Skip to main content

Posts

Showing posts from 2010

இன்மை

ஒரு நம்பிக்கை முறியும் போது   உண்டாவதற்குப் பெயரே வெற்றிடம். 

எவ்வளவு நேரம் குப்புறக் கிடந்தாலும்   வேறு வழியின்றி நாமாகத்தான் எழுந்து வர வேண்டும் . நிரப்ப வேண்டும் வெற்றிடத்தை கையில் கிடைத்ததைஎல்லாம் கொண்டு
சாக்லேட்,பூட்ஸ்,கண்ணாடி, கருத்தடைச் சாதனங்கள்,மயிலிறகு கிழிக்கப்பட்ட கடித உறைகள், பிரசாதம்,எகே 47, பிரசுரங்கள் ஜோக்குகள்,சாராயம்,குருவி உன் கவிதை என் கவிதை ஏனையோர் கவிதை எதனால் நிறைக்க முடியுமோ எவ்வளவு நிறைக்க முடியுமோ நிறைய வேண்டும் வெற்றிடம் வெற்றிடத்துள் எது வேண்டுமானாலும் இருக்கலாம் நானிருக்க முடியாது…

மனுஷ்ய புத்திரன் (என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்)

நான் மகான் அல்ல!

எண்ணெய் இன்றி வரண்டு விரிந்து சிக்குண்டு கிடக்கும் மேனியையும்
அழுக்குகளில் அலும்பிச் சுருங்கிப் போன சட்டைக்குச் சொந்தக்காரியாவும்
எல்லாமே பரிகொடுத்த பட்சத்தில் எதையெதையோ நினைத்து ஏக்கத்திலும் தூக்கத்திலும் வாழ்நாளெனும் பொக்கி~த்தை சிறகொடிந்து கழித்துக் கொண்ருக்காள் ஒரு சின்னச் சிறுமி
எப்பொழுதும் அழும்பிப் போன அந்தத் தெரு முனைக்குச் சொந்தக் காரியாய்
அன்று ஏதோ எதர்ச்சியாக அழுது சிவந்த கண்ணங்களை கசக்கிக் கொண்டு என்னறுகே வந்து ஜம்பது ரூபா காசு கேட்டு என் கைகளைப் பிடித்தனைத்த போது
நான் என்ன செய்ய?
எந்தன் மூங்கில் காடே மொளனித்துப் போய் விட்டது மயிர்களெல்லாம் மெய்சிலிர்த்துக் கொண்டது இனந்தெரியா பிறவியில் காணமலேயே போய் விட்டேன்
உன்னை என்னூடு அழைத்துச் செல்லவே மனம் எத்தனித்தது
இருந்தும் என்னை மண்ணித்து விடு சின்னஞ் சிறியவளே!
சாய்வு நாக்காளியையே சொந்தமாக்கிக் கொண்ட என் தந்தைக்கும்
படுத்த பாயிலே பார்சவாயினால் அவதிப்படும் என் அம்மாக்கும்
பகல் சமைத்ததில் இரவிற்கும் மீதி வைத்துக் காத்திருக்கும் என் மனைவிற்கும்
என்னிடம் இருக்கும் நூரு ரூபாவினால் தான் ஊதியம் வழங்க வேண்டும்
என்னை மண்ணித்து விடு
உன் ப…

இனியதொரு விதி செய்வோம்...

காத்திருக்கும் வரை நம் பெயர் காற்றாகவே இருக்கட்டும்
புறப்பட்டு விட்டால்
புரிய வைப்போம் புயலென்று...
வானம் நம்மை மேகமாய்வார்த்துக் கொண்டாலும் மறுபடியும் மழையாய் பொழிந்திடுவோம்...
உறைக்குள் உறங்கும்வாளை விட ஊர்ந்து கொண்டிருக்கும்புழு கூட உயர்ந்தது தான்...
எத்தனை உயரமாக எழுந்துடுது அலைகள் கரைகளின் ஒற்றுமையை கண்டதும்அடங்கிப் போகுதல்லவா...
நெஞ்சுக்குள் தீப்பந்தத்துடன் நடந்தால்இருளே தெரியாது.....

காத்திருக்கும் வரை நம் பெயர் காற்றாக இருக்கட்டும்புறப்பட்டு விட்டால் புறிய வைப்போம்புயலென்று....

மழை

விண்ணுக்கும் மண்ணுக்கும்
மேகம் போடும் தண்ணீர் பாலம்

மேக வல்லள்கள் கோடை பூமிக்கு
விசிறி எறியும் வெள்ளித் தூரல்கள்

தாரகை மினுக்கிகளில்
உதிர்ந்து வரும் எச்சங்கள்

தேய் பிறை கொண்ட நிலாத் துண்டங்களின்
தீடீர் பிரவேசம்

விண்ணையும் மண்ணையும்
தொடுத்துப்பாடும் சங்கீத உலா..

மேகங்களுக்கிடையிலான
சமரில் மாய்ந்து போன சகாக்கள்......

துணிந்து செல்....

தோல்விகளையெல்லாம் வலிகளாக இதயத்தில் வாசிக்காதே
மீண்டுமோர் வெற்றிக்கான
விழுதாக மாற்றிக்கொள்.

சோதனைகளையெல்லாம்
வேதனைகளாக பிரகடனம் செய்யாதே
உன் சாதனைக்கான
சம்பிரதாயமாய் ஏற்றுக்கொள்

பிரிவுகளையெல்லாம்
தவிப்புக்கான சடங்காக பரைசாரதே
இறைவன் படைப்பிள்
அது நியதி என உணர்ந்து கொள்

இலக்கை நன்றே வகுத்துக் கொள்
தடைகளைத் தகர்த்தே நகர்ந்துசெல்......

எனக்குள்! நீ?

சற்று பயமாக இருக்கிறது இருந்தும் உன்னையே தேடுகிறது இதயம்
புயல் வீசியும் கோடை காய்த்தும் மாரி கொட்டியும் வாடாமல் இருக்கிறேன் தினம் தோரும் உன்னை எனக்குள் அடையாளம் காண்பதால்
அடுக்கி இடுக்கி வைத்த ஆசைகளை ஒரே நாளிலல்ல சில நிமடங்கள் தந்து விடு மூச்சு விடாமல் சொல்லி முடிக்கிறேன்...
உன் சிரிப்பிள் கொஞ்சம் பங்கேற்க உன் பாதையில் கொஞ்சம் நடை பயில உன் சிந்தனையில் கொஞ்சம் கலந்து கொள்ள நினைத்ததையெல்லாம் பேச பிடித்ததையெல்லாம் சொல்ல சற்று தலை சாய்த்து உறங்க உன்னையே தேடுகிறது இதயம்
கொஞ்சம் சிரித்து மெல்ல அழுது மௌனம் கலைத்து என்னில் உன்னை ரசித்துப் பார்க்கிறேன் உன்னை தாண்டி எதையும் என்னாள் யோசனை செய்ய முடியாது!கொஞ்சம் நினைத்துக்கொள்