Skip to main content

Posts

The Salesman

Emad, Rana தம்பதியினர் ஏற்கனவே வசித்துக்கொண்டிருந்த Apartment இடியும் அபாயம் காரணமாக அதிலுள்ளவர்கள் வெளியேற்றப்பட விரைவாக வேறு இடம் தேட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். இருவரும் தயாரிப்பில் இருக்கும் Arthur Miller இன் The Death of Salesman நாடகத்தில் முக்கியக் காதாப்பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நிலையில் நண்பர் Babak அவர்களுக்கான ஒரு இடத்தை தேடிக் கொடுக்கிறான். புது இடத்துக்கு குடிபெயரும் அவர்களது வாழ்க்கையில் எதிர்பாராது ஏற்படும் பிரச்சினையால் இருவருக்கும் இடையில் ஏற்படும் மாற்றங்கள், அதற்கான தீர்வகள் தான் Salesman.
அஷ்கர் பர்ஹாதியினுடைய படங்களில் கதாப்பாத்திரம் பார்வையாளனுக்கு நெருக்கமானதாக இருக்கும். ஒரு பிரச்சினைக்குப் பின்னால் அன்றாட வாழ்க்கையைக் கடந்து செல்லும் குறிப்பிட்ட பாத்திரத்தின் உளவியலை கச்சிதமாக Visual ல் கொண்டுவந்திருப்பார். Fire wok Wednesday, About ally, The past, Separation  இப்போது The Salesman.

குறிப்பிட்ட பிரச்சினையை அன்றாட செயற்பாடுகளுக்கு மத்தியில் சாதாரண மனிதன் எப்படி எதிர்கொள்வான் அதன் எதிர்வினை எப்படியாக இருக்கும் என்பதெல்லாம் கச்சிதமாகக்…
Recent posts

Operation Mekong

தெற்காசியாவின் Golden Triangle என்று அழைக்கப்படும் மீகொங் நதிப்பகுதியானது மியன்மார், தாய்லாந்து எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதோடு உலகின் அதிகளவு போதைமருந்து தயாரிக்கப்படும் இடமாகவும் குறிக்கப்படுகிறது.
2011 அக்டோபர் 5, காலையில் மீகொங் நதியைக் கடந்துகொண்டிருந்த இரண்டு சீன வர்த்தகக் கப்பல்கள் மீது கொடூரமான துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்படுவதோடு கப்பலில் இருந்த 13 பேரும் சுட்டுக் கொலை செய்யப்படுகின்றனர். குறித்த படுகொலைக்குக் காரணமாக அமைந்த நவ் கார் எனும் போதை மருந்துக் கடத்தல் மன்னனையும், அவனுடைய சகாகக்கலையும், படுகொலைக்கான உண்மையான காரணத்தையும் தேடிப்பயணப்படுவதே இந்த Operation Mekong. 
உண்மைச் சம்பவம், படுகொலையின் பின்னி என்றதும் ஏதோ டிடெக்டிவ் டைப்பான கதையென்று நினைத்துவிட்டேன். இரண்டரை மணித்தியாளமும் படு வேகமான ஆக்‌ஷன் த்ரில்லர். 2016ல் வெளியான படங்களில் சீனாவின் சிறந்த வசூல் படங்களில் முன்னனியில் இருக்கிறது

