Skip to main content

வெற்றியாளனும் தோல்வியாளனும்.


*வெற்றி பெறுபவன் எப்போதும் தீர்வு பற்றியே 
  சிந்திக்கிறான்.
*தோல்வியடைபவன் பிரச்சினை பற்றியே சிந்திக்கிறான்.

*வெற்றியாளனின் சிந்தனைகள் வற்றுவதில்லை.
*தோல்வியடைபவன் முன்வைக்கும் நியாயங்கள் முடிவடைவதில்லை.

*வெற்றியாளன் ஏனையோருக்கு உதவுகிறான்.
*தோற்றுப் போபவன் மற்றவர்களிடமிருந்து உதவியை எதிர்பார்க்கிறான்.

*வெற்றியாளன் எல்லாப்பிரச்சினைகளிலும் தீர்வைக் காண்கின்றான்.
*தோல்வியாளன் எல்லாத் தீர்வுகளிலும் பிரச்சினைகளைக் காண்கின்றான்.

*வெற்றியாளன்  வெல்லுவான் - தீர்வு கஷ்டம் தான். எனினும் முடியும்.
*தோல்வியடைபவன் சொல்லுவான் - தீர்வு முடியுமானது என்றாலும் அது    
  கஷ்ட்டம்.

*வெற்றியாளனிடத்தில் அவன் சாத்தியப்படுத்த நினைக்கும் கனவுகள்  
  இருக்கும்.
*தோல்வியாளனிடத்தில் ஊகங்களும் அதனை கிதறடிக்கும் கற்பனைக்
  கனவுகளும் காணப்படும்.

*வெற்றியாளன் கூறுவான் “உன்னுடன் மக்கள் எப்படி நடந்து கொள்ள
  வேண்டும் என்று விரும்புகிறாயோ அது போலவே மக்களுடன் நீ நடந்து 
  கொள்”.
*தோல்வியடைபவன் கூறுவான் “மக்கள் உன்னை சூழ்ச்சி செய்து ஏமாற்ற
  முன் மக்களை சூழ்ச்சி செய்து ஏமாற்றி விடு.

*வெற்றியாளன் தனது வேலையில் எதிர்பார்ப்பைக் காண்பான்.
*தோல்வியடைபவன் தனது பணியில் நோவினையைக் காண்பான்.

*வெற்றியாளன் எதிர்காலத்தைப் பார்க்கிறான். அங்கு முடியுமானவற்றைப்
  பற்றி சிந்திக்கிறான்.
*தோல்வியடைபவன் இறந்த காலத்தைப் பார்க்கிறான். அங்கு
  சாத்தியமில்லாமல் போனதைப் பற்றியே சிந்திக்கிறான்.

*வெற்றியாளன் பேசுபவற்றை தெரிவு செய்கிறான்.
*தோல்விடைபவன் தெரிவு செய்வதைப் பேசுகிறான்.

*வெற்றியாளன்  மிருதுவான மொழியில் பலமாக கலந்துரையாடுகிறான்.
*தோல்வியடைபவன் கடுமையான தொணியில் பலவீனமாக
  கலந்துரையாடுகிறான்.

*வெற்றியாளன் நிகழ்வுகளை உருவாக்குகிறான்.
*தோல்வியடைபவனை நிகழ்வுகள் உருவாக்குகின்றன.

  இதன் வேறுபாடுகளிலிருந்து நீங்கள் இவ்விருவரில் யார் என்பதை 
  தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

 
நன்றி வைகறை

Comments

Popular posts from this blog

சிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )

இளைஞனே வா!
உன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்

எதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.

ராமர்களுக்கு இன்று ரத்தமில்லை

வைகாசி வந்தால்
முப்பத்து மூன்று
முடிகிறது அவளுக்கு

அவள் திருமணத்தை நிச்சயிக்க நினைத்த
நாளில் மட்டும்
சொர்க்கத்திற்கு
விடுமுறை போலும்


தன் பெயரைக்-
கல்யாணப் பத்திரிகையிலேனும்
அச்சில் பார்க்க
அவள் ஆசைப்பட்டாள்
ஆனால்-
அச்சு எந்திரங்களைப் போலவே
மனித எந்திரங்களுக்கும்
மனசு இல்லை

பாவம்
தன்
கண்ணீர் முத்துக்களைக்
கோக்கத்தான்
நொந்து நொந்து அவள்
நூலாய் இளைத்தாளோ?

மாலையிட மாட்டார்கள்
ஆனால் எல்லா வாலிபரும்
அவளை
பெண்பார்ப்பது போல்தான்
பார்க்கிறார்கள்

முன்னொரு பிராயத்தில்…
பூக்களின்
அணிவகுப்பு மரியாதையைத்
தன் கூந்தலில் ஏற்றுக் கொண்டாள்

இன்றும்தான் சூடுகிறாள்
இது
தான் விதவையல்ல என்று
வெளிக்காட்ட மட்டுந்தான்

முன்பெல்லாம்
கனவுகளுக்காகவே
உறங்கினாள்
இப்போதோ
உறக்கமே
ஒரு கனவாகி விட்டது

முன்பெல்லாம்…
எப்போதாவது
சட்டென்று தோன்றி
மறையும் அந்த ஜன்னல் மின்னல்

இப்போது
அசையாமல் உட்கார்ந்து
ஜன்னலுக்குத்
தானும் ஒரு
கம்பியானாள்

சிரிப்பு என்பது
அவளுக்கு
இதழில் இல்லை
ஞாபகத்தில் இருக்கிறது

மன்மதன்
அவன்மீது எய்த
மலர்க்கணைகள்
இன்று
சுள்ளிகளாகிவிட்டன.

முன்பெல்லாம்
ஆண்டாள் படிக்கச் சொன்ன
அப்பா
இன்று
பட்டினத்தாரும்
பரவாயில்லை என்கிறார்

அவள்
பெருமூச்சு வெப்பத்தில்
ம…

உனக்காக வாழ்ந்து பார், உன்னோடு வாழ்ந்து பார்

வாழ்வு எனும் அரும்பெரும் பொக்கிஷம் வற்றாத ஊற்றுப்போல தன்னையும் சூழலையும் பசுமையாக வைத்திருக்கும். வாழ்வு என்றுமே வசந்த காலமாய் பூத்துக் குலுங்காது. கோடை காலமும் இலையுதிர் பருவமும் வாழ்வை கடந்தே செல்கின்றன. வாழ்வை உயிர்ப்பிக்கவும் ரசிக்கவும் பலர் மறந்தே போகின்றனர். நிறையப்பேர் வாழ்வின் யதார்த்தங்களை புரிவதற்கு தயாரில்லை. சகலதும் துக்கமெனக் கருதி கண்ணீரோடு கழிப்போரும் உள்ளனர். உச்ச இன்பங்களுக்கான திறந்த களம் தான் வாழ்வு என்று நினைப்போரும் உள்ளனர்.