Skip to main content

சிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )


இளைஞனே வா!
உன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்

எதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.இல்லாத ஓர் ஊருக்கு யாரும் செல்லாத ஒரு வழியில் நீ தூக்கதில் நடப்பவனாய்த் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறாய்.

மயில் தோகைகளைப் பரப்பி மல்லிகைப்பூத் தெளித்த சாலை உனது கனவாக இருக்கிறது.
ஆனால் காலில் ஆணியடித்துக் கொண்டு முட்களின் மீது நடப்பது தான் உனது எதார்த்தமாக இருக்கிறது.

நாளையின் நம்பிக்கைச் சுடர் நீதான் என்று உன்னைப் போலி வார்த்தைகளால் புகழ மாட்டேன்.
ஏனென்றால் - எரிந்து கொண்டிருப்பவனே நீ தானே!

உனக்கும் உன் பெற்றோருக்கும் உறவு சரியில்லை.

உனக்கும் உன் ஆசிரியருக்கும் உறவு சுகமில்லை.

ஒரு கிழவியைக் கல்யாணம் செய்துவைத்த மாதிரி கல்வி உனக்குக் கசப்பாக இருக்கிறது.

உன்னைப் பயன்படுத்தும் அரசியல் தலைவர்கள் இருக்கிறார்களே தவிர உனக்குப் பயன்படும் சமூகத் தலைவராக இல்லை.

எங்கே போகிறோம் என்று தெரியாமல் அலைகளின் முதுகில் சவாரி செய்யும் குமிழிகள் மாதிரி நீயும் குறிக் கோளில்லாமல் போய்க்கொண்டிருக்கிறாய்.

உன் முதுகுக்குப் பின்னால் பள்ளம் , முகத்துக்கு முன்னால் இருட்டு.

கண்பார்வை உனக்கு இருக்கிறதா இல்லையா என்று சோதித்துப் பார்க்கக் கூட அந்த இருட்டு உனக்கு சந்தர்ப்பம் தரவில்லை.

ஆட்டுவித்தால் ஆடும் பொம்மைகளாய் , சாவிகொடுத்தால் சுற்றும் சக்கரங்களாய் நம் இளைஞர்கள் அடுத்த தலைமுறை நகராத கூவமாய் நசிந்து விடும்.
நதிக்கே நங்கூரம் பாய்ச்சிய அதிசயம் நம் ஊரில் மட்டும் தான்.

இளைஞனே உன்னைப்பற்றி எனக்கு வருகிற தகவல்கள் என் குதூகலத்திற்கே குழி தோண்டுகின்றன.
எங்கே போகிறோம் இளைஞர்களே!

ஒரு கல்லூரி விடுதிக்கு இரவில் விலை மகளிர் வருவதாய் என் காதுக்கு வருகிறது.
பாவிகளே! அது கல்விச் சாலையா? கலவிச் சாலையா?

வேறொரு விடுதியில் ஒரு மாணவியின் கைப்பையில் போதை மாத்திரைகளும் , கர்ப்பத்தடை மாத்திரைகளும் சரிவிகிதத்தில் இருந்ததாய் சாட்சி கிடைத்திருக்கிறது.

அடி பாவி பெண்ணே! நீ மனத்தை நிரப்ப வந்தாயா? மடியை நிரப்ப வந்தாயா?

இந்த இளைய தலைமுறை தடுமாறிக் கொண்டிருப்பதற்கு யார் பொறுப்பு?

இவர்கள் இப்படிக் கனாக்காரர்களாய் திரிவதற்கு யார் காரணம்?

அவர்களுக்குள் அந்த ஆடை காட்டாத ஆசை வளர்த்து விட்டது எது?

வாழ்க்கையின் எதார்த்தம் பார்த்து இப்படி அஞ்சும் மனோபாவம் எப்படி வந்தது?

இவர்களின் முதுகெலும்பை திருடிக் கொண்டது யார்?

இவர்கள் உள்ளீடற்றவர்களாய் உறுமாறியது ஏன்?

உங்களை நெறிப்படுத்தவும் , சரிப்படுத்தவும் கூடிய சக்தி எது?