The Wind will Carry Us

ஈரானியத் திரையுலகில் முக்கியமான ஒருவர் அப்பாஸ் கிராஸ்தமி. சாதாரண மனிதர்களுடைய  வாழ்வியல் அம்சங்களை எதார்த்தமாகத் திரையில்  கொண்டுவருவதே இவரது படைப்புக்களின் வெற்றி. the wind will carry us பெயரே கவிதையின் மயக்கத்தை தருகிறதில்லையா, Forough Farrokhzad என்கிற ஈரானிய பெண் கவிஞரின் கவிதையின் தலைப்பே படத்தின் பெயரும் கூட. வெனீஸ் திரைப்பட விருது உட்பட பல விருதுகளை வென்று குவித்தித்ததோடு மட்டுமன்றி ஒரு தலைசிறந்த படைப்பாக இன்றைக்கும் தனித்து நிற்கிறது. 
இறப்பின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும், வயதான மூதாட்டி ஒருத்தியின் மரணத்தை எதிர்பார்த்த படி, அதன் பின்னரான சடங்குகளை ஆவணப்படுத்துவதற்காக பத்திரிகையாளனான பெஸாட்டும் அவனது நண்பர்கள் இருவரும்,  பொரியாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு குர்திஷ் கிராமமொன்றிற்கு வருகை தருகின்றனர். அதன் பின்னரான கதையும், சம்பவங்களின் கோர்வைகளும் தொடர்ச்சியாக நம்மை கதைக்குள்ளே உள்வாங்கி ஒரு கதாப்பாத்திரம் போல உள்ளே நுழைத்துவிடும். 
தனியாக கிணறு தோண்டும் ஒரு வாழிபன், உணவுக்காக காசு வாங்காமல் பால் கறந்து கொடுக்கும் ஒரு பெண், தேநீர் கடை நடத்தும் ஒரு பெண், இடங்களைச்…

Montage / 2013 / Korean

நாம் நினைப்பது போல எல்லா விஷயங்களும் Perfect ஆக நடந்து முடிவதில்லை. எதிர்பாராத சில பொழுதுகள் துரோகம்கொண்ட, அடர்ந்த துயரமானதாக முடிந்துவிடும். அப்படியொரு பொழுதில் கடத்தப்பட்ட தனது மகளை மீட்க முடியாமல் கொலை செய்யப்பட்டு 15 வருடங்களின் பின்னும் கொலையாளியை தேடும் ஒரு தாய். இந்த மைய்யத்தை வைத்துக் கொண்டு படு வேகமாக நகரும் திரைக்கதை. அதற்கு ஏற்றது போல பின்னனி இசை. அசத்தலான நடிகர்கள், எனப் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். 

நான் இதுவரை பார்த்த  அதிக கொரியப் படங்கள் Revenge ஜார்னர் தான். கொரியர்கள் மட்டும் இந்தக் கதை சொல்லும் விதத்தில் வித்தைக் காரர்களாக இருக்கிறார்கள். கதை என்று ஒரு வஸ்த்துவை வைத்துப் பார்த்தால் எதுவுமே கிடையாது. எல்லாமே சொல்லும் விதத்தில் தான் வித்தியாசம் காட்டுவார்கள்.  Montage காட்சிகள், அதாவது வரிசையற்ற காட்சிகளின் தொகுப்பே முழுப்படமும். ஆரம்பத்திலிருந்து இறுதிவரை Nonlinear முறையில் நகரும் திரைக்கதை தான் படத்தின் சுவாரஷ்யம். 

நிச்சயமற்ற போதை

இப்பொழுது போல நினைவிருக்கு, மச்சான் அவள தான் முடிப்பேன். அவ இல்லாத வாழ்க்கைய நினைச்சுக் கூட பார்க்க முடியல்ல, அவ தாண்டா எனக்கு எல்லாமே என்று நண்பனொருவன் சொல்லிச் சொல்லி அழுதது. இரண்டு வருடங்களாக இப்படியே உருகி உருகிக் காதலித்தவனுக்கு வேறு ஒரு பெண்கூட கல்யாணம் நிச்சயிக்கும் வரை தெரியாது இதே போல உருகி உருகி இன்னொரு பெண்னையும் காதலிச்சிருக்கான் என்று. வாழ்க்கை நிச்சயமற்ற போதை, இன்றைக்கோ நாளையோ அல்லது இருபது, நாட்பது வருஷம் கழிச்சோ என்றோ ஒரு நாள் முடிந்து போகக் கூடியது. ஆனால் துரோகங்கள் என்றைக்கும் தீர்ந்து, முடிந்து போவதில்லை. இனம் புரியா ரூபத்தில் நமக்குப் பின்னால் வரக்கூடியவர்களையும் சேர்த்தே ருசித்துக் கொள்ளும். 
ஜந்து வருடங்கள் இருக்கும் வெற்றி FM என்று நினைக்கிறேன். அதில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நேயர்கள் தங்களுடைய கவலைகள் எல்லாம் கொட்டித்தீர்த்துக் கொண்டிருந்தனர். ஒரு பெண் சொல்கிறாள் உண்மையில் சொல்வதற்குக் கூட அவளுக்கு வார்த்தை வரவில்லை. அவ்வளவும் அழுகையே! தன்னை நான்கு வருடங்களாக ஒருவன் காதலித்து விட்டு அவன் சொல்லாமலே வசதியான ஒரு பெண்ணை திருமணம் முடித்துவிட்டதா…

