Skip to main content

எனக்குள்! நீ?



சற்று பயமாக இருக்கிறது
இருந்தும் உன்னையே தேடுகிறது இதயம்

புயல் வீசியும்
கோடை காய்த்தும்
மாரி கொட்டியும்
வாடாமல் இருக்கிறேன்
தினம் தோரும்
உன்னை எனக்குள் அடையாளம் காண்பதால்

அடுக்கி இடுக்கி வைத்த ஆசைகளை
ஒரே நாளிலல்ல
சில நிமடங்கள் தந்து விடு மூச்சு விடாமல் சொல்லி முடிக்கிறேன்...

உன் சிரிப்பிள் கொஞ்சம் பங்கேற்க
உன் பாதையில் கொஞ்சம் நடை பயில
உன் சிந்தனையில் கொஞ்சம் கலந்து கொள்ள
நினைத்ததையெல்லாம் பேச
பிடித்ததையெல்லாம் சொல்ல
சற்று தலை சாய்த்து உறங்க
உன்னையே தேடுகிறது இதயம்

கொஞ்சம் சிரித்து
மெல்ல அழுது
மௌனம் கலைத்து
என்னில் உன்னை ரசித்துப் பார்க்கிறேன்
உன்னை தாண்டி எதையும் என்னாள் யோசனை செய்ய
முடியாது!கொஞ்சம் நினைத்துக்கொள்

Comments

Popular posts from this blog

சிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )

இளைஞனே வா!
உன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்

எதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.

ராமர்களுக்கு இன்று ரத்தமில்லை

வைகாசி வந்தால்
முப்பத்து மூன்று
முடிகிறது அவளுக்கு

அவள் திருமணத்தை நிச்சயிக்க நினைத்த
நாளில் மட்டும்
சொர்க்கத்திற்கு
விடுமுறை போலும்


தன் பெயரைக்-
கல்யாணப் பத்திரிகையிலேனும்
அச்சில் பார்க்க
அவள் ஆசைப்பட்டாள்
ஆனால்-
அச்சு எந்திரங்களைப் போலவே
மனித எந்திரங்களுக்கும்
மனசு இல்லை

பாவம்
தன்
கண்ணீர் முத்துக்களைக்
கோக்கத்தான்
நொந்து நொந்து அவள்
நூலாய் இளைத்தாளோ?

மாலையிட மாட்டார்கள்
ஆனால் எல்லா வாலிபரும்
அவளை
பெண்பார்ப்பது போல்தான்
பார்க்கிறார்கள்

முன்னொரு பிராயத்தில்…
பூக்களின்
அணிவகுப்பு மரியாதையைத்
தன் கூந்தலில் ஏற்றுக் கொண்டாள்

இன்றும்தான் சூடுகிறாள்
இது
தான் விதவையல்ல என்று
வெளிக்காட்ட மட்டுந்தான்

முன்பெல்லாம்
கனவுகளுக்காகவே
உறங்கினாள்
இப்போதோ
உறக்கமே
ஒரு கனவாகி விட்டது

முன்பெல்லாம்…
எப்போதாவது
சட்டென்று தோன்றி
மறையும் அந்த ஜன்னல் மின்னல்

இப்போது
அசையாமல் உட்கார்ந்து
ஜன்னலுக்குத்
தானும் ஒரு
கம்பியானாள்

சிரிப்பு என்பது
அவளுக்கு
இதழில் இல்லை
ஞாபகத்தில் இருக்கிறது

மன்மதன்
அவன்மீது எய்த
மலர்க்கணைகள்
இன்று
சுள்ளிகளாகிவிட்டன.

முன்பெல்லாம்
ஆண்டாள் படிக்கச் சொன்ன
அப்பா
இன்று
பட்டினத்தாரும்
பரவாயில்லை என்கிறார்

அவள்
பெருமூச்சு வெப்பத்தில்
ம…

உனக்காக வாழ்ந்து பார், உன்னோடு வாழ்ந்து பார்

வாழ்வு எனும் அரும்பெரும் பொக்கிஷம் வற்றாத ஊற்றுப்போல தன்னையும் சூழலையும் பசுமையாக வைத்திருக்கும். வாழ்வு என்றுமே வசந்த காலமாய் பூத்துக் குலுங்காது. கோடை காலமும் இலையுதிர் பருவமும் வாழ்வை கடந்தே செல்கின்றன. வாழ்வை உயிர்ப்பிக்கவும் ரசிக்கவும் பலர் மறந்தே போகின்றனர். நிறையப்பேர் வாழ்வின் யதார்த்தங்களை புரிவதற்கு தயாரில்லை. சகலதும் துக்கமெனக் கருதி கண்ணீரோடு கழிப்போரும் உள்ளனர். உச்ச இன்பங்களுக்கான திறந்த களம் தான் வாழ்வு என்று நினைப்போரும் உள்ளனர்.