Skip to main content

Posts

Showing posts from 2011

தாரிக் இப்னு ஸியாத்

மத்தியத் தரைக்கடல் வழியாக அட்லாண்டிக் மகா சமுத்திரத்திற்குள் நுழையும் ஒவ்வொரு கப்பலும் ஜிப்ரால்டர் ஜலசந்தியைக் கடந்தே சென்றாக வேண்டும் அல்லது அங்கு சிறிது தாமதித்து இளைப்பாறிச் செல்ல வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த ஜிப்ரால்டர் ஜலசந்தியானது ஐரோப்பாவின் தென்மேற்கு முனையில் மற்றும் மொராக்கோவுக்கு எதிர்புறமாக அமைந்துள்ளது.

சரி..! ஜிப்ரால்டர் என்று ஏன் அழைக்கப்படுகின்றது என்று தெரியுமா உங்களுக்கு?

கூகிள் உருவான கதை.

ஷெல் என்பவர் 37 வயதுப் பெண்மணி. ஒரு பெரிய அமேரிக்க நிருவனத்தில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில்
ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் நிறுவனத்திற்கு பல லட்சம் டொலர் நஷ்ட்டம். தன் தவறு புரிந்தவுடன் தயங்கிக் கொண்டே நிறுவன உரிமையாளரிடம் விடயத்தைத் தெரிவித்தார்.

மன அழுத்தமும் அதன் விளைவுகளும்.

மன அழுத்தம் பற்றி நம்மில் பலரும் அறிந்திருப்பதுடன் அதனை உணர்ந்திருப்பர். ஏனெனில், இன்றைய சூழலில் இது தவிர்க்கவியலாதது.
நீங்கள் உங்களுக்குச் சாதகமான நடவடிக்கை என நினைக்கும் காரியங்களால் கூட உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கலாம்.

எடுத்துக்காட்டாக உங்கள் பதவி உயர்வு கூட மன அழுத்தத்தைக் கொண்டு வரலாம். மேலும் விடுமுறை, திருமணம் போன்றவையும் இதில்
அடங்கும். இவையன்றி உங்களுக்கு இழப்பு ஏற்படுத்தும் காரியங்களாலும் கூட மன அழுத்தம் ஏற்படலாம். எடுத்துக்காட்டாக வேலையிழப்பு,விவாகரத்து, நேசித்தவர்களின் மரணம் போன்றவையும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம்.


ஓர் ஆசிரியரின் குறிப்பிலிருந்து...

ரு நாள் ஆறாம் வகுப்பில் அறிவியல் பாடம் எடுக்கச் சென்றேன். அன்றைய பாடத்தை நடத்த முனைந்தேன். சிறிது நேரம் நடத்தியதும் மாணவர்கள் மிகவும் சோர்ந்து காணப்பட்டனர். அவர்களை உற்சாகப்படுத்த எண்ணி, ஓரு வித்தியாசமான தேர்வு வைக்க முடிவு செய்தேன்.

வெற்றியாளனும் தோல்வியாளனும்.

*வெற்றி பெறுபவன் எப்போதும் தீர்வு பற்றியே 
  சிந்திக்கிறான்.
*தோல்வியடைபவன் பிரச்சினை பற்றியே சிந்திக்கிறான்.

*வெற்றியாளனின் சிந்தனைகள் வற்றுவதில்லை.
*தோல்வியடைபவன் முன்வைக்கும் நியாயங்கள் முடிவடைவதில்லை.

*வெற்றியாளன் ஏனையோருக்கு உதவுகிறான்.
*தோற்றுப் போபவன் மற்றவர்களிடமிருந்து உதவியை எதிர்பார்க்கிறான்.

பின் தங்கிய சிறுமியிடமிருந்து .....

மேசைமீது உருண்டோடும் பென்சிலை
"ஓடாமல் நில்" என அதட்டி நிறுத்தி
என்னுலகத்தைச் சரிசெய்தபின்
எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை
எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில்
உங்களால் முன்வைக்கப் படுகின்ற
வினாக்களைச் செவியுற்று
வெகுவாகக் குழம்புகிறேன்
கரும்பலகையின் இருண்மைக்குள்
கண்ணெறிந்து தோற்கிறேன்
நான்,
பின்தங்கிவிட்ட சிறுமியாயிற்றே!

