர்களை ஆளுநராக நியமித்தார். ரோமப் பேரரசின் சியூடா பகுதிக்கு கவர்னராக இருந்த ஜுலியன் அவர்களைச் சந்தித்துப் பேசும் அதிகாரத்தை ஆட்சியாளர் மூஸா பின் நுஸைர் அவர்கள் தாரிக் பின் ஸியாத் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் புதிய அத்தியாயம் ஒன்று ஆரம்பமானது.

ஸ்nபியினின் உண்மையான ஆட்சியாளர்களிடமிருந்து, ரோட்ரிகஸ் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டது முதல் ஸ்பெயினில் கொடுமையான ஆட்சி முறை அரங்கேற ஆரம்பித்தது என்று ஸ்பெயின் வரலாறு கூறுகின்றது. நாம் ஏற்கனவே பார்த்த கவர்னர் ஜுலியன், தன்னுடைய மகளை டொலிடோ நகரில் அமைந்துள்ள ஸ்பானிஸ் அவைக்கு தனது மகளை கல்வி கற்றுக் கொள்வதற்காக அனுப்பி வைத்திருந்தார். அரச வம்சத்தவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற இங்கிதம் கூடத் தெரியாத ரோட்ரிகஸ், ஜுலியன் மகளைக் கைது செய்து சிறையிலடைத்து விட்டார். தனது மகள் சிறையிலடைக்கப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்ட ஜுலியன் சினத்தால் கொதித்தெழுந்தார். ரோட்ரிகஸ் மன்னனுக்கு சரியான பாடம் கற்பித்துக் கொடுக்க விரும்பிய ஜுலியன், தங்களுக்கு மிகவும் சமீபமாகவும், இன்னும் வடக்கு ஆப்ரிக்கா தேசம் முழுவதையும் தங்களது ஆளுகையின் கீழ் கொண்டு வந்திருக்கின்ற அரபுக்களிடமிருந்து உதவியைப் பெற்று அதன் மூலம் ரோட்ரிகஸ் மன்னனுக்கு பாடம் கற்பித்துக் கொடுக்க விரும்பிய ஜுலியன், தன்னுடைய திட்டத்திற்காக ஸ்பானிஷ் அரசவை அங்கத்தவர்களை சம்மதிக்கவும் வைத்து விட்டார்.

எனவே, இது குறித்த திட்டத்தை ஜுலியன் தாரிக் இப்னு ஸியாத் அவர்களிடம் கலந்தாலோசனை செய்த பொழுது, இது குறித்த விஷயத்தை தன்னுடைய அமீரும் துனிசியாவின் ஆட்சியாளராகவும் உள்ள மூஸா பின் நுஸைர் அவர்களிடம் பேசும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

இதற்கு முன்னதாகவே, ஸ்பெயினின் ஊடாக இஸ்லாத்தை எவ்வாறு எடுத்துச் செல்வது என்ற திட்டம் ஒன்று குறித்து, மூஸா பின் நுஸைர் அவர்களும் தாரிக் பின் ஸியாத் அவர்களும் கலந்தாலோசனை செய்து, அதற்கான திட்டத்தை எவ்வாறு வரையறை செய்து கொள்வதென்ற ஆலோசனையில் இருந்தனர்.

இந்த நிலையில், ஜுலியன் அவர்களது வேண்டுகோளானது, ஸ்பெயினைப் பற்றி அறிந்து கொள்வதற்கானதொரு நல்வாய்ப்பை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த நிலையில், ஸ்பெயின் மீது படையெடுப்பு நடத்துவதற்குண்டான சம்மதத்தைப் பெற்றுக் கொள்வதற்காக முழு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைமைப்பீடமாக அன்றிருந்த சிரியாவின் டமாஸ்கஸ் நகருக்கு ஒரு கடிதம் ஒன்றை, மூஸா பின் நுஸைர் அவர்கள் அனுப்பி வைத்தார்கள். போர்க்கலைகளில் நல்ல அனுபவம் வாய்ந்த கலீஃபா அவர்கள், மூஸா பின் நுஸைர் அவர்களின் திட்;டத்தினை அங்கீகரித்து, படையெடுப்பு நடவடிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்ததோடு, சில ஆலோசனைகளையும் வழங்கினார். அதன்படி, முழுமையான போர் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக சிறு படை ஒன்றை ஸ்பெயினுக்கு அனுப்பி வைத்து, நிலைமைகளை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தினார்.