Comments

Popular posts from this blog

The Salesman

Emad, Rana தம்பதியினர் ஏற்கனவே வசித்துக்கொண்டிருந்த Apartment இடியும் அபாயம் காரணமாக அதிலுள்ளவர்கள் வெளியேற்றப்பட விரைவாக வேறு இடம் தேட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். இருவரும் தயாரிப்பில் இருக்கும் Arthur Miller இன் The Death of Salesman நாடகத்தில் முக்கியக் காதாப்பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நிலையில் நண்பர் Babak அவர்களுக்கான ஒரு இடத்தை தேடிக் கொடுக்கிறான். புது இடத்துக்கு குடிபெயரும் அவர்களது வாழ்க்கையில் எதிர்பாராது ஏற்படும் பிரச்சினையால் இருவருக்கும் இடையில் ஏற்படும் மாற்றங்கள், அதற்கான தீர்வகள் தான் Salesman.
அஷ்கர் பர்ஹாதியினுடைய படங்களில் கதாப்பாத்திரம் பார்வையாளனுக்கு நெருக்கமானதாக இருக்கும். ஒரு பிரச்சினைக்குப் பின்னால் அன்றாட வாழ்க்கையைக் கடந்து செல்லும் குறிப்பிட்ட பாத்திரத்தின் உளவியலை கச்சிதமாக Visual ல் கொண்டுவந்திருப்பார். Fire wok Wednesday, About ally, The past, Separation  இப்போது The Salesman.

குறிப்பிட்ட பிரச்சினையை அன்றாட செயற்பாடுகளுக்கு மத்தியில் சாதாரண மனிதன் எப்படி எதிர்கொள்வான் அதன் எதிர்வினை எப்படியாக இருக்கும் என்பதெல்லாம் கச்சிதமாகக்…

ராமர்களுக்கு இன்று ரத்தமில்லை

வைகாசி வந்தால்
முப்பத்து மூன்று
முடிகிறது அவளுக்கு

அவள் திருமணத்தை நிச்சயிக்க நினைத்த
நாளில் மட்டும்
சொர்க்கத்திற்கு
விடுமுறை போலும்


தன் பெயரைக்-
கல்யாணப் பத்திரிகையிலேனும்
அச்சில் பார்க்க
அவள் ஆசைப்பட்டாள்
ஆனால்-
அச்சு எந்திரங்களைப் போலவே
மனித எந்திரங்களுக்கும்
மனசு இல்லை

பாவம்
தன்
கண்ணீர் முத்துக்களைக்
கோக்கத்தான்
நொந்து நொந்து அவள்
நூலாய் இளைத்தாளோ?

மாலையிட மாட்டார்கள்
ஆனால் எல்லா வாலிபரும்
அவளை
பெண்பார்ப்பது போல்தான்
பார்க்கிறார்கள்

முன்னொரு பிராயத்தில்…
பூக்களின்
அணிவகுப்பு மரியாதையைத்
தன் கூந்தலில் ஏற்றுக் கொண்டாள்

இன்றும்தான் சூடுகிறாள்
இது
தான் விதவையல்ல என்று
வெளிக்காட்ட மட்டுந்தான்

முன்பெல்லாம்
கனவுகளுக்காகவே
உறங்கினாள்
இப்போதோ
உறக்கமே
ஒரு கனவாகி விட்டது

முன்பெல்லாம்…
எப்போதாவது
சட்டென்று தோன்றி
மறையும் அந்த ஜன்னல் மின்னல்

இப்போது
அசையாமல் உட்கார்ந்து
ஜன்னலுக்குத்
தானும் ஒரு
கம்பியானாள்

சிரிப்பு என்பது
அவளுக்கு
இதழில் இல்லை
ஞாபகத்தில் இருக்கிறது

மன்மதன்
அவன்மீது எய்த
மலர்க்கணைகள்
இன்று
சுள்ளிகளாகிவிட்டன.

முன்பெல்லாம்
ஆண்டாள் படிக்கச் சொன்ன
அப்பா
இன்று
பட்டினத்தாரும்
பரவாயில்லை என்கிறார்

அவள்
பெருமூச்சு வெப்பத்தில்
ம…