பிடித்த கவிதைகள்

முகந்த் நடராஜனின் ஒரு இரவில் 21 சென்றி மீட்டர் மழை பெய்தது என்ற புத்தகத்திலிருந்து சிதறிய சில கவி நிழல்களை நிலா வெளியில் தெளிக்கிறேன்.  படித்துப் பாருங்களேன் கவிதைகள் உங்களுக்கும் பிடிக்கும்.
வீ குட்

கணக்குத் தேர்வு வைத்தேன்
மேல் வீட்டுச் சின்னப்பெண்ணுக்கு.
நூற்றுக்கு நூறு வாங்கிக் கொண்டு
சந்தோஷமாகப் போனாள்.
மறுநாள் நான் வரும் வரை காத்திருந்து
அந்த நூற்றுக்குப் பக்கத்தில்
பச்சை நிறத்தில் ஒரு வீ குட் போடச் சொல்லி
வாங்கிக் கொண்டாள்.
இது கூடத் தெரியாதா
என்று கேலி செய்தாள்
மறந்து போய் விட்டேன் என்றேன்.
விஜயலஷ்மி டீச்சரை நினைத்தபடி.


ஒரே ஒரு கனவுகூட மிஞ்சவில்லை. -சிறுகதை

நிலாப் பெண் இணையத் தளமானது பெண்களின் ஆளுமைகளை வரவேற்கிற பெண் எழுத்தாளர்களை  ஊக்குவிக்கும் ஒரு சிறந்த இணையத் தளமாகும் . அந்தப் பகுதியில் படித்துச் சுவைத்த மனதை உளுக்கிய ஒரு சிறுதையை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இம்முறை பல்கலைக்கழகத்தில் இருந்து நான் ஒரு தீர்மானத்தோடு தான் வீட்டுக்கு வந்திருந்தேன். செமஸ்டர் எக்ஸாமுக்கு நானும் ஸல்மாவும் எங்கள் வீட்டில் இருந்து படிக்கப் போகிறோம்.

இயக்குனர் மஜித் மஜிதியின் Children Of Heaven.

உலகத் திரைப்பட வரிசையில் ஈரானிய திரைப்படங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவையாக விளங்குகிறது. இரண்டாயிரமாம் ஆண்டு வரையில் சுமார் 118 விருதுகளை வென்றுகுவித்தது. இவ்வகையில் 1997 – ல் வெளியான மஜித் மஜிதி இயக்கிய Chidlren Of Heaven ஈரானியத் திரைப்படமானது உலகத் தரத்தில் பெரு வரவேற்பை பெற்றதோடு 1997 மான்ட்ரில் உலக திரைப்பட விழாவில் நான்கு விருதுகளை தனதாக்கிக் கொண்டது.

சிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )

இளைஞனே வா!
உன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்

எதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.

மரணப் பொழுதுகளில்…

மையித்து வீட்டுக்கு அல்லது கப்ருகளுக்குச் செல்லும் போது தான் மௌத்துடைய உணர்வே தோன்றுகின்றது.  உள்ளமும் உலக வாழ்வையே விரும்புகிறது. எப்போது பார்த்தாலும்  பணம் பணம் என்றே அழைகிறது. ‘ நீ முதலாவது உலகத்தைத் தேடு’  என்றே உள்ளம் அடிக்கடி சொல்கிறது.

காத்திருக்கும் வரை…

காத்திருக்கும் வரை - நம் பெயர் காற்றாகவே இருக்கட்டும் புறப்பட்டு விட்டால் புரிய வைப்போம் புயலென்று

அதிகாரம்.

குண்டூசியொன்றை வைத்திருப்பவன் யாருக்காவது குத்திப் பார்க்க ஆசைப்படுகிறான்

வாழ்வின் தத்துவங்கள்

நம் சிந்தனை சொல்கிறதா? வாழ்க்கை நிறந்தரமில்லை வாழும் போதே வாழக் கற்றுக் கொள் என்று!
குறைகள் நிறைந்த வாழ்வின் அடிப்படையை கண்டு கலங்கிப் போனால் நிறைகளை எங்கே போய்த் தேடுவது.