இந்த ஆலோசனையின் அடிப்படையில், தரீஃப் என்பவரது தலைமையில் 400 வீரர்கள் கொண்டதொரு சிறு படையொன்று தயார்படுத்தப்பட்டது. இந்த முதல்படை வெற்றிகரமாகச் சென்று திரும்பி வந்தது. இந்த முதல் படையெடுப்பு வெற்றிகரமாக அமைந்து விட்டதையடுத்து, முழுமையான நுழைவுக்கான தயாரிப்பு ஆரம்பமானது.

இந்த நிலையில், ஜுலியன் அவர்களது வேண்டுகோளானது, ஸ்பெயினைப் பற்றி அறிந்து கொள்வதற்கானதொரு நல்வாய்ப்பை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த நிலையில், ஸ்பெயின் மீது படையெடுப்பு நடத்துவதற்குண்டான சம்மதத்தைப் பெற்றுக் கொள்வதற்காக முழு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைமைப்பீடமாக அன்றிருந்த சிரியாவின் டமாஸ்கஸ் நகருக்கு ஒரு கடிதம் ஒன்றை, மூஸா பின் நுஸைர் அவர்கள் அனுப்பி வைத்தார்கள். போர்க்கலைகளில் நல்ல அனுபவம் வாய்ந்த கலீஃபா அவர்கள், மூஸா பின் நுஸைர் அவர்களின் திட்;டத்தினை அங்கீகரித்து, படையெடுப்பு நடவடிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்ததோடு, சில ஆலோசனைகளையும் வழங்கினார். அதன்படி, முழுமையான போர் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக சிறு படை ஒன்றை ஸ்பெயினுக்கு அனுப்பி வைத்து, நிலைமைகளை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தினார்.

இந்த ஆலோசனையின் அடிப்படையில், தரீஃப் என்பவரது தலைமையில் 400 வீரர்கள் கொண்டதொரு சிறு படையொன்று தயார்படுத்தப்பட்டது. இந்த முதல்படை வெற்றிகரமாகச் சென்று திரும்பி வந்தது. இந்த முதல் படையெடுப்பு வெற்றிகரமாக அமைந்து விட்டதையடுத்து, முழுமையான நுழைவுக்கான தயாரிப்பு ஆரம்பமானது. இந்த முதன்மைப் படைக்கு தாரிக் பின் ஸியாத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு, அவரது தலைமையின் கீழ் 5000 வீரர்கள் போர் செய்வதற்குத் தயார் செய்யப்பட்டு, ஸ்nபியினின் முடியாட்சியைக் காக்கும் பொறுட்டு களமிறங்கத் தயாராக இருந்தனர். தாரிக் பின் ஸியாத் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கென, பெர்பர்கள் மற்றும் அரபுகளைக் கொண்ட சிறப்பு ஆலோசனைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. மேலும், இந்தப் படைகள் யாவும் ஸ்பெயினின் கடற்கரையை அடைவதற்கு உதவியாக, ஜுலியன் தனது கப்பல் படைகளைக் கொடுத்து உதவியதோடல்லாமல், அவனே முன்னின்று ஸ்பெயின் நாட்டினுள் படைநகர்வதற்குண்டான வழியையும் காட்டிச் சென்றான். மேலும், இந்தக் கடற்போரானது பல வகையிலும் முக்கியத்துவம் பெற்றதாகவும், போர் வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற திட்டமிடலையும் கொண்டதாகவும் அமைந்து விட்டது. அதன் காரணமென்னவெனில், முஸ்லிம் படைகள் தங்களது சொந்த கப்பலின் மூலமாக ஸ்பெயின் கடற்கரையை அடைந்திருந்தார்களென்றால், எதிரிகளின் கண்களுக்கு மிகவும் எளிதாக இவர்களது வருகை தெரிந்திருக்க வாய்ப்பிருந்தது. இந்த வாய்ப்பை எதிரிகள் இழந்ததோடல்லாமல், முஸ்லிம்கள் ஒட்டு மொத்தமாக படையை நகர்த்தாமல், சிறிய சிறிய கும்பலாக கடலைக் கடந்து பின் ஸ்பெயினுக்குள் சென்று, அங்கிருந்ததொரு குன்றின் கீழ் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டனர். இந்தக் குன்று தான் இன்றைக்கு ஜிப்ரால்டர் (தாரிக் குன்று - ஆழரவெ ழக வுயசஙை) என்றழைக்கப்படுகின்றது. இந்தச் சாதனையை முஸ்லிம்கள் ஹிஜ்ரி 92 ல் அதாவது கி.பி.711 ல் நடத்திக் காட்டினர்.