DOWNFALL - சர்வாதிகாரத்தின் சரிவு

என்ன தான் தலைகீழாக நின்று ஆட்டம் போட்டாலும் நம் உடலைச் சுமந்திருக்கும் ஆத்மா ஒரு நாள், ஒரு சமயம், அளவிட முடியாத சில நொடிகளில் நம்மைவிட்டுப் போகத்தான் போகிறது. இரண்டாம் உலகப்போரில் அதிக உயிர்களை பலிகொண்டு, ஜரோப்பாவை ஆட்டம் காண  வைத்ததில் மிகப்பெரிய பங்கு ஜேர்மனுடையது. முதலாம் உலகப் போரில் மிக மோசமான வீழ்ச்சி கண்ட ஜேர்மன்  ஹிட்லரின் வருகைக்குப் பின் அபாரமான வளர்ச்சி கண்டு இரண்டாம் உலகப் போரின் பயங்கரமான வேட்டைக்காரனாக உருவெடுத்து மாண்டு போனது. 
ஆரியர்கள் தான் உலகத்தை ஆளவும், தலைமை வகிக்கவும் தகுதிபடைத்தவர்கள். ஏனைய மனிதப் பிறவியெல்லாம் அவர்களின் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும் என்பது தான் ஹிட்லரின் எண்ணம். அது போக சோவித், கம்யூனிசம் என்கிறதையெல்லாம் காட்டுத்தனமாக வெறுத்தார். பிரான்சை நாஜிகள் வெற்றி கொண்ட பிறகு பிரிட்டன் பக்கம் திரும்பினார், ஆனால் அது எதிர்பார்த்தபடி இலகுவான ஒன்றாக இருக்கவில்லை, படிப்படியாக தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்த சமயம், 1941 ஜுன் 22 ஹிட்லர் சோவியத் மீதும் போரைத் தொடக்கி வைத்தார். ஆரம்பகட்டங்களில் சோவியத் சரிந்து கொண்டு போனாலும் ஸ்டாலினுடனான மக்களின் ஆபார ஒத்துழைப…

ida - வலியின் அனுபவம்

இரண்டாம் உலகப் போர் ஆரம்ப கட்டத்திலேயே யூத இன அழிப்பை ஹிட்லர் ஆரம்பித்துவிட்டிருந்தான். ஜந்திலிருந்து ஆறு மில்லியன் வரையான யூதர்கள் கூட்டம் கூட்டமாக கொத்துக் கொத்தாக கொன்று ஒழிக்கப்பட்டனர். 1939 இன் கணக்கெடுப்பின் படி இரண்டாம் உலகப்போரின் போது உலக சனத்தொகையில் மூன்று வீதத்தினர் சுமார், 60 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இத்தனை கொடூரமான போர், இன அழிப்பை ஏற்படுத்தியதில், சதாரண மக்களை கொலைகாரர்களாக மாற்றியதில் ஹிட்லரின் பங்கு அலாதியானது.  அதிகாரத்தை யார் தக்கவைத்துக் கொள்கிறார்கள், நீ பெரியவனா நான் பெரியவனா? யார் அதிகம் நிலப்பரப்புக்களைக் கைப்பற்றுகிறார்கள் என்கிற அரசுகளுக்கிடையிலான அதிகார வர்க்க மோதலில் பகடையாகப் பழியாகியது என்னமோ அப்பாவி மக்களே!