இந்தப் போரின் முக்கியத்துவத்தையும், அதில் ஈடுபட்ட வீரர்களின் உளப்பாங்கையும் ஒருங்கிணைப்பதற்காக முஸ்லிம்களின் படைத்தளபதியாகிய தாரிக் பின் ஸியாத் அவர்கள் கையாண்ட முறைதான் இன்றைக்கும் போர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்பட்டு, காலங் கடந்தபின்பும் ஞாபகமூட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது

வீரர்கள் அனைவரும் கப்பலில் இருந்து இறங்கியவுடன், அவர்களைச் சுமந்து வந்த கப்பல்கள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தி விடுமாறு தாரிக் பின் ஸியாத் அவர்கள் தனது படையினருக்குக் கட்டளையிட்டார்கள். அதன்படியே அந்தக் கப்பல்கள் யாவும் ஐபீரியன் தீபகற்பத்தில் வைத்துக் கொளுத்தப்பட்டது. அதன்பின் வீரர்களிடையே தாரிக் பின் ஸியாத் அவர்கள் ஒரு உணர்ச்சிப்பூர்வமான உரை ஒன்றை நிகழ்த்தினார்கள்.

ஓ என்னருமை மக்களே..! யுத்த பூமிக்கு வந்திருப்பவர்களே..! உங்களுக்குப் பின்னால் கடல்.., உங்களுக்கு முன்னால் நிற்பதோ எதிரிகள்..! யுத்தம் ஒன்றே இப்பொழுது மிச்சம்..! இறைவன் மீது சத்தியமாக..! (இந்த நிலையில் நீங்கள்) பொறுமையோடும் இன்னும் இறைநம்பிக்கையில் உறுதியோடும் இருப்பதை அன்றி வேறெதுவும் உங்களுக்கு உதவப் போவதில்லை. வெற்றி அல்லது வீரமரணம், இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளுங்கள் என்றார்.

ரமளான் மாதம் 28 ம் நாள் ஞாயிற்றுக் கிழமை, அதவாது கி.பி. ஜுலை, 19, 711 அன்று, முஸ்லிம் படைகள் தாரிக் பின் ஸியாத் அவர்களின் தலைமையின் கீழும், ஸ்பானியப் படைகள் ரோட்ரிகஸ் தலைமயின் கீழும் களமிறங்கினர். இப்பொழுது முஸ்லிம்களுக்கு உதவுவதற்காக மேலும் 5000 பேர் கொண்ட படையை, முஸ்லிம்களுக்குச் சொந்தமான கப்பலிலேயே அனுப்பி வைக்கப்பட்டனர். இப்பொழுது ஜுலியன் தலைமையின் கீழ் இயங்கும் ஸ்பானியப் படையினர் முஸ்லிம்களைப் பற்றிய நன்மதிப்பை தங்களது சொந்த நாட்டு மக்கள் மத்தியில் பரப்ப ஆரம்பித்தனர்.

முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பாளர்களும் அல்லர் அல்லது நம்மை ஆக்கிரமித்து தங்களது சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த வந்தவர்களுமல்லர். மாறாக, அவர்கள்.., சாந்தியையும் சமாதானத்தையும் இன்னும் விடுதலையையும் பெற்றுத் தருவதற்காக வந்துள்ள சமாதானத்தூதுவர்கள் என்ற நற்சான்றினை மக்கள் மத்தியில் பரப்பினார்கள்.

இந்தச் செய்தியானது ரோட்ரிகஸ் தலைமையின் கீழ் வந்திருந்த இராணுவத்தினரிடையே நல்ல தாக்கத்தினை ஏற்படுத்தியது. ரோட்ரிகஸ் தலைமையின் கீழ் வந்திருந்த ஸ்பானிய வீரர்கள் படையிலிருந்து பின்வாங்க ஆரம்பித்தனர். ஸ்பானியப் படைகளுக்குள் இப்பொழுது குழப்பம் ஆரம்பமானது. குழப்பத்தின் விளைவாக ஸ்பானிய வீரர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள படையை விட்டும் விலகி ஓடினார்கள். இருப்பினும், போர் தொடர்ந்தது, இறுதியில் படைகளை விட்டு விட்டு ரோட்ரிகஸ் தப்பி ஓடி விட்டான். இதன் மூலம் ஐபீரியன் தீபகற்பத்தில் முஸ்லிம்களின் முதல் போர் வெற்றிகரமாக முடிந்தது. இதன் பின் மீண்டும் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து படைகள் ஸ்பெயினுக்குள் வந்து குவிந்தார்கள். இந்த முறை மூஸா பின் நுஸைர் அவர்களே நிவாரணப் படையை முன்னின்று நடத்தி வந்தார்கள்.

படை எடுப்பு நடத்தி வந்த 14 மாதங்களுக்குள் ஸ்பானிய தேசத்தின் மிக முக்கிய நகரங்களான டொலிடோ, செவில்லி, மோர்டா மற்றும் பல நகரங்கள் முஸ்லிம்களின் கைவசமாகின. இன்னும் இரண்டே வருடத்தில் குறிப்பாக அனைத்து ஸ்பானிய நகரங்களும் முஸ்லிம்களின் கைவசம் ஆகின. இந்த நிலை கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் தொடர்ந்தன.

முஸ்லிம்களின் இந்தப் படையெடுப்பின் மூலமாக, ஐரோப்பாவானது இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல, முஸ்லிம்களின் மூலமாக கலாச்சாரப் புத்துணர்வைப் பெற்றுக் கொண்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள். இதன் மூலம், சீனாவின் கிழக்குப் பகுதி முதல், இந்தியாவின் மேற்குப் பகுதி உண்டான பகுதிகள் உள்ளிட்ட நிலப்பகுதிகள் மற்றும் அவர்கள் தங்கள் மேன்மையான கலாச்சாரத்தை அட்லாண்டிக் பெருங்கடல் வரைக்கும் கொண்டு வந்தார்கள்.

முஸ்லிம்களின் ஆளுகையின் கீழ் ஸ்பெயின் வந்ததன் பின், நிர்மாணிக்கப்பட்ட இஸ்லாமியக் கல்விக் கூடங்களிலிருந்து கல்வியைக் கற்றுக் கொள்வதற்காக ஐரோப்பாவின் அறிஞர்கள் விரைந்தனர். இதன் மூலம் பல அறிஞர்களை உருவாக்கிய பெருமையை முஸ்லிம்களின் கல்விக் கூடங்கள் பெற்றுக் கொண்டன.

இன்றைக்கு ஸ்பெயின் முஸ்லிம்களின் கரங்களிலிருந்து சென்று விட்டாலும், ஐரோப்பிய உலகத்திற்கு நாகரீகத்தை வழங்கியதற்காகவும், வரலாற்றுச் சிறப்பு மிக்க தளங்களை விட்டுச் சென்றமைக்காகவும், அதாவது கிரணடா, கார்டோபா, செவில்லி மற்றும் பல நகரங்களில் இன்றளவும் முஸ்லிம்கள் ஏற்படுத்திய வரலாற்றுச் சுவடுகள் நினைவுச் சின்னங்களாக நிலைத்து நின்று கொண்டிருக்கின்றன. இதற்காக அவர்கள் என்றென்றும் முஸ்லிம்களுக்கு நன்றிக் கடன் செலுத்தக் கடமைப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். இந்த வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பார்வையிடுதற்காக வருடந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நகரங்களுக்கு வந்து சென்ற வண்ணம் இருக்கின்றார்கள்.

இத்தகைய அழியாத வரலாற்றுச் சுவடுகளை ஏற்படுத்தி விட்டுச் சென்றமைக்கான காரணகர்த்தவாக, இன்றளவுக்கும் வரலாற்று நாயகராக தாரிக் பின் ஸியாத் நினைவு கூறப்பட்டுக் கொண்டிருக்கின்றார். அதுமட்டுமல்ல, இஸ்லாமிய நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் ஸ்பெயின் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் சென்றதில், தாரிக் பின் ஸியாதின் பங்கு மகத்தானது.

ஆம்..! காரிருள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த ஐரோப்பாவுக்கு இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகளை அறிமுகப்படுத்தி வைத்த பெருமை தாரிக் பின் ஸியாத் அவர்களையே சாரும்..!


Comments

Popular posts from this blog

சிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )

இளைஞனே வா!
உன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்

எதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.

The Salesman

Emad, Rana தம்பதியினர் ஏற்கனவே வசித்துக்கொண்டிருந்த Apartment இடியும் அபாயம் காரணமாக அதிலுள்ளவர்கள் வெளியேற்றப்பட விரைவாக வேறு இடம் தேட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். இருவரும் தயாரிப்பில் இருக்கும் Arthur Miller இன் The Death of Salesman நாடகத்தில் முக்கியக் காதாப்பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நிலையில் நண்பர் Babak அவர்களுக்கான ஒரு இடத்தை தேடிக் கொடுக்கிறான். புது இடத்துக்கு குடிபெயரும் அவர்களது வாழ்க்கையில் எதிர்பாராது ஏற்படும் பிரச்சினையால் இருவருக்கும் இடையில் ஏற்படும் மாற்றங்கள், அதற்கான தீர்வகள் தான் Salesman.
அஷ்கர் பர்ஹாதியினுடைய படங்களில் கதாப்பாத்திரம் பார்வையாளனுக்கு நெருக்கமானதாக இருக்கும். ஒரு பிரச்சினைக்குப் பின்னால் அன்றாட வாழ்க்கையைக் கடந்து செல்லும் குறிப்பிட்ட பாத்திரத்தின் உளவியலை கச்சிதமாக Visual ல் கொண்டுவந்திருப்பார். Fire wok Wednesday, About ally, The past, Separation  இப்போது The Salesman.

குறிப்பிட்ட பிரச்சினையை அன்றாட செயற்பாடுகளுக்கு மத்தியில் சாதாரண மனிதன் எப்படி எதிர்கொள்வான் அதன் எதிர்வினை எப்படியாக இருக்கும் என்பதெல்லாம் கச்சிதமாகக்…

ராமர்களுக்கு இன்று ரத்தமில்லை

வைகாசி வந்தால்
முப்பத்து மூன்று
முடிகிறது அவளுக்கு

அவள் திருமணத்தை நிச்சயிக்க நினைத்த
நாளில் மட்டும்
சொர்க்கத்திற்கு
விடுமுறை போலும்


தன் பெயரைக்-
கல்யாணப் பத்திரிகையிலேனும்
அச்சில் பார்க்க
அவள் ஆசைப்பட்டாள்
ஆனால்-
அச்சு எந்திரங்களைப் போலவே
மனித எந்திரங்களுக்கும்
மனசு இல்லை

பாவம்
தன்
கண்ணீர் முத்துக்களைக்
கோக்கத்தான்
நொந்து நொந்து அவள்
நூலாய் இளைத்தாளோ?

மாலையிட மாட்டார்கள்
ஆனால் எல்லா வாலிபரும்
அவளை
பெண்பார்ப்பது போல்தான்
பார்க்கிறார்கள்

முன்னொரு பிராயத்தில்…
பூக்களின்
அணிவகுப்பு மரியாதையைத்
தன் கூந்தலில் ஏற்றுக் கொண்டாள்

இன்றும்தான் சூடுகிறாள்
இது
தான் விதவையல்ல என்று
வெளிக்காட்ட மட்டுந்தான்

முன்பெல்லாம்
கனவுகளுக்காகவே
உறங்கினாள்
இப்போதோ
உறக்கமே
ஒரு கனவாகி விட்டது

முன்பெல்லாம்…
எப்போதாவது
சட்டென்று தோன்றி
மறையும் அந்த ஜன்னல் மின்னல்

இப்போது
அசையாமல் உட்கார்ந்து
ஜன்னலுக்குத்
தானும் ஒரு
கம்பியானாள்

சிரிப்பு என்பது
அவளுக்கு
இதழில் இல்லை
ஞாபகத்தில் இருக்கிறது

மன்மதன்
அவன்மீது எய்த
மலர்க்கணைகள்
இன்று
சுள்ளிகளாகிவிட்டன.

முன்பெல்லாம்
ஆண்டாள் படிக்கச் சொன்ன
அப்பா
இன்று
பட்டினத்தாரும்
பரவாயில்லை என்கிறார்

அவள்
பெருமூச்சு வெப்பத்தில்
